12 ராசிக்கும் ராஜ யோகம்

வாழ்க்கையில் யோகம் வேண்டும். அந்த யோகம் சரியான பருவத்தில் வரவேண்டும். பால்ய வயதில் துவங்கி, பருவ வயதுவரை கல்விக்கான யோகம் வந்தால், அந்த ஜாதகருக்கு பலன் உண்டு. நன்கு படிப்பார், பட்டம் மேற்கொள்வார். அதற்கு தகுந்த பணியிடங்கள் அமைந்து வாழ்க்கையில் உயர்நிலை பெறலாம். அதே கல்விக்கான யோகம் பால்யத்தில் வராமல் அறுபது வயதில் வந்தால், நான் கரஸ்பான்டன்ஸ்ல டிகிரி படிக்கப் போறேன்னு சொன்னால், படித்தால், அந்த கல்வியால் அந்த ஜாதகருக்கு கிடைக்கும் பலன் என்ன?