Home ஜோதிடம் ஆலோசனைகள் சனி பெயர்ச்சி (2020-2023) 12 ராசிகளுக்கும் பலன்கள்- பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி (2020-2023) 12 ராசிகளுக்கும் பலன்கள்- பரிகாரங்கள்!

ஸ்ரீசார்வரி வருடம் மார்கழி மாதம் 11 ஆம் தேதி விடிந்தால் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04-06 மணிக்கு உத்திராடம் 2ஆம்

sani-peyarchi-2020
sani-peyarchi-2020

சனிப்பெயர்ச்சி
ஸ்ரீசார்வரி வருடம் மார்கழி மாதம் 11 ஆம் தேதி விடிந்தால் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04-06 மணிக்கு உத்திராடம் 2ஆம் பாதத்தில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்தப் பெயர்ச்சியில் நன்மை பெறும் ராசிகள்:
மேஷம், ரிசபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் , மீனம்

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:
மகரம், தனுசு, கும்பம்,
மிதுனம், கடகம், துலாம்

கும்பத்திற்கு 7 1/2 தொடக்கம்
மகரத்திற்கு 1ல் . ஜென்ம சனி தனுசிற்கு 2ல். பாதச் சனி மிதுனத்திற்கு 8ல். அஷ்டமி சனி கடகத்திற்கு 7ல். கண்டக சனி துலாத்திற்கு 4ல் அர்த்தாஷ்டம சனி

சனி பகவானின் பாதிப்பு குறைைய பரிகாரம் செய்து கொள்ளல் அவசியம்

அதற்கான எளிய பரிகாரம்,

1)எள் கலந்த சாதம்(சோறு) காகத்திற்கு வைப்பது நன்மை நடைபெறும்.

2)ஞாயிறு தோறும் காலபைரவருக்கு ராகுவேளையில் நல்லெண்ணய் தீபம் ஏற்றுவது நிம்மதி கிடைக்கும்.

)அனுமனுக்கு வாடாமலரும் வடைமாலையும் சாற்றி வர தெளிவுபிறக்கும்.

4)ஆதரவுஇல்லாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உவுதல்

5)முதியோர்களுக்கு ஊன்றி நடப்பதற்கு இரும்பால் ஆன ஊன்றுகோல் வாங்கி கொடுக்கலாம்.

5)முன்னோர்களையும் பெரியமகான்களையும் அன்போடு பயபக்தியோடு வணங்குதல் சிறப்பு நல்கும்.

6)நவக்கிரஹ ஹோமம் செய்ய மகிழ்ச்சியாய் வாழ்வோம்.

7)சனிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பது பகவான் நமக்கு அருளையும் ஆசியும் வழங்குவர்.

8) சனிக்கிழமை அசைவ உணவு சாப்பிடக் கூடாது.

9) அஷ்டமச்சனி நடப்பவர்கள் அன்னதானம் செய்வது உத்தமம்.பபணத்திற்கு செலவு வரும்பொழு து தானம் செய்வது உத்தமம்.

10) விரயச்சனி நடப்பவர்களும் கோ தானம் அல்லது கோ பூஜை செய்யலாம் விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்ள உத்தமம்.

மேஷ ராசி…

மேஷம் கால புருஷனுக்கு ஒன்றாமிடம் மேஷம். இந்த ராசிக்கு வரும் டிசம்பர் மாதம் 26ம் தேதி பின் இரவு 04-49க்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு உத்திராடம் 2ம் பாதத்தில் பெயர்ச்சி ஆகிறார்.

இதுவரை மேஷராசிக்கு 9ல் இருந்த சனி, பெயர்ச்சிக்கு பிறகு பத்தாமிடம் செல்வது பலன் குறைவுதான். பணம் விரயம் தொழில் செய்யும் இடங்களில் அதாவது உத்யோகம் பார்க்கும் இடங்களில் பகை ஏற்படும். தான் உண்டு என் அலுவல் உண்டு என இருக்க வேண்டும்.

பரிகாரம்: மேஷ ராசிக்காரர்கள் எள் தானம் செய்வதும் எள்ளுருண்டை 10 உருண்டை அல்லது வயதிற்கேற்ப (வயது என்ன நடைபெறுகிறதோ அந்த எண்ணிக்கையில்) எள்ளுருண்டை வாங்கி சனீஸ்வரர் பாதத்தில் வைத்து வருகின்ற மக்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

10 கையளவு எள் எடுத்து அல்லது டீஸ்பூன் அளவு பத்து எடுத்து தாளில் (பேப்பர்) தூங்கும் பொழுது தலைக்கு கீழ் வைத்து மறு நாள் காலை அதாவது ஞாயிற்றுக்கிழமை எடுத்து ஓடுகிற நதியிலோ கால்வாயிலோ போட்டுவர சனி பகவானின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

ரிஷப ராசி…

ரிசபம் ராசி : கால புருஷனுக்கு இரண்டாமிடம் ரிஷபம்
வாக்கு ஸ்தானம், குடும்பஸ் தானம். சுக்கிரன் ஆட்சி பெற்ற ராசி. சந்திரன் உச்சம் பெற்ற இடம். அப்படியாபட்ட ராசி ரிஷபம்.

சரி இதுவரை எட்டில் இருந்த சனி வரும் டிசம்பர் மாதம் 26க்கு பிறகு தனுசு ராாசியிலிருந்து பெயர்ச்சி ஆகி மகரத்திற்கு சென்று 9மிடத்துக்கு செல்கிறார்.

ரிஷப ராசிக்கு மகரம் 9மிடம் ஆக பாக்கிய சனியாக மாறுவது நன்மை தரக்கூடிய பலனை தருவாரா? இல்லை பாதிப்பலன் கிடைக்க வாய்ப்பு.

இருந்த போதிலும் கோச்சார ரீதியாக பார்க்கும் போது காரியத் தடையும் பீடையுமாகவே இருக்கும். அவரவர் ஜெனன ஜாதகத்தில் சனி இருக்கும் நிலையைப் பொறுத்தும் திசையை பொறுத்தும் புத்தியை பொறுத்தும் பலன் இருக்கும்.

இப்பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்யும் ராசி ஆவதால் எளிய பரிகாரம் செய்தால் சனி பகவானின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

எளிய பரிகாரம்*

காகத்திற்கு எள் கலந்தசாதம் (சோறு) வைக்க வேண்டும்.
எள்தானம் செய்யவேண்டும்.
முதியவர்களுக்கு உதவிடுதல் பாக்கியச்சனி பாக்கியத்தை பெற்றுத்தரும்.
ராசியினருடைய வயதிற்கு தகுந்தவாறு எள்ளுருண்டை தானம் கொடுத்துவர மேன்மையாக இருக்கும்.

9 கையளவு எள்ளை சனிக்கிழமை இரவு தூங்கும் பொழுது தலைக்குக் கீழ் வைத்து மறுநாள் காலையில் எடுத்து ஓடுகிற நதியில் விட்டுவிட சிறப்பைத் தரும். சனிக்கிழமை தோறும் செய்ய வேண்டும்.

மிதுன ராசி

கால புருஷனுக்கு மூன்றாமிடம் மிதுனம் தைரிய வீர்ய ஸ்தானம். இளைய சகோதர ஸ்தானம் காம திரிகோண ஸ்தானம் மிதுனம்.

ராசிக்கு இதுவரை ஏழாமிடத்தில் இருந்த சனி, பெயர்ச்சிக்கு பிறகு எட்டாமிடத்துக்கு வருவது அட்டமத்து சனி என்றும், அஷ்டம சனி என்றும் கூறுவார்கள். ராசிக்கு சிறந்த பலனைஎதிர்பார்க்க இயலாத விஷயம்.

“எட்டிலே சனியிருக்க எண்ணற்ற மாற்றம் வரும் தொட்டு வரும் அலைச்சலும் தொடர் கதையாக வந்து சேரும். பெட்டி பணத்திற்கும் பெருஞ் செலவு காத்திருக்கும்.”

வீண் விரயம் ஏற்படும். வாகனங்களில் எச்சரிக்கை தேவை. சுமாரான பலன்தான்.

பரிகாரம் செய்து கொள்ளல் அவசியம்.

எட்டாமிடத்தில் இருக்கும் சனிக்காகவும் நமக்காகவும் ஒரு பரிகாரம் கருப்பு உலர் திராட்சை காகத்திற்கு வைத்து வரலாம்.

காகத்திற்கு எள் கலந்த சாதம் அதன் ஓரத்தில் நல்லெண்ணெய் ஒரு கரண்டி விட்டு காகத்திற்கு வைக்க வேண்டும்.

சனிக்கிழமை விரதமிருந்து காலபைரவரை வணங்குவது சிறப்பைத் தரும். வயது எண்ணிக்கையில் எள்ளுருண்டை தானம் கொடுக்க வேண்டும். ஆஞ்நேயருக்கு வெற்றிலை மாலை போட்டு வணங்கி வர நன்மை நடக்கும். நல்லது நடக்கிறதோ இல்லையோ கெடுதல் இருக்காது.

கடக ராசி

கடகம் கால புருஷனுக்கு நான்காமிடம். மாத்ரூ (தாய்) ஸ்தானம், சுக ஸ்தானம், வாகனம். கோணங்களில் மோட்சத் திரிகோணம்

கடக ராசிக்கு ஆறிலிருக்கும் சனீஸ்வரர் டிசம்பர் மாதம் 26 ம் தேதிக்குப் பிறகு தனுசு ராசியிலிருந்து மகரத்திற்குச் செல்வது சிறப்பாக இல்லை. கண்டகச்சனி ஆரம்பம்.. இக்காலக் கட்டத்தில் தண்டனை, வாகன விபத்து, வீண் செலவு, துயரம், தொந்தரவு போன்றவை நிகழ வாய்ப்பு உண்டு.

இந்த ராசிக்காரர்களும் பரிகாரம் செய்து கொண்டு சிறப்புப் பெறலாம்.

பரிகாரம்: காகத்திற்கு சாதம் வைத்தலும், அனுமனை வழிபடுதலும், எள் தானம் செய்தலும் , எள்ளை தூங்கும்பொழுது தலைக்குக்கீழ் வைத்து தூங்குதலும், மறுநாள் ஓடுகிற நதியில் கால்வாயில் போட்டுவிடவும் உத்தமம்.

கால பைரவரை வணங்குதல் சிறப்பு. சிவாலயத்தில் உள்ள சனி பகவானுக்கு பால் வாங்கிக் கொடுக்க நன்மை கிடைக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி கால புருஷனுக்கு  ஐந்தாமிடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். புத்திரஸ்தானம். கோணங்களில் அதாவது தர்மத்தை நிலைநிறுத்தக்கூடிய தர்மத் திரிகோணம். இங்கு நவ நாயகர்களின் நாயகன் சூரியன் ஆட்சி.

அப்படிப் பட்ட ராசி சிம்மம். சிறந்த ராசி. இந்த ராாசிக்கு இதுவரை இருந்த சனீஸ்வரர் 5ல் தடுமாற்றத்தையும் வீீண் செலவுகளையும் சேதத்தையும் கொடுத்த சனிபகவான் பெயர்ச்சிக்குப் பிறகு ஆறாாமிடம் செல்வது சிறப்புதான். நன்மை நடக்கும். பொதுவாக ராசிக்கு சனி 3,6,11ல் இருந்தால் சிறப்பு தான்.

கன்னி ராசி

கன்னி ராசி காலபுருஷனுக்கு ஆறாமிடம். சத்ரு ஸ்தானம் கடன் நோய் இதை எல்லாம்  கூறக்கூடிய இடம். கோணங்களில் அர்த்த திரிகோணம். கர்மா குடும்பம் செயல்பாடுகள் போன்றவையை குறிக்கும் இடமாகும்.

ஆக இந்த ராசிக்கு இதுவரை நான்கிலிருந்த சனி பகவான் பெயர்ர்ச்சிக்குப் பிறகு ஐந்தாமிடம் செல்வதால் சிறப்பான பலனை பார்க்க முடியாது

புத்தி தடுமாற்றம் குழப்பநிலை போன்றவை காணப்படும். தேவை இல்லாத அலைச்சல் நிகழும்.

பரிகாரம்

வாரந்தோறும் புதன்கிழமை பெருமாள் வழிபாடு புத்தி குழப்பத்தை சரி செய்யும். ஆஞ்சநேயரை வடைமாலை சாற்றியும் வெற்றிலை மாலை சாற்றியும் வணங்கி வரலாம்.

சிவாலயத்தில் இருக்கும் சனி பகவானுக்கு வயது அளவு எள்ளுருண்டை வைத்து பின்பு தானம் கொடுக்க சகல சஞ்சலங்களும் தீர்ந்துவிடும்.

ஐந்து டீ ஸ்பூன் அளவு எள்ளை சனிக்கிழமை இரவு தூங்கும் பொழுது தலைக்குக் கீழ் வைத்து மறுநாள் காலையில் ஆற்றிலோ கால்வாயிலோ ஓடுகிற தண்ணீரில் போட்டுவிட சகலமும் சிறப்பாய் மாறும்.

துலா ராசி

துலா ராசி கால புருஷனுக்கு ஏழாம்வீடு. இந்தவீீட்டின் அதிபதி சுக்கிரன். தராசு போன்ற சின்னத்தை உடையது.

மாதத்தில் ஐப்பசி மாதம். ஐங்கோண தத்துவமும் கொண்டதாக விளங்கியும், காமத் திரிகோணமும் உள்ள வீடு.

யோகம் போகம் இவை இரண்டையும் ஒருசேர வழங்குகின்ற ஆற்றல் இந்த வீட்டிற்கு உண்டு

நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் போன இந்த ராாசியில் தான் சனி பகவாான் உச்சம் அடைகிறார். இதுவரை மூன்றிலிருந்த சனி நான்காமிடம் செல்வது உகந்த இடமல்ல. வியாதி பந்து ஜன விரோதம், பகைமையும் ஏற்படும் . சுகம் கெடும்

பரிகாரம் 

சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைத்துவர சந்தோஷம் நிம்மதி உண்டாகும். கால பைரவரை வணங்குவதும், சதுர்த்தி திதியில் விநாயகரை வணங்குதலும் நன்மை தரும்.

சனிக்கிழமை இரவு தூங்கும் பொழுது தலைக்குக் கீழ் 4 கையளவு எள் வைத்து மறுநாள் காலையில் ஓடுகிற தண்ணீரில் போட்டுவிட சிறப்புதான். மங்களம் உண்டாகும்.

விருச்சிக ராசி

விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாமிடம். ராசிஅதிபதி செவ்வாய். மாதங்களில் கார்த்திகை. ஞானத்தின் திறவுகோல்!

8 பேருக்கு என்ன 80 பேருக்கும் உரிய சிந்தனை சொல்வதில் சக்தி கொண்ட திறமை, அப்படிப் பட்ட ராசி.

இதுவரை ராசிக்கு இரண்டில் இருந்த சனி பகவான் பெயர்சிக்கு பிறகு மூன்றாமிடம் செல்வது சிறப்பு. சனி பகவனால் நன்மை நடைபெறும். பரிகாரம் தேவை இல்லை. 

தனுசு ராசி

தனுசு கால புருஷனுக்கு ஒன்பதாம் வீடு. தனுசு ராசி அதிபதி குரு.  உபயத் தன்மை அக்னி தத்துவம் மாதத்தில் மார்கழி. ஆண் ராசி. தர்ம சிந்தனையும் தயாள குணமும் சுயகட்டுப்பாடும் பொது வாழ்க்கையில் விருப்பமும் நல்ல ஒழுக்கமும் நாணயத்தில் கண்ணும் கருத்தும் இறை நம்பிக்கையும் உழைப்பில் அக்கறையும் பணத்தில் அக்கறையும் தூர தேசத்தில் குடியேற விரும்புதலும்… லாபத்திறமையும் புணர்ச்சியில் விருப்பமும் இருக்கும்.

சரி இருக்கட்டும்… சனி ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் நின்று சிரமத்தை கொடுத்த போதிலும் சங்கடமான சூழ்நிலையில் தத்தளித்து தவியாய் தவித்தோம்..

டிசம்பர்26 பெயர்ச்சிக்குப் பிறகு இரண்டாம் இடம் செல்வது வாக்குச்சனியோ போக்குச்சனி என்ற வார்த்தைைக்கு ஏற்ப கொஞ்சம் மீள வாய்ப்பு. ஏன் என்றால் பாதச் சனியாக மாறுவது ஓரளவு ரிலீப் ஆகலாம்.

பரிகாரம்

பஞ்சமி திதி அன்று வராஹிக்கு தேங்காயில் தீீீீீபம் ஏற்றி வர உத்தமம்.

அனுமனுக்கு வடை மாலை சாற்றி வணங்குவதால் நலம் பெறலாம். நலிந்த ஏழைகளுக்கு உதவுதல் அன்னதானம் செய்தல் ஆகியவை நன்மை தரும்.

2 கையளவு எள்ளை சனிக்கிழமை  தோறும் தூங்கும் பொழுது தலைக்குக் கீழ் வைத்து மறு நாள் ஆற்றில் போட்டுவிட உத்தமம்.

மகர ராசி…

மகரம் கால புருஷனுக்கு பத்தாமிடம் மகரம்.

இதன் அதிபதி சனி பகவான். தன்மையில் சர தத்துவம். காலபுருஷனின் கோணங்களில் அர்த்த திரிகோணம். கர்ம ஸ்தானம். முன்ஜென்ம வினையை நிலைநிறுத்தக்கூடிய இடம்.

மனித வாழ்வில் உண்மை இன்பத்தை அடைய வழிகாட்டுவது பத்தாமிடம். ராசிக்கு இதுவரை 12ல் இருக்கும் சனி பகவான் பெயர்ச்சிக்கு பிறகு ஒன்றாமிடத்திற்கு செல்வதால் அதாவது ஜென்மத்திற்கு வருவதால் சிறப்பு இல்லை.

சிரமப் பட்டவனுக்கு ஜென்மத்தில் சனி. இந்த ராசிக்கு 7 1/2 க்காலம். பொருளாதரச் சிக்கல். சுருக்கமாக சொல்லப் போனால் கஷ்டமான காலம்.

பரிகாரம்

முதல் வேலை சனிக்கிழமை தோறும் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். விரதமிருந்து கால பைரவரை வணங்குதலும் தீபம் ஏற்றுதலும் நன்மை பயக்கும்.

மறந்திடாமல் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது சனி பகவானின் தாக்கத்தைக் குறைக்கும். முன்னோர்களின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

ஆஞ்சநேயர் பெருமானுக்கு வடைமாலை சாற்றியும் வெற்றிலை மாலையும் சாற்றியும் வழிபட இன்னல் நீங்கும்.

மகர ராசிக்காரர்கள் இரவு தூங்கும் போது ஒரு கையளவு எள்ளை எடுத்து தலைக்கு கீழ் வைத்து மறுநாள் அதாவது ஞாயிறு காலையில் எடுத்துக் கொண்டு ஓடுகிற நதியில் போட்டுவர சனி பகவானின் தாக்கமும் குறைந்து பகவானின் ஆசி நிச்சயமாக கிடைக்கும்.

நலிந்தவர்களுக்கு அன்னம் தானம் கொடுக்கலாம் வறியவர்களுக்கு உதவிசெய்வதால் சனி பகவானின் அருட்கடாட்சம் கிடைக்கும்.

நியாயமான பணம், அதாவது உழைத்த பணத்தில் உதவி செய்வது சனி பகவானுக்கு பிடிக்கும். ஏன் என்றால் சனி பகவான் நீதிக்கும் நேர்மைக்கும் உரியவர்.

கும்ப ராசி

கும்ப ராசி கால புருஷனுக்கு பதினொன்றாம் வீடு கும்ப. லாப வீடு. மூத்த சகோதர ஸ்தானம். கோணங்களில் காமத்திரிகோணம். அதாவது உலக இன்பங்களில் நாட்டம்.

இந்த ராசிக்கு இதுவரை பதினொன்றில் இருந்து வந்த சனி, பெயர்ச்சிக்குப் பிறகு 12ஆம் இடம் வருவது உகந்த இடமல்ல. விரயச்சனி. விரயம் ஏற்படும்.

அதை சுப விரயமாக மாற்ற சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும். விநாயகருக்கு தீபம் ஏற்றுதல் நல்லது.

12 கைளவு எள் அல்லது12 கரன்டி எள்ளை எடுத்து தூங்கும் பொழுது தலைக்குக் கீழ் வைத்து மறுநாள் காலையில் ஒடுகிற நதியில் போட்டுவிட உத்தமம். அனுமனை வணங்குதல் சிறப்பு.

மீன ராசி

மீனம் கால புருஷனின் 12ம் வீடு. மீனம் ராசிஅதிபதி குரு. இதன் மாதம் பங்குனி. நீர்த் தத்வ ராசி. கோணங்களில் மோட்சத் திரிகோணம். ரகசியங்களும் யோகங்களும் மறைந்து இருக்கும் இடமும். மறைத்து வைக்கப்பட்ட இடமும் இதுதான். இந்த ராசிதான்.

இந்த ராசிக்கு கால புருஷனுக்கு 10மிடத்து அதிபதியும் 11மிடத்து அதிபதியும் சனி ஆவார். கோட்சாரத்திற்கு அதாவது ராசிக்கு இதுவரை பத்தாமிடத்தில் இருந்து வந்த சனி பகவான் பெயர்ச்சிக்குப் பிறகு பதினொன்றாம் இடத்திற்கு வருவது சிறப்பு தான்.

எதைத் தொட்டாலும் லாபம் ஏற்படும் தொட்டது துலங்கும். பெயர்ச்சிக்கு பரிகாரம் தேவை இல்லை. ஜெனன ஜாதகத்தில் சனிபகவான் நிலையைப் பொறுத்தும் தசையைப் பொறுத்தும் பலன் உண்டு. நன்றாக இருக்கும்.

பலன்கள் கணிப்பு : ராஜஸ்ரீ ஜோதிடாலயம், இலத்தூர்

தொடர்புக்கு: 98437 10327 | 82201 63376

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 3 =