உங்களை உச்சத்துக்கு உயர்த்தும் கஜகேசரி யோகம்!

சந்திரனால் ஏற்படும் யோகங்கள்.-1  கஜகேசரி யோகம் பற்றி பார்ப்போமா?

சந்திரனால் ஏற்படும் யோகங்களில் முக்கியமானது கஜகேசரி யோகமாகும். சந்திரனுக்கு 1,4, 7, 10 ஆகிய நான்கு கேந்திரங்களில் குரு இருந்தால் கிடைப்பது கஜகேசரி யோகமாகும்.

கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். யானையைக் கண்டு மற்ற மிருகங்கள் எல்லாம் பயப்படும். ஆனால் சிங்கம் மட்டும் யானையைக் கண்டு பயப்படாது. யானை சிங்கத்தை கண்டு பயப்படும்.

அதே போல் துன்பத்தைக் கண்டு இந்த யோகம் உள்ளவர்கள் பயப்பட மாட்டார்கள். அந்த அளவுக்கு கஜகேசரி யோகம் உள்ளவர்கள் துச்சமாக எண்ணி அதை வெற்றி கொள்வார்கள்.

சந்திரனும். குருவும் பலமாகக் காணப்பட்டாலோ உச்சம் ஆட்சியாய் இருந்தாலோ முழுப் பலனை செய்யும். ஒருவர் பலமுடன் காணப்பட்டு மற்றவர் பலம் குறைவுடன் காணப்பட்டால் 1/2 பலன் கிடைக்கும். இருவரும் பலம் இழந்தால் பலன் இல்லை,

ஒருவர் சமம் மற்றவர் நீசம் _ பகை பெற்றால் பலன் 1/4 ஆகும். சந்திரனுக்கு கேந்திரத்தில் குருவைப் பார்த்தவுடன் கஜகேசரி யோகம் என முடிவு செய்து விடக் கூடாது. இந்த யோகம் உள்ளவர்கள் தலைமை தாங்கும் தகுதியும் கிடைக்கும் செல்வம் செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம் ஆகியவற்றுடன் வசதியான வாழ்க்கையும் அமையும்

மேலும் சந்திரன் வளர்பிறை சுபச் சந்திரனாக இருப்பதுடன் இருவரும் நல்ல நிலையில் இருந்தால் கஜகேசரி யோகம் பலம் கூடும்.

(தொடரும்) குரு சந்திர யோகம்

ஜோதிடச்சுடர் பரிகார ஜோதிடர் S. காளிராஜன்
ஜோதிடர் ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்,
கீழத்தெரு – இலத்தூர், நெல்லை மாவட்டம்
தொடர்புக்கு: +91 98437 10327

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...