பிள்ளைகள் மூலம் தனயோகம், (அல்லது) புத்ர மூலதனயோகம் …

நல்ல தந்தை அமைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். நல்ல மனைவி மக்கள் அமையவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் மூலம் தனயோகம் அடைய முடியும்.

எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனியாமல் எப்படியோ போகட்டு மென்று விட்டு விடுகின்றார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளிருந்தும் கஷ்டப்படுவதை நடைமுறையில் பார்க்கிறோம் பார்த்துக் கொண்டும் இருக்கின்றோம்.

குழந்தை பிறந்ததும் குடும்பத்துக்கே யோகம் உண்டாவதும் உண்டு. இக்குழந்தையால் குடும்பத்திற்கு யோகம் உண்டா? என  அனைவரும்  ஜோதிடர்களை அணுகிக் கேட்டும் வருகிறார்கள். என்ன செய்வது யோகமுள்ள குழந்தை பிறக்கவும் ஜாதகத்தில் யோகம் இருக்க வேண்டும் அல்லவா?

ஆகா ! இந்தக் குழந்தை பிறந்ததும் அவன் தந்தை அமோகமாக உயர்ந்த நிலை அடைந்து விட்டான் என சிலர் மூக்கு மேல் விரல் வைத்தும் கூறுவதும் உண்டு.

இந்தக் குழந்தை பிறந்ததும் அவன் தந்தை சொத்து சுகத்தையெல்லாம் இழந்து அனைத்தும் நாசமாக்கி விட்டது என்று சிலர் வருத்தப் படுவதையும் நாம் பார்க்கிறோம்.

அது குழந்தையின் பாக்கியமோ, துர்பாக்கியமோ என்றாலும் கூட இரண்டு நிலையுமே தகப்பன் ஜாதகத்திலும் பிரதிபலிக்கும்  என்பதை மறந்து குழந்தையின் மீது பழி சுமத்தி விடக் கூடாது.

குழந்தை பிறந்ததும் சில நேரம் தந்தை யோகக்காரர் ஆகி விடவும் வாய்ப்பு உண்டு. சில நேரம் ஆண்டியாக்கி விடவும் கூடும்.

நல்ல குழந்தை பெற தகப்பன் ஜாதகத்திலும் யோக பலம் இருக்க வேண்டியது அவசியம் தான்.

ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்து அதிபதியானவர் 5ம் இடத்து அதிபதியுடனோ அல்லது புத்திரகாரகராகிய குருவுடன் நல்ல ஸ்தானங்களில் அசுபர் பார்வை இன்றி இணைந்திருந்தாலோ புத்திரர்கள் மூலம் தனயோகம் கிடைக்கும்.

அதிலும் குறிப்பாக லக்கினம் விசேஷ அம்சத்திலிருக்க வேண்டியது அவசியம் என்று மூல நூல்கள் குறிப்பிட்டு இருந்தாலும் லக்கினதிபதி நல்ல பலமான நிலையில் இருந்தாலே இந்த யோகம் கிட்டும்.

இந்த யோகமுள்ளவர்கள் குழந்தை பிறந்ததும் நல்ல செல்வ வளம் பெறுவார்கள் அல்லது பிள்ளைகள் வளர்ந்து பெரியவனாக பெரியவளாக வளர்ந்து நல்ல சம்பாத்தியம் செய்து தகப்பனை சுகமாக வைத்திருப்பார்கள் (அல்லது) தகப்பன் பிள்ளை இருவரும் சேர்ந்து தொழில் வியாபாரம் செய்து தன யோகம் பெற்று விட முடியும்.அதாவது பலம் குறைந்தோ, நீசமாகியோ, பகைபெற்றோ இருந்தால் தனயோகம் கிட்டாது.

– பரிகார ஜோதிடர் S.காளிராஜன்,
ராஜஸ்ரீ ஜோதிட நிலையம்
இலத்தூர், நெல்லை மாவட்டம்
தொடர்பு எண்: 9843710327

Recent Articles

காப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்!

ஆவ்யாளர் என்ற சொல் மட்டுமல்ல மொத்த கடிதமுமே தப்பும் தவறுமாகத்தான் இருக்கின்றது. என்ன படிச்சாங்களோ எப்படித்தான் தேர்ச்சி அடைஞ்சாங்களோ

வந்தே மாதரத்தை ஏற்போர் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்-பிரதாப் சாரங்கி அதிரடி.!

# 72 ஆண்டுகளுக்கு பிறகு, காஷ்மீர் மக்களுக்கான முழு உரிமையையும், மோடி தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. #

வயிற்றுவலிக்கு காட்டச் சென்ற பெண்! மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி!

கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று சினேகா கூறாத நிலையில் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த வருத்தத்திலும் கவலையிலும் உள்ளனர். இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துனர்.

நவராத்திரி ஸ்பெஷல்: பால்பேடா!

பால்பேடா : தேவையான பொருட்கள் : பால் ...

வாழையின் மணத்தோடு தொன்னை இட்லி

வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

Related Stories