வெற்றிக்கான முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம்

எனக்கு தெரிந்த ஒருவர் தன்னைத்தானே அசிங்கமாக திட்டி… இன்னும் என்னடா தூங்குறே என்று செல்போனில் ரெக்காடிங் செய்து, அதையே அலார ஒலியாக வைத்திருந்தார். எத்தனை முட்டாள்தனமான செயல் அது. தன்மதிப்பு இல்லாமல் தன்னைத்தானே திட்டிக் கொள்வது, அதுவும் அதிகாலை தூங்கி எழும்போதே கேட்பது என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று.
படுக்கையில் இருந்து எழுந்தவுடன் நிதானமாக உங்கள் செயல்களை துவங்குங்கள். தளர்வாக இருந்த உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கு நேரம் கொடுங்கள். எடுத்த எடுப்பில் நூறு கிலோ மீட்டர் வேகத்திற்கு பைக்கை விரட்டுவது போல் உங்களை நீங்களே விரட்டாதீர்கள்.