குழந்தை பாக்கியத்துக்கு குருவாயூரப்பன் சுலோகம்!

குருவாரம் என்பதால் குருவாயூரப்பனை நன்றாக வேண்டிக் கொள்ளலாம்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வியாழக்கிழமை முதல் 28 நாட்கள் காலை வேளையில் குருவாயூரப்பனை மனதில் தியானித்து கீழ் வரும் ஸ்லோகத்தை 28 தடவை சொல்லி வந்தால் போதும்…

நிபாய யந்தீ ஸ்தன மங்ககம் த்வாம்
விலோகயந்தீ வதனம் ஹஸந்தீ !
தஸாம் யஸோதா கதமான்ந் பேஜே
ஸ தாத்ருஸா பாஹி ஹரே கதான்மாம் !!

பொருள் : குருவாயூரப்பா யசோதை உன்னை மடியில் வைத்துக்கொண்டு பால் கொடுத்து சிரித்த முகத்துடனான உன்னை பார்த்து எந்த ஆனந்தத்தை அடைந்தாளோ அப்படிப்பட்ட ஹரியான நீ என்னை காப்பாற்ற வேண்டும் குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும்.