துலாம் விருச்சிக ராசி விசாக நட்சத்திர பலன்கள்

அறிவுத் திறன் கொண்டவர்கள். தீவிர தெய்வ பக்தி கொண்டவர்கள். வாழ்க்கையில் போலித்தனம் இருக்காது. உண்மையாக இருப்பார்கள். உண்மையாக நடப்பார்கள். பழைய சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடோ நாட்டமோ இருக்காது. காலத்திற்கேற்ப நவநாகரீக மோகத்தில் திளைத்திருப்பார்கள். ஆனால் அதிபுத்திசாலிகள். பிறருக்கு அளவுக்கதிகமாக மரியாதையைக் கொடுப்பார்கள். அடங்கிப் போவதும் அடிமையாக இருப்பதும் தற்கொலைக்கு சமம் என்று நினைப்பவர்கள். ஆன்மிகவாதிகளாக இருந்தாலும் அனைத்து மதங்களையும் சமமாக நினைப்பவர்கள்.