- Ads -
Home ஜோதிடம் ஆலோசனைகள் தமிழ்ப் புத்தாண்டின் பின்னே உள்ள விஞ்ஞானம்!

தமிழ்ப் புத்தாண்டின் பின்னே உள்ள விஞ்ஞானம்!

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan

அண்மைக் காலங்களில்‘ஜோதிடம் அறிவியலா?’ என்றும், ‘ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல!’ என்றும் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். அவர்கள், ஜோதிடத்தை அறிவியல் நோக்கில் இருந்து வேறுபடுத்தி, பலன்கள் சொல்லப்படுவதை மட்டும் கருத்தில் கொண்டு, அவை வெறும் கட்டுக் கதைகள் என்ற ரீதியில் கூறி,  பஞ்சாங்கத்தின் மீதான அறிவியல் ஆளுமையை உள்நோக்கத்துடன் மறைத்தும் திரித்தும் வருகின்றனர்! உண்மையில் பஞ்சாங்கமும் வானியலும் வேறு வேறு அல்ல! 

சூரியனை மையமாக வைத்து, கோள்களின் இயக்கத்தைச் சொல்கிறது வானியல். ஜோதிட இயல் வல்லுநர்கள், பூமியை முன்வைத்து மற்ற கோள்களின் இயக்கங்களை கணித்துச் சொன்னார்கள். இரண்டிலும் கோள்களும் அவற்றின் இயக்கங்களும் உண்மைதான். ஆனால் பார்க்கும் பார்வையில் தான் வேறுபாடு ஏற்படுகிறது!

உதாரணத்துக்கு, நாம் ஒரு ரயிலில் அமர்ந்து பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ரயிலினுள்ளே அமர்ந்து கொண்டு, வெளியே வேடிக்கை பார்க்கிறோம். அருகே உள்ள சாலையில் ஒரு பஸ் செல்வதைப் பார்க்கிறோம். அடுத்து கார், பைக், சைக்கிள் இவற்றில் சிலர் செல்வதைப் பார்க்கிறோம்! ரயில் பாதையில் இரு புறத்திலும் உள்ள கம்பங்கள், மரங்கள் நகர்வதாக நாம் உணர்கிறோம். அதாவது ரயிலில் ஓர் இருக்கையில் அமர்ந்தபடி நாம் வேகமாக சென்று கொண்டிருந்தாலும்,  நாம் எந்த சலனமும் இன்றி ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு மற்றவற்றின் இயக்கங்களை பார்ப்பது போல் நமக்கு தோன்றுகிறது.

ஆனால் உண்மையில் நாம் மற்ற நகரும் பொருட்களுடன் சேர்ந்து வேகமாகவோ, அல்லது மற்றவற்றுடனான வேகத்தை ஒப்பிடும்போது வேகம் குறைவாகவோ நகர்ந்து கொண்டிருக்கிறோம். இதுவே நாம் ரயிலில் இருந்து இறங்கி  அருகே இருக்கும் உயரமான கட்டடத்தின் மீதோ, அல்லது ஒரு குன்றின் மீதோ நின்று கொண்டு இவை அனைத்தின் இயக்கங்களையும் வேடிக்கை பார்த்தால், அவற்றோடு ரயிலும் வேகமாகச் செல்வது தெரியும். இதையே அறிவியல் கணக்கில் ‘ரிலேட்டிவ் வெலாசிடி’ என்று கணக்கிடுவார்கள். 

இதைத்தான் பூமியில் அமர்ந்து கொண்டு  வான சாஸ்திரம் படைத்த நம் முன்னோர் செய்தார்கள்.  பூமியை மையமாகக் கொண்டு மற்ற கோள்களின் இயக்கங்களை துல்லியமாக கணித்தார்கள்.  அதில் சூரியனும் சந்திரனும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பூமியில் இருந்து நோக்கும் போது, சூரிய சந்திரர்களின் ஒத்திசைவான இயக்கங்களைக் கணக்கிட்டு, மாதங்களை ஏற்படுத்தினார்கள். அவையே சந்திரனை அடிப்படையாக கொண்ட சாந்த்ரமானம், சூரியனை அடிப்படையாகக் கொண்ட சௌரமானம் என அமைந்தன. 

ALSO READ:  கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

படிக்க: தமிழ் ஆண்டுகள் எத்தனை?

ரயிலில் நாம் பயணிக்கும் போது எப்படி ஓர் இடத்தில் அமர்ந்திருப்பது போன்று உணர்கிறோமோ, அது போல், பூமியில் நாம் நின்று கொண்டிருந்தாலும் பூமியுடன் சேர்த்து இந்த சூரிய மண்டலத்தில் நாம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். பூமியை விட்டு வெளியே வான் வெளியில் நின்றபடி, சூரியனை நிலையான ஒரு நட்சத்திரமாகக் கருதி, சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் இயக்கத்தை கணித்தாலும், உண்மையில் சூரியனும் நிலையான ஒன்றல்ல!

பால்வெளி வீதியில் மணிக்கு 7.2 லட்சம் கி.மீ., வேகத்தில் சூரிய மண்டலத்துடன் சேர்ந்து சூரியனும் வேகமாக பயணித்தே வருகிறது. இப்போது புராணக் கதைகளின் படி அனுமன் சூரியனின் வேகத்துடன் பயணித்தபடி, சூரிய பகவானிடம் பாடங்களைக் கற்றுக் கொண்டார் என்று சொன்னதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.  எனவே சூரிய மண்டலத்தை மட்டும் கவனத்தில் கொண்டு சிலர் சொல்வதைப் போல்,  சூரியனும் நிலையாக ஓர் இடத்தில் இல்லை என்பதையும் நம் முன்னோர் கணித்தே வந்திருக்கிறார்கள். 

இதைப் படிக்க: ஜோதிடம் பஞ்சாங்கம்: தமிழ்ப் பெயர்கள்

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.28 - வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு.  சூரியன் பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு, சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலமே சித்திரை மாதம். சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதங்களில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராக அமைந்திருக்கிறது. 

அதாவது, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை. வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படித்தான் ஒவ்வொரு மாதத்திற்கும் பெயர்கள் வைக்கப்பட்டன. இப்படி, பாரம்பரியமான பஞ்சாங்கத்தின் அடிப்படையே சூரிய சந்திரர்கள், நட்சத்திரங்கள்தான். 

இதைப் படிக்க: பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கத்தில் ஓர் அங்கமான யோகம் என்பது, சூரியன், சந்திரன் இரண்டின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20′ அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360°யில் 13° 20′ அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. 

படிக்க: யோகம் மற்றும் கரணங்கள்!

அடுத்து,  கரணம் என்பது திதியில் பாதி. திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் என்பதாக இருக்கும். அதாவது 30 திதி, 60 கரணங்கள். இவற்றில், ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களாக பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து  60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

படிக்க: தமிழ் மாத, நட்சத்திர, யோக, கரணப் பெயர்கள்

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.26- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

பவ, பாலவ, கௌலவ, தைதூலை, கரசை, வணிசை, பத்தரை, சகுனி, சதுஷ்பாதம்,,நாகவம், கிம்ஸ்துக்னம் என அவற்றுக்குப் பெயரிட்டுள்ளனர். இவ்வகையில் பார்த்தால், பாரத நாட்டின் பண்டைய பஞ்சாங்க முறை என்பது, கிரகங்களின் வானியல் (Astronomy)  ரீதியான அறிவியலே என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும், இதே அடிப்படையிலேயே இதே காலத்தை ஒட்டி சற்று முன் பின், பாரத தேசத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் வருடப் பிறப்புகளும் அமைந்திருப்பதையும் உற்று நோக்கலாம்! 

இவற்றையும் படிக்க:

தமிழ் மாதங்களும் அவற்றின் வடமொழிப் பெயர்களும்!

அயனங்களும் ருதுக்களும் அவற்றின் வடமொழிப் பெயர்களும்

கிழமைகளும் அவற்றின் சங்கல்ப பெயர்களும்

நட்சத்திரங்களும் அவற்றின் சங்கல்ப பெயர்களும்

15 திதிகளின் பெயர்கள்

சந்திராஷ்டம விளக்கம்

  • செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version