பஞ்ச மகா புருஷக்கிரகங்களில்  பஞ்ச பூதத் தத்துவத்தை பிரதிபலிக்கும் நீர் கிரகமான சுக்கிரன் லக்னத்துக்கு கேந்திரங்களில் ஆட்சி ,உச்சம் பெற்று பலமாக இருந்தால் கிடைப்பது மாளவ்ய யோகம் ஆகும்.

இந்த யோகமானது வாழ்க்கையில் சுக செளக்கியங்கள் மற்றும் இன்ப வாழ்வினைப் பெறுவதுடன், செல்வம், செல்வாக்கையும் பெற்று ஆடம்பரவாழ்வினையும் , சுகஜீவிகளாக  இருக்கும் நிலையினையும் தருகின்றது .

மேலும் உடலுறவு சம்பத்தப்பட்ட சுகத்தை அதிகம் அனுபவிப்பதுடன், கெளரவ பதவிகளையும், வாகனம், பணியாட்கள் ஆடம்பரமான மாளிகையுடன் கூடிய சொகுசான வாழ்க்கையையும் அளிக்கும் . சுக்கிரன் இன்ப சுகத்தை அள்ளி வழங்கி விடும் கிரகம்

இந்திர போக வாழ்க்கை என்று கூட சொல்லாம். பொதுவாகவே சுக்கிரன் என்றாலே எதிர்பார்ப்புக் கிரகம் எனலாம்.

சுக்கிரன் அளிக்கும் மாளவ்ய யோகமும் கூட அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே செய்யும். சுக்கிரனின் மாளவ்ய யோகம் தடைகளைக் கடந்தால் தான் கிடைக்கும்.

அதுதான் சுக்கிரன் லக்னத்துக்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சத்தில் உள்ளாரே !
ஆஹா ! மாளவ்ய யோகம் தான் என தீடீர் முடிவு கட்டி ஆனந்தம் கொள்ளக் கூடாது

யோக பங்கநிலைகளையெல்லாம் கடந்து பலமாக உள்ள சுக்கிரன் பழுதில்லாமல் இருந்தால் தான் மாளவ்ய யோகத்தை அள்ளி வழங்குவார், அள்ளி வழங்கி ஊதாரித்தனமாக செலவு  செய்ய வைத்து ஒன்றும் இல்லா மனிதனைப் போல் ஆக்கி விடவும் செய்வார்.

பரிகார ஜோதிடர் Sகாளி ராஜன்
ராஜ ஸ்ரீ ஜோதிடநிலையம், இலத்தூர் ,
தொடர்புக்கு :  984371 O327.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...