குரு செய்யும் கெடுதல்கள்… பொதுவா சனி என்றால் எல்லோருக்கும் பயம்..! சனி கெடுதல் செய்யும் என்று! ராகு என்றாலும் பயம்!
குரு பகவான் சுப கிரஹம் அவர் கெடுதல் செய்ய மாட்டார் என்று நம்பிக்கை பலருக்கும் உண்டு.
ஜாதக ரீதியாக குரு 6, 8, 12ல் மறைந்தால் அல்லது பகை வீட்டில் இருந்தால் நிச்சயம் நல்லது செய்ய மாட்டார்! நல்லது செய்ய இயலவில்லை என்றால்.. துன்பத்தை தான் தருவார் என்று பொருள்!
மிதுன லக்ன காரர்களுக்கு குரு பாதகாதிபதி. இவர் 7ல் இருப்பதை காட்டிலும் மற்ற வீட்டில் இருந்தால் நலம்.
குரு பகவான் 6ல் இருந்தால் வீண் அபவாதம், எதிரிகளுக்கு கட்டுப்படுதல், குடும்பத்தை விட்டு பிரிதல் மன உளைச்சல் இப்படி கொடுப்பார்.
இது போல குரு ஜனன ஜாதகத்தில் சரியில்லை என்றால் கோச்சாரத்தில் தசை அல்லது புக்தி காலங்களில் மிகுந்த துன்பத்தை தருவார் என்பது உறுதி.
ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்தார். ரொம்ப நேர்மை உள்ளவர்! பணியில் அப்பழுக்கற்றவர். நியாய தர்மங்களுக்கு கட்டு பட்டவர், பிரதம மந்திரியிடம் நல்ல செல்வாக்கு உள்ளவர். அவருடைய ஜாதகத்தில் குரு சரியில்லை கோச்சாரத்தில் செவ்வாய் தசையில் குரு புக்தி நடக்கும் போது அவருக்கு கோச்சார ரீதியாக குரு பகவான் 6ல் ப்ரவேசிக்க ஆரம்பித்தார் இந்த அன்பர் ரிடையர்ட் ஆகிறத்துக்கு ஒரு வருடம் இருந்தது… எதிரிகள் வீழ்த்த சமயம் பார்த்து இருந்தனர். அதற்கேற்றார் போல அவர் மனைவி யாரோ ஒரு தொழிலதிபர் பட்டுப்புடவை கொடுத்தார் என்று வாங்கி கொண்டார்! அதை காரணமாக வைத்து இவரை தற்காலிக பணி நீக்கம் செய்து வழக்கும் தொடர்ந்தனர்.
சரியாக குரு புக்தி முடியும் வரை ஒன்றரை ஆண்டுகள் மிகுந்த துயரத்துக்கு உள்ளானார். வீண் அபவாதத்திலிருந்து மீண்டு வர ரொம்பவே சிரமப் பட்டார். பின் ஒருவழியாக வழக்கு இவருக்கு சாதகமாக பழி துடைக்க பட்டது.
இருந்தாலும் குரு பகவான் இவரை கடும் சோதனைக்கு உள்ளாக்கினார்.
– ஜோதிடர் லட்சுமி நரசிம்மன் @ ரவி சாரங்கன்