March 27, 2025, 7:12 PM
28.9 C
Chennai

வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த வ.வே.சு.அய்யர்..

வாஞ்சிநாதன் உட்பட விடுதலை போராட்ட வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் அளித்தார் வ.வே.சு.அய்யர்.

திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வெங்டேச அய்யர்- காமாட்சியம்மாள் தம்பதியருக்கு, 1881-ம் ஆண்டு பிறந்தவர் வ.வே.சு.அய்யர். இவரது முழு பெயர் வரகனேரி வெங்கடேச சுப்ரமணிய அய்யர் என்பதாகும். தனது 16 வயதில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், 1901-ம் ஆண்டு சட்டம் பயின்று 19 வயதில் வழக்கறிஞர் ஆனார். இவர் திருச்சியில் தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து, சுதந்திரப் போராட்டத்திற்கு வீரர்களைத் தயார்படுத்தும் விதமாக அவர்களுக்கு குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம் போன்ற பயிற்சிகளை கற்பித்தார். விடுதலை போராட்ட வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் அளித்தார். அந்த வகையில் வாஞ்சிநாதனுக்கும், துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது இவர்தான். புதுச்சேரியில் கரடிக்குப்பம் என்று அழைக்கப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது.

கலெக்டர் ஆஷ்துரையை கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி, பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு ஆகும். ஆஷ்துரை கொல்லப்பட்ட பிறகு, புதுச்சேரியில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. எனவே மகாகவி பாரதியார், மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்கு போராடினார், வ.வே.சு.அய்யர்.

காந்தி புதுச்சேரிக்கு வருகை தந்தபோது, அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு, தான் பயன்படுத்திய கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அகிம்சாவாதியாக மாறினார். 14 ஆண்டுகள், தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் சுதந்திரப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வ.வே.சு.அய்யர், 1920-ம் ஆண்டு பொது மன்னிப்பு பெற்று திருச்சியில் உள்ள வரகனேரி இல்லம் வந்தார். 1923-ம் ஆண்டு நெல்லை அருகே சேரன்மாதேவியில் குருகுலம் தொடங்கி மாணவர்களுக்கு கல்வியை புகட்டினார். 1925-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி குருகுல மாணவர்களை உல்லாச பயணமாக பாபநாசத்திற்கு அழைத்துச்சென்றபோது அவரது மகள் சுபத்திரை கல்யாண தீர்த்தத்தில் தவறி விழுந்தார்.

அவரை காப்பாற்ற சென்ற வ.வே.சு. அய்யரும் சுழலில் சிக்கி மரணித்தார். திருச்சி வரகனேரியில் உள்ள இவர் வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, தற்போது கிளை நூலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

Entertainment News

Popular Categories