காளிதாசரின் உத்தர காலாமிர்தம் கூறும் முதல் இரவு… காளிதாசரும் புது கணவன், மனைவி எந்த நாளில் சேர்ந்தால் எந்த விதமான குழந்தை பிறக்கும்… வருங்காலத்தில் எவ்வாறு சிறக்கும் என்பதை அவர் அவரது நூலில் கூறியுள்ளார்.

மாதவிடாய் முடிந்து நீராடிய நாள் முதல் 12 நாட்கள் கருக்கமலம் அதாவது (கருப்பைப் பை ) வாய் திறந்திருக்கும்! இந்த நாட்களில் தம்பதிகள் இணைந்தால் சிப்பியில் முத்தைப் போலவும், அருகம்புல் நுனியில் இருக்கும் பனித்துளி போலவும் அழகான குழந்தை அப்பெண்ணின் கருப்பையில் உருவாகும்.

இந்த 12 நாட்களில் எந்தெந்த நாளில் சேர்ந்தால் எந்த மாதிரியான குழந்தை பிறக்கும்  என்பதை காளிதாசர் இவ்வாறு குறிப்பிடுகிறார்..

பெண்ணானவள் மாதவிடாய் ஏற்பட்டு நீராடிய பின், தனது கணவனுடன்
4 வது நாளில் சேர்ந்தால் பிறக்கும் குழந்தை சிறந்த கல்வியாளனாக இருக்கும்.

5 வது நாளில் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தை திருட்டு மற்றும் தகாத வழியில் நடக்கும் குணமுடையதாக இருக்கும்.

6வது நாளில் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த தவ வலிமையும் ஞானமும் உடையதாக இருக்கும்.

7 வது நாளில் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தை கொடைத் தன்மை மிகுந்ததாகும், தயை தாட்சண்யம் கொண்டதாகவும் இருக்கும்.

8வது நாளில் : சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை தரித்திரம் உடையதாகவும், துயரங்களை அடைவதாகவும் இருக்கும்

9 வது நாளில்: சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையானது செல்வச் செழிப்பு மிக்கதாக இருக்கும்.

10வது நாளில்சேர்ந்தால்: பிறக்கும் ஆண் குழந்தையானது காமம் மிகுந்ததாகவும், பெண் மோகம் கொண்டதாகவும் இருக்கும்.

11வது நாளில் : சேர்ந்தால் பெண் குழந்தையானது கெட்ட நடத்தை உடையதாக இருக்கும்.

12 வது நாளில் : சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது சிறந்த பாண்டித்தியமுடைய நிபுணனாகவும், கல்வி கேள்விகளில் வல்லவனாகவும் விளங்கும்.

13வது நாளில் : சேர்ந்தால் பெண் குழந்தையானது நோய் உடையதாக இருக்கும்.

14வது நாளில் :சேர்ந்தால் பிறக்கும் ஆண்குழந்தை ஈனனாகவும் துஷ்டனாகவும் இருக்கும்.

15வது நாளில் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையும் 16வது நாளில் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையும் சிறந்த யோகியாகவும், ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகவும் இருக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைக் கடைபிடித்து வர அதற்கு ஏற்ப குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

பரிகார ஜோதிடர் S. காளிராஜன்

ராஜஸ்ரீ ஜோதிட நிலையம், தாந்த்ரீக பரிகார ஜோதிடம்.
இலத்தூர் – 627803
திருநெல்வேலி மாவட்டம் .

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...