சந்திரனால் ஏற்படும் யோகங்கள்: சந்திர மங்கள யோகம்!

சந்திர மங்கள யோகம் :

சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து இருப்பது சந்திரமங்கள யோகம் ஆகும். சந்திர மங்கள யோகம் உள்ளவர்கள் கம்பீரமான தோற்றம் உடையவர்களாகவும் , அதிர்ஷ்டசாலிகளாகவும் கல்வியில் தேர்ச்சியுடையவர்களாகவும், நினைத்ததை செய்து முடிப்பவர்களாகவும், முயற்சியிலும் சுலபமான வெற்றி பெறுபவர்களாகவும் இருப்பார்கள் .

சந்திரனும் செவ்வாயும் நல்ல பலத்துடன் இருந்தால் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வாய்ப்பு உண்டு.

சந்திரனும் செவ்வாயும் பலம் இல்லாமல் இருந்தால் யோக பலம் குறைவு ஜாதகனுக்கு அறுவை சிகிச்சை ஏற்பட வாய்ப்பு .

சகட யோகம் :

குருவுக்கு 6,8,12 ஸ்தானங்களில் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படும். சகட யோகம் உடையவர்களின் வாழ்க்கை, சக்கரம் சுழல்வது போல் ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக நிலையற்று இருக்கும். ஏழ்மை கவலை மிக்கவர்களாகவும் உறவினர்களால் வெறுக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

குரு சந்திர யோகம் :

சந்திரனால் ஏற்படும் யோகங்களில் குரு சந்திர யோகம் ஒன்று.

குருவும் சந்திரனும் இணைந்தோ நேர் நேர் 7ஆம் பார்வையாக இருந்தாலோ ஏற்படுவது குரு சந்திர யோகம். புலிப்பாணி பாடலில் அழகாய் கூறியிருப்பார்.

கூறப்பா யின்னமொரு புதுமை சொல்வேன்
குமரனுக்கு குருசந்திரன் பலனைக் கேளு
சீரப்பா செம்பொன்னும் மனையுங் கிட்டும்
ஜெனித்ததொரு மனை தனிலே தெய்வம் காக்கும்

கூறப்பா கோதையரால் பொருளுஞ் சேரும்
குவலயத்தில் பேர் விளங்கும் கடாக்ஷ்முள்ளேன்.
ஆரப்பா அத்தலத் தோன் மறைந்தானானால்
அப்பலனையறையாதே புவியோருக்க்கே.

குருவும் சந்திரனும் பலம் பெற்று ஒருவருக்கு ஒருவர் கேந்திரங்களில் நின்றால் இந்த யோகம் ஏற்படும்

ஜாதகன் பிறந்த வீட்டை தெய்வம் காக்கும். பெண்களின் சொத்து கிடைக்கும், புகழ் பரவும் , அரசாங்க ஆதரவும் உண்டு. குருவும் சந்திரனும் பலம் இல்லாமல் இருந்தால் பலன் கிட்டாது.

பரிகார ஜோதிடர் S.காளிராஜன்
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்
இலத்தூர், நெல்லை மாவட்டம்
9843710327 / 8220163376.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...