நவக்கிரக தோஷங்களிலிருந்து மீள… நல்லதொரு ஜோதிட ஆலோசனை!

விஷயத்தைத் தெரிந்து கொண்டால் விடுபட்டு விடலாம் தோஷத்திலிருந்து! நமக்கு  ஜாதக அமைப்பும் இருக்க வேண்டும்.

நடக்கும் போது தலைகுப்புற விழுந்த உணர்வு… அதாவது அடிக்கு மேல் அடி விழுவது போன்று இருக்கும். பேருடனும் புகழுடன் இருந்தது போய், கர்வம் ஆணவம் அந்த ஆட்டத்திறகு ஒரு முடிவு கட்டி விடும்… இந்தக் காலகட்டத்தில்! சரி நாம் என்ன செய்தால் இதைத் தாங்கும் சக்தி கிடைக்கும்?!

விஷயத்தைத் தெரிந்து கொண்டால் விடுபட்டு விடலாம் தோஷத்திலிருந்து! நமக்கு  ஜாதக அமைப்பும் இருக்க வேண்டும்.

தினமும் காலையில் உலர் திராட்சை (கருப்பு முந்திரிப் பழம்) காகத்திற்கு வைத்து வர நன்மை.  உயிரே போகும் சூழ்நிலையில் இருந்தாலும் அதாவது விதியை மாற்றக் கூடிய சக்தி கிடைக்கப் பெறுவீர்.

இதைத் தவிர வன்னி மர விநாயகருக்கு பச்சரிசி மாவு படைத்து வருதலும் சனிக் கிழமைகளில் விரதம இருந்து எள் கலந்த தயிர் சாதம் படைத்தலும மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும் .

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் (சோறு) வைத்து வரும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா?! இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசிர்வாதம் கூட இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் அருகே நெருங்காது.

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கம் வராது! கடன் தொல்லைகள் விலகும். புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் கிடைக்கும்!

உங்கள் முன்னோர்களுக்கு நீங்களே உணவிடும் பாக்கியம்… அவை புண்ணியமாக மாறி பலனைக் கொடுக்க காகத்திற்கு சாதம் வைப்பது சாலச் சிறந்தது.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என எதிர்பார்க்கும் சுமங்கலிப் பெண்களுக்கு காக்கை வழிபாடு உத்தமம். உடன் பிறந்தோர் பாசமாக இருக்க வேண்டும் என்பவர்களும் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து ,ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து காகத்திற்கு படைப்பது உத்தமம்.

காகததிற்கு சாதம் வைப்பதால் சனியும் எமனும் சந்தோஷம் அடைவார்களாம்! சனி தோஷம் உள்ளவர்கள் வாழை இலையிட்டு பச்சரிசி பரப்பி தேங்காயில் எள் தீபம் போட்டு வர சனி தோஷ நிவர்த்தி ஆகி, சுபிட்சம் உண்டாகும்.

– பரிகார ஜோதிடர் S. காளிராஜன்

ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம், கீழத்தெரு, இலத்தூர் – 627803.
தொடர்புக்கு:9843710327

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...