அனுஷம் நட்சத்திரம் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் குண நலன்கள் மற்றும் பலன்கள்

அசுவினி முதல் எண்ண வரும் நட்சத்திர வரிசையில் அனுஷம் பதினேழாவது நட்சத்திரம். கடகத்தில் அமைந்த பூசத்திற்கு அடுத்த படியாக, விருச்சிகத்தில் அமைந்த அனுஷ நட்சத்திரம் சனியின் நட்சத்திரம். பிடிவாதம், கர்வம், ஏன் எளிமையும், வலிமையும் நிறைந்த நட்சத்திரம். இது ஒரு ஆண் நட்சத்திரம். கடின உழைப்பாளிகள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிரந்தர நண்பர்கள், நிரந்தர உறவுகள் அமைவதில்லை. தங்கள் இஷ்டப்படியே நடப்பதால் அடுத்தவர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதில்லை.