2018-நிறைவுறும் நேரத்தில்… நான் சொன்னதெல்லாம் நடந்தது என்கிறார் இந்த பஞ்சாங்க கணிப்பாளர்!

2018ஆம் வருடம் இரு நாட்களில் நிறைவு பெறுகிறது. அடுத்து 2019 தொடங்குகிறது. இந்த வருடத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த நிகழ்வுகளில் சிலவற்றை கடந்த வருடமே பஞ்சாங்கத்தில் நாங்கள் கணித்துச் சொல்லியிருக்கிறோம் என்று கூறுகிறார் கருடன் பஞ்சாங்க கணிப்பாளர் ச்ரேயஸ் முரளி பட்டர்.

அவர் இது குறித்து கூறியவை…

நமது கருடன் பஞ்சாங்க கணிப்புப்படி இந்த ஆண்டும் பலன்கள் சில அப்படியே நடந்துள்ளது..

ஒரு சில சம்பவங்கள் – 14.04.2018 to 26.12.2018 இது வரை நடந்தவை உங்கள் பார்வைக்கு: (Ref Page No.5)

*உலக பங்கு வர்த்தகம் சம்பந்தமாக பெரிய அளவில் பாதிப்பு
* உலக அளவில் நில நடுக்கம் இயற்கை சீற்றம் போன்ற பாதிப்பு (இந்தோநேசியா எரிமலை வெடிப்பு நில நடுக்கம் சுனாமி)
* அரசியல் மாற்றங்கள் ஏற்படும் (5 மாநில தேர்தல்)
* சில இடங்களில் அதிக மழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படும். (கேரள மழை வெள்ளம்)
* இந்திய பங்கு சந்தை பெரிய சரிவை சந்தித்தது
* பனி பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு
* பெட்ரோல் விலை நல்ல ஏற்றம் கண்டு பின்பு இறங்கும்

மேலே சொன்ன இந்த கணிப்புகள் கடந்த ஆண்டு நவம்பர் 2017ல் கணித்து ஜனவரி 2018 முதல் வாரத்தில் நமது கருடன்பஞ்சாங்கத்தில்பக்கம்_5ல்- வெளியிட்டேன், இந்த ஆண்டும் நமது கணிப்புகள் அப்படியே நடந்துள்ளன… என்கிறார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...