More

  Shut up. Shall We?

  A Centenary Plus, Retold 

  Homeஜோதிடம்சனிப்பெயர்ச்சி 2023 12ராசிகளுக்கும் எப்படி இருக்கும்..
  spot_img

  சினிமா...

  Featured Articles

  To Read in Indian languages…

  சனிப்பெயர்ச்சி 2023 12ராசிகளுக்கும் எப்படி இருக்கும்..

  2023ஆம் ஆண்டு தை மாதம் 3ஆம் நாளான ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும், 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

  சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை வருடங்கள் அளிக்க உள்ளார்.

  சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023

  மேஷம் – 🐐

  93 % லாபச் சனி: நற்பலன்கள் கிடைக்கும் சனிப்பெயர்ச்சி

  இது வரை 10 மிடச் சனியாக படாத பாடுபடுத்தி வந்த சனிபகவான் தற்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் உங்களுக்கு பொற்காலம்
  குறிப்பாக தொழில் வழி பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்.
  எவ்வளவு பெரிய அளவில் தோஷங்கள் உள்ள திருமணம் தாமதமானவர்களுக்கும் திருமணம் நடக்கும்
  வயதில் மூத்தவர்வர்கள் ஆதரவு கிடைக்கும் ஆண்களுக்கு
  பெண்கள் உதவி கிடைக்கும்
  பெண்களுக்கு ஆண்கள் உதவி கிடைக்கும் திருமணம் கைகூடும்.

  பணம் பல வழிகளில் வரும்
  குழந்தை பாக்கியம் கிடைக்கும் அல்லது பெற்ற குழந்தைகளால் பெருமை கிடைக்கும்.
  பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்
  நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.
  நோய்கள் காணாமல் போகும்
  வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளிநாட்டு யோகமும், தொடர்பும் ஏற்படும் அதனால் மிகப் பெரிய ஆதாயம் கிடைக்கும்.
  உடல் தேஜஸ் கிடைக்கும்,
  உடல் நிறம் மின்னும்

  வணங்க வேண்டிய தெய்வம்
  திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர்

  தெய்வங்களையும் நவகிரகங்களையும் குருவையும் நம்பி போற்றுவர்களுக்கு, இது உன்னதமான காலம்
  பயன் படுத்தி கொள்ள வேண்டும் இந்த பொற் காலத்தை

  ரிஷபம் : 🐂

  75% கர்மச் சனி தசமச் சனி

  75 சதவீதம் நல்ல பலன்கள் கிடைக்கும் சனிப் பெயர்ச்சி
  பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும்
  அந்த வழியாக பார்த்தால் தசமச் சனி கர்மச் சனி
  இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு யோகமே
  இது வரை பாக்கியச் சனியால் எந்த பிரயோஜனமும் இல்லை வேலை வாய்ப்பை இழந்தது தான் மிச்சம் உங்களுக்கு இது வரை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

  வீடு கட்டலாம், இடம் வாங்க உடல் நலம் சீராகும் மனைவி மற்றும் நண்பர்கள் வழி விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது உங்களுக்கு பல வெற்றிகள் தரும்.

  தந்தையிடம் நல்ல பெயர் வாங்க முடியவில்லை. இனி உங்களுக்கு கவலை வேண்டாம். தந்தை வழி நல்ல பெயர் கிடைக்கும் பெரியவங்க மூத்தவர்கள் ஒருவருக்கு கண்டம் உண்டாகும். திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற சுபகாரியங்கள் உண்டு.

  ஏதோ ஒரு வகையில் நல்ல வேலை கிடைக்கும் ஆனால் உங்களுக்கு திருப்தி இல்லை என்று தான் சொல்வீர்கள்.

  உங்களுக்கு வேறு வழியில்லை.

  வணங்க வேண்டிய தெய்வம்
  பழமுதிர் சோலை சுப்பிரமணிய சுவாமி அல்லது வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர். கடின உழைப்பு இந்த முறை வேண்டும். 100 சதவீதம் டெவலப் இருக்கும்
  இந்த முறை மேல் அதிகாரிகளின் பேச்சுக்குக் கட்டுப்பட்டால், மிகப் பெரிய எதிர்காலம் கனியும், இது நூறு சதவிகிதம் உண்மை

  மிதுனம் – 👫

  80% பாக்கியச் சனி: நல்ல பலன்கள் கிடைக்கும்.

  இதற்கு மேல் எங்களுக்கு என்ன பெரிய சோதனை வந்துவிடப் போகிறது. தொழில் வழி பூஜ்யம் ஆக்கப் பட்டோம்.

  எங்கள் மீது வீண் பழி சுமத்தினார்கள். செல்வம் திருட்டு போனது. எதிரி தொல்லை அதிகம் ஏற்பட்டது
  போலிஸ் ஸ்டேஷன் வரை போயாச்சு. பெரியவங்க கை கழுவி விட்டார்கள். அசுப நிகழ்ச்சிகளில் பங்கு எடுத்தாச்சு. குடும்ப பிரச்சினை கூடியது இனியாவது எங்களுக்கு நல்ல காலம் பிறக்குமா?

  நிச்சயமாக நல்ல காலம் தான்
  முன்பு இருந்த தொழில் சிரமங்கள் இனி இருக்காது
  வழக்கு வம்புகள் குறையும் பிறகு காணாமல் போகும்
  பெரிய அளவில் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும்
  தெய்வங்கள் ஆசி கிடைக்கும்
  திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  குடும்ப ஒற்றுமை உண்டாகும்
  குறிப்பாக வெளி நாட்டு வேலை முயற்சி செய்பவர்கள் அதிகம் வெற்றி பெறுவார்கள்
  பணம் ஓரளவு கையில் புரளும் காலம் இழுத்து மூடிய தொழில் மீண்டும் வெற்றி நடை போடும் காலம்.

  வணங்க வேண்டிய தெய்வம்
  புதன் கிழமை சிக்கல் சிங்காரவேலர் வழிபாடு செய்து சிறப்பு.

  யாராவது ஒருவர் உங்களுக்கு தொடர்ந்து உதவும் காலம் இப்போது

  கடகம் -🦀

  65 % அட்டமச் சனி: நற்பலன்கள் கிடைக்கும்.

  இது வரை உறவினர்கள் பகை நண்பர்கள் உடன் பிரச்சினை பார்ட்னர் சீப் கூட்டுத் தொழில் பிரிவுகள் கணவன் மனைவி பிரிவு இப்படி  கசப்பான சம்பவங்களை உங்களால் மறக்க முடியாத நிறைய அனுபவங்கள். தந்தை வர்க்கம் பகை உடல் நலம் தேற மருத்துவச் செலவுகள்
  உடல் சோர்வு வெளி நாட்டு அல்லது வெளி மாவட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளூர்களில்  இருந்தால் பல்வேறு சிரமங்கள் இருந்தது.

  இனி அஷ்டச் சனி என்கிறார்கள் அது இன்னும் கொடுமையிலும் கொடுமை என்கிறார்கள் என்று பயம் வேண்டாம்.

  எட்டாம் இடத்தில் தனது சொந்த வீட்டில் மூலத் திரிகோண வீட்டில் ஆட்சி செய்கிறார் சனி இரண்டே கால் வருடங்கள் மன மகிழ்ச்சி உடன் இருப்பார் அப்புறம் எப்படி உங்களுக்கு தீமை செய்வார் கவலை வேண்டாம்
  எல்லாம் நல்லதுக்கு தான்
  ஒரு சில நல்ல அனுபவங்கள் மட்டுமே உங்களுக்கு தரப் போகிறார்.

  குரு பார்வை செய்வதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் உள்ளது

  குடும்ப பிரச்சினை வந்தாலும் அதை புத்திசாலித்தனமான உங்கள் அறிவால் சரி செய்யும் யோகத்தை சனி பகவான் உங்களுக்குத் தருவார்.
  பணம் சில நேரங்களில் பற்றாக் குறை வந்தாலும் உடனடியாக உங்களுக்கு உதவும் நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்.

  புதிய தொழில் மட்டும் தயவு செய்து யாரும் ஆரம்பிக்க வேண்டாம். வெளிநாட்டு முயற்சி வேண்டாம். யாரையும் குறை சொல்ல வேண்டாம்.
  யாரையும் குற்றம் கண்டு பிடிக்க வேண்டாம்.
  அடுத்தவர் வீட்டு பிரச்சினை பற்றி பேச வேண்டாம்.
  வாகனங்களில் செல்லும் போது வேகத்தைக் குறைத்து
  சற்று தெய்வ பக்தி உடன்
  சற்று சுறுசுறுப்பாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த இரண்டேகால் வருடத்தில் வெற்றியாளர் தான்.

  வணங்க வேண்டிய தெய்வம்
  தெப்பங்கள் உள்ள சுப்பிரமணிய சுவாமி வழிபாடு திங்கள் கிழமை

  புதிய நம்பிக்கை புதிய உற்சாகம் பிறக்கும் .

  🔯சிம்மம் -🦁
  *70% கண்டச் சனி:

  70-சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும்*

  இது வரை வெற்றிச் சனியை அனுபவித்து வந்த நீங்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு பெற்று இருப்பீர்கள்.
  நல்ல ஆரோக்கியம் கிடைத்து இருக்கும், என்றாலும் முழுமையாக சனி பகவான் உங்களுக்கு நன்மைகளை வழங்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை, என்றாலும் ஒரளவு நிமிர்ந்து நிற்கும் வெற்றி கிடைத்தது.

  இப்போது கண்டம் சனி
  சனி பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தில் அமர்ந்து நன்மைகள் செய்வார்.
  வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் யோகம் உங்களுக்கு அதிகரித்து உள்ளது. அப்படிச் சென்றால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
  சித்திரை மாதத்திற்கு பிறகு திருமணம் போன்ற சுபகாரியங்கள் உண்டு.
  வெளி நாட்டு வாழ்க்கை வெளி ஊர் வாழ்க்கையில்
  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  வெளி ஊர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றால் அப்போது நன்மைகள் நாலா பக்கமும் கிடைக்கும்.

  ஒரு வேளை நீங்கள் உள்ளூரில் இருந்தால்
  கணவன் மனைவி உறவில் சிறு சிறு விரிசல் ஏற்பட்டு கசப்புகள் காணப்படும். வாய்ப்பு உள்ளது அதற்காக விட்டு கொடுத்து கெட்டிக்காரர் ஆனால் உங்களுக்கு வாழ்க்கை சொர்க்கம் தான்
  இந்த கால கட்டத்தில் பார்ட்னர் சீப் கூட்டுத் தொழில் கூடாது

  புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

  தந்தை வழி அனுசரிப்பு. மிகவும் சிறப்பான பலன்கள் தரும்.

  வணங்க வேண்டிய தெய்வம்
  பழநி தண்டாயுதபாணி சுவாமி
  ஞாயிற்றுக் கிழமை
  அல்லது தாயார்களோடு இல்லாத முருகன் வழிபாடு செய்வது சிறப்பு.

  வெளி இடங்களில் வெளி நாடுகளில் வெற்றி பிரமாண்டமாக இருக்கும்.

  🔯கன்னி -🧛‍♀️

  95 %  வெற்றிச் சனி:

  95%-நற்பலன்கள் கிடைக்கும்

  இது வரை அவமானச் சனி அபவாதச் சனியால் பல இன்னல்கள் தாண்டி நல்ல நேரம் கதவைத் தட்டி வருகிறது
  இது வரை பதவியில் ஊசலாட்டம் மனதில் நிறைய பயம் பிள்ளைகள் வழி மன அழுத்தம் மனைவி கணவன் வழி வருத்தம் தரும். நிகழ்ச்சிகள் நம்மை நம்பியவர்கள் ஏமாற்றியது நினைத்த லாபம் கிடைக்காதது என பல இன்னல்கள் தாண்டி நல்ல நேரம் இனி 6 மிடச் சனி உங்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி
  எவ்வளவு பெரிய வழக்காக இருக்கலாம் அதிலும் வெற்றி
  எவ்வளவு பெரிய எதிரியாகும் இருக்கலாம் நீங்களே எதிர்பாராத மாபெரும் வெற்றி
  இப்படி நீங்கள் இரண்டே கால் வருடங்கள் நிறைய வெற்றி மாலைகளை புகழ் மாலைகளை சுமக்கும் காலம்
  பெரிய நோய் கூட காணாமல் போகும் ஆயுள் கூடும்.
  நல்ல தூக்கம் வரும்.
  வீடு வாகனம் யோகம் உண்டாகும்
  உங்கள் இளைய சகோதரர் சகோதரிகள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
  நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள்

  வணங்க வேண்டிய தெய்வம்
  புதன் கிழமை திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர்.

  அதே போல உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உங்களுக்கு இது வரை சிம்ம சொப்பனமாக இருந்த எதிரி காணாமல் போகப் போகிறார்.
  பிறகு என்ன நீங்கள் தனிக்காட்டு ராஜா தான்.

  துலாம் -🏹
  75 % பஞ்சமச் சனி:

  -75-சதவிகித நற்பலன்கள் கிடைக்கும் சனிப் பெயர்ச்சி.

  இது வரை
  நான்காம் இடச் சனியால் வாழ்க்கையில் அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கிறது
  வீடு பிரச்சினை
  வாகனம் பிரச்சினை
  செய்யும் தொழில் பிரச்சினை
  உடல் நலம் பிரச்சினை
  தாயார்க்கு பிரச்சினை
  போதும் சாமி போதும் என்னை இதற்கு மேல் சோதிக்க வேண்டாம்.
  என்று உங்களை தவிக்க விட்ட காலங்களில் இருந்து ஓரளவு நிம்மதி பெருமூச்சு ஏற்படுத்தி நிம்மதி தரும் சனிப் பெயர்ச்சி வந்துள்ளது.

  கவலை வேண்டாம் இனி
  வீடு வாகனம் யோகம் உண்டாகும்.
  உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும்.
  தாயார்க்கு உள்ள மருந்து மாத்திரைகள் குறையும் புதிய நோய் வராது.
  அதே சமயம் நீங்கள் வெற்றி பெற்று வாழப் போவதை மட்டுமே நினைக்க வேண்டும்
  தேவையற்ற மன குழப்பம் வரக் கூடாது.
  இது உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கவனம்
  அதாவது எப்போது மனம் சோர்வடைகிறதோ அப்போது நீங்கள் உங்கள் குல தெய்வத்தை நினைத்து பார்க்க உடனடியாக மீண்டும் உற்சாகம் பிறக்கும்
  வெற்றிகள் கிடைக்கும்
  ஆக அடிக்கடி குல தெய்வ கோயிலுக்கு சென்று வர வேண்டும். சித்திரை மாதத்திற்கு பிறகு திருமணம் போன்ற சுபகாரியங்கள் உண்டு.

  வணங்க வேண்டிய தெய்வம்
  வெள்ளிக் கிழமை
  பழமுதிர் சோலை சுப்பிரமணிய சுவாமி அல்லது எந்த ஊரிலும் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் வெள்ளிக் கிழமை.

  பிள்ளைகள் வழி சற்று தேவை அற்ற கவலை வரும்
  நீங்கள் பிள்ளைகள் வழி பொறுப்பை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு விட்டு வேறு வேலைகளைக் கவனிக்க மள மள வென்று மலைகளை வென்று வெற்றி மாலை கண்டு வாழும் நல்ல காலம்.

  விருச்சிகம் – 🦂

  70 % அர்த்தாஸ்டமச் சனி. 70 சதவிகித நல்ல பலன்கள் கிடைக்கும்.

  இது வரை சகாயச் சனி என்னும் அற்புதச் சனி உங்கள் உடன் உற்ற துணைவனாக இருந்து.
  உங்கள் வெற்றிக்கு வித்திட்டது உண்மை
  எப்படியோ கடந்த இரண்டரை வருடங்களில் தைரியம் நிறைய இருந்தது
  ஏதோ ஒரு வகையில்
  தொழில் வழி சிறப்பு
  வழக்கு வழி வெற்றி
  உடல் ஆரோக்கியம் இது வரை கிடைத்தது.
  நமக்கு யாரென்று தெரியாதவர்கள் கூட உதவி செய்து நம்மைக் காப்பாற்றினார்கள்
  போட்டி பந்தயங்களில் வெற்றி தொடர்ந்து கிடைத்தது
  பிள்ளைகளால் பெருமை கிடைத்தது.
  கௌரவம் அந்தஸ்து உயர்ந்தது. ஆரோக்கியம் ஆயுள் கூடியது. தந்தை வழி உதவிகள் கிடைத்தது. முகத்தில் தேஜஸ் கிடைத்தது

  இனி நான்காம் இடச் சனியால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
  உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் ஆட்சி பெற்று
  உங்களுக்கு உதவுவார் சனி பகவான் எனவே கவலை வேண்டாம். காரணம்
  இங்கு சச யோகம் வருகிறது

  என்வே தைரியமாக இருங்கள்
  எனது ஆலோசனை
  நீங்கள் உடனடியாக வீடு ஒன்றை கட்ட முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது பிரச்சினைகளும் வராது
  வீட்டை பொறுமையாகக் கட்ட வேண்டும்
  ஜோதிடத்தில் அர்த்தாஸ்டமச் சனிக்கு ஒரு வரி பலன் சொல்லி இருக்கிறார்கள்
  வீட்டைக் கட்டு இல்லை என்றால் உனக்காக ஒரு ஆஸ்பத்திரி கட்டு
  என்று இரண்டில் நீங்கள் எதைக் கட்டப் போகிறீர்கள் வீடு தானே புதிய தொழில் புதிய வாகனம் வேண்டாம்
  திருமணம் போன்ற சுபகாரியங்கள் உண்டு

  வணங்க வேண்டிய தெய்வம் எந்த ஊரிலும் நீர் நிலைகள் உள்ள சுப்பிரமணிய சுவாமி வழிபாடு செவ்வாய் கிழமை
  அல்லது திருப்பரங்குன்றம்

  எப்படி இருந்தாலும் சச யோகம் பெறும் சனி பகவான் உங்களுக்கு கையைக் கடிக்கும் படி எந்த பிரச்சனையும் செய்யமாட்டார் இது உறுதி.

  தனுசு -ராசி: 🏹

  93 % சகாயச் சனி

  93-சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

  இது வரை 71/2 சனிக்குப் பதிலாக உங்களுக்கு மட்டும் 81/2 ஆண்டுகள் சனி பகவான் படாத பாடு படுத்தி உள்ளார்
  நான் கண் கண்ட உண்மை
  கண்களில் கண்ணீர் வர வைத்த சம்பவங்கள் ஏராளம்
  குடும்பத்தை விட்டு ஓடி விடுவோமா என்று நினைக்கும் அளவிற்கு துன்பம், ஆஸ்பத்திரி செலவுகள் ஒன்றா இரண்டா
  பணப் புழக்கம் கொஞ்சம் கூட இல்லை. தொழில் முழுவதும் அடி வாங்கி விட்டது. இனி என்ன செய்ய போகிறேன் என்று தேம்பி நிற்கும் இந்த வேளையில் நல்ல நேரம் ஆரம்பம்.

  இப்போது சுடப்பட்ட பொன் நீங்கள் தக தக வென மின்னுவீர்கள் ஜொலிக்கும் காலம்.

  நாம் பார்க்கும் நபர்கள் எல்லாம் நமக்கு உதவி/ செய்யும் நல்ல நேரம்
  அரசு வேலை சுய தொழில்
  தனியார் நிறுவன வேலை அனைத்திலும் உங்களுக்கு சாதகமாக வெற்றி கிடைக்கும் பொற்காலம். ஆஸ்பத்திரி செலவு இனி இல்லை
  வழக்குகள் இனி இல்லை
  வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இடப் பிரச்சினை தீரும். புதிய சொத்து யோகங்கள் உள்ளது. வீடு வாகனம் புதியவை அமையும்
  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

  வணங்க வேண்டிய தெய்வம்
  ஒரு முறை திருச்செந்தூர் வியாழக்கிழமை சென்று வணங்கி வர இரட்டை யோகம் கிடைக்கும்.
  தொட்டது துலங்கும், பார்ப்பது பொன்னாகும்.

  மகரம் – 🐴

  73 % குடும்பச் சனி பாதச் சனி

  73 % சதவீதம் நற்பலன்கள் கிடைக்கும்.
  பொதுவாகவே மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் செல்லப் பிள்ளைகளே என்றாலும் தற்போது ஐந்து வருடங்களாக
  ஆட்டை  விலுங்கும் மலைப் பாம்பு போல கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் ஆரோக்கியம் தொழில்
  குடும்ப உறவுகள் பண பலம் வேலை சுறுசுறுப்பு என அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொண்டு உள்ளார்.

  இனி குடும்ப சனி இரண்டாம் இடச் சனியால் ஏற்படும் பலன்கள் சொல்கிறேன்
  திக்கற்றவர்க்கு தெய்வமே துணை உங்களுக்கு எப்போதும் தெய்வத்தின் துணை இருக்கும்
  பெரிய அளவில் உங்களுக்கு இப்போது இருக்கும் தொழில் சிரமங்கள் அறவே விலகும்
  வேலை வாய்ப்பில் இருந்த தடைகள் அறவே நீங்கும்.

  தொழில் முன்னேற்றம் உண்டாகும் வேலை பார்க்கும் இடத்தில் பாராட்டு உண்டு நிம்மதி உண்டு. ஆனால் ஒரே ஒரு கன்டிசன் நீங்கள் பேசக் கூடாது அதாவது அதிகமாகப் பேசக் கூடாது. பேசினால் குற்றம் கண்டுபிடிக்க ஆயிரம் பேர் தயார் கவனமாக இருங்கள். மற்ற படி குடும்ப சம்பந்தப்பட்ட சுபச் செலவுகள் ஏற்படும் நல்லது தானே
  தங்க நகைகள் வாங்கலாம் இடம் வாங்கலாம் வீடு கட்டலாம்.

  வணங்க வேண்டிய தெய்வம்
  சிறு தெப்பக்குளம் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் வழிபாடு சனிக் கிழமை

  உங்கள் சொந்த வீட்டுக் காரர் சனி பகவான் உங்களுக்கு நன்மைகள் செய்ய காத்து இருக்கிறது.

  கும்பம் –

  65 % ஜென்மச் சனி:

  65 % ‌நற்பலன்கள் கிடைக்கும்

  இது வரை பயணங்கள் அதிகம் செய்ததால் ஒரளவு வெற்றி கிடைத்தது
  வீடு கட்டி முடிக்கப்பட்டது
  இட மாற்றம் இருந்தது
  கண் வலி பல் வலி பாதத்தில் அடி என்று சின்னச் சின்ன சோதனைகள் மூலம் சில பாடங்களை கற்றுக் கொண்டீர்கள்.
  பணம் இப்போது கையில் இல்லை குடும்ப சண்டை எதற்கு வந்தது என்று தெரியவில்லை.
  எதிரி ஒருவர் உருவாகி உள்ளது இப்போது தான் தெரிகிறது.
  உடல் உபாதை லேசாகத் தெரிகிறது. தந்தை இடம் சிறிய அளவில் திட்டு வாங்கி உள்ளீர்கள். பூர்வீகத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று இருப்பீர்கள். அலைச்சல், அலைச்சல், அலைச்சல்
  இது தான் தற்போது நடப்பது

  இனி ஜென்மச் சனியில் என்ன பலன்கள் கிடைக்கும் என்று சொல்கிறேன்.
  விரயச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
  மன அழுத்தம் இருக்காது
  கோபம் சுடு சொற்கள் இருக்காது. மனதளவில்  பெரிய அளவில் பிரச்சினை வராது. ஆனால் நீங்கள் பெரிய சோம்பேறி ஆகி விடும் நேரம்
  சுறுசுறுப்பாக மட்டும் இருந்தால் போதும் நீங்கள் வெற்றியாளரே. புதிய தொழில் தொடங்க வேண்டாம்
  வேலையில் இடமாற்றம் வேண்டாம்.

  இருக்கும் வேலையில் தொழிலில் நன்றாக கவனம் செலுத்த பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் உள்ளது
  இளைய உடன் பிறப்புகள் மூலம் மனஸ்தாபம் கிடைக்க வாய்ப்பு கவனம் தேவை
  வீட்டில் மிகவும் மூத்தவர்கள் இருப்பின் கண்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி விட்டு கொடுத்து போக வேண்டும் போவீர்கள்

  வணங்கி வேண்டிய தெய்வம்
  மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி வழிபாடு சனிக் கிழமை

  எந்த செயலும் ஒன்றுக்கு இரண்டு முறை முயற்சி செய்ய
  கடலும் கைக்குள் அடங்கும் நல்ல யோகம் உள்ளது.

  மீனம் -🐠

  71 % விரயச் சனி: 71 சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

  இது வரை தொட முடியாத உயரத்தைத் தொட்டீர்கள்
  ஏற முடியாத மலை மீது எளிதாக ஏறினீர்கள்
  கடக்க முடியாத கடலை கடந்து வந்தீர்கள் காரணம்
  நல்ல நேரம் அருமையான லாபச் சனி நல்ல வருமானம் தந்த சனி வயதில் மூத்த பெண்களால் யோகங்கள் கிடைத்தது உண்மை
  தொழில் வழி சிறப்பு உண்மை
  வேலை பார்க்கும் இடத்தில் புரமோசன் கிடைத்தது உண்மை. சொந்த பந்தம் தேடி வந்தது உண்மை.
  உங்கள் கனவுகள் எல்லாம் நனவானது உண்மை
  உடல் நலம் சிறப்பாக இருந்தது உண்மை
  இவை அத்தனையும் குரு சப்போர்ட் இல்லாமல் மாபெரும் வெற்றியானது
  ஏதோ வெற்றி என்பது போல ஆனது.

  இனி விரயச் சனி எனும் ஏழரைச்சனி என்ன பலன்கள் தரும் என்று சொல்கிறேன்
  நல்ல யோகங்கள் தரும்
  சனி பகவான் பெயர்ச்சி என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் அது தான் உண்மை.

  சிவ மாற்றங்கள் மட்டும் நீங்கள் செய்தால்
  முழுமையாக யோகச் சனிதான்

  வேலை பார்க்கும் இடத்தில் இருந்து மாற்றம் கிடைத்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.
  வெளியூர் வேலை என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள்
  வெளிநாட்டு முயற்சி செய்தால் உடனடியாக அருமையான வேலை கிடைக்கும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
  திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்ய அருமையான சுபச் செலவுகள் தரும் சனி பகவான் என்று சொல்கிறேன். வீடு கட்டுங்கள் யோகச் சனியாக மாறும்
  பொறுமையாக இருங்கள் யோகம் தரும் சனி தான்
  சேமிக்க நினைக்காதீர்கள் யோகம் தரும் சனி பகவான் தான். குடும்பத்தில் பொது வெளியில் என்னால் ஒன்றும் ஆவதில்லை. நான் தான் சிறியவன் என்று பேசி
  தன்னைத் தானே தாழ்த்தி வாருங்கள். தங்க நகைகள் வாங்கலாம், இடம் வாங்கலாம்
  இரட்டை யோகம் உண்டாகும்

  மாணவ மாணவிகள் என்றால் ஹாஸ்டல் மிகச் சிறந்த பரிகாரம். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

  வணங்க வேண்டிய தெய்வம்
  நீர் நிலைகளில் உள்ள சுப்பிரமணிய சுவாமி
  சிக்கல் சிங்காரவேலர்
  திருச்செந்தூர் போன்ற அதிக அளவில் நீர் நிலைகள் உள்ள சுப்பிரமணிய சுவாமி வழிபாடு செய்வது நல்லது நடக்கும்.

  வெற்றி வெளியிடத்தில் உள்ளது. தன்னைத் தானே தாழ்த்த மாபெரும் வெற்றி தருகிறார் சனி பகவான்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  3 − 1 =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Exit mobile version