செவ்வாய்க் கிழமை ராகுகால பூஜை… இது! எந்த ஒரு செயலையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கினால் அந்த வேலை இனிதே நடந்து நற்பலன்கள் கொடுக்கும் என்பது நம்பிக்கை.

சித்த யோகம், அமிர்தயோகம், என மங்களங்கள் தரும் வெள்ளிக்கிழமை, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கிழமைகளை புகழ்வார்கள். ஆனால் ராகு காலத்தை நினைத்தால் மிகுந்த அச்சம் கொள்வர். உண்மையில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளுக்கும் பரிகாரங்களுக்கும் உண்டாகும் பலன்களுக்கு எல்லையே இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறலாம்.

ராகு ஒரு ராசியில் ஒன்றரை (11/2)வருட ங்கள் தங்குவார் இதே போல் ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரம் ராகு காலமாகக் கூறப்படுகிறது. ராகு காலம் அமிர்தகாலம் என்று சொல்லப்படுகிறது.

அமிர்தம் அருந்தியவர்களுக்கு எப்படி பூரண ஆயுள் உண்டாகுமோ அது போல் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளுக்கு புண்ணியம் பெருகும். ராகு பூஜையை திருமணத் தடைக்குறியபூஜையாகப் பார்க்காமல் மற்ற துன்பங்களை நீக்கும் பூஜை யாகவும் செய்யலாம் .

ராகு கால அஷ்டமி பூஜை 

இந்த பூஜையைச் செய்வதால் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து சுகங்களையும் பெறலாம். வளர்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் பூஜையை ஆரம்பித்து, தொடர்ந்து ஒன்பது அல்லது பதினாறு அஷ்டமிகள் செய்ய வேண்டும்.

முடிந்த அளவு ஏதேனும் நீர் நிலைகளில் குளித்து விட்டு , தீர்த்தம் எடுத்து வந்து அதனை பூஜையறையில் வைத்து வணங்கி ராகு காலம் முடிந்தவுடன் அந்த தீர்த்தத்தை வீட்டில் உள்ளோர் மேலும் வீடு மொழுகவும் தெளிக்கவும், தேங்காய் வெற்றிலை, பாக்கு அவல், பொரி, புளிசாதம்., தயிர்சாதம் போன்ற ஏதேனும் கலவை சாதம், சுண்டல் ஆகியவற்றில் உங்களால் முடிந்ததை பூஜையில் சமர்ப்பித்து வணங்கலாம்.

இப்பூஜையின் மூலம் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சுகங்களும் எவ்விதத் தடங்கலுமின்றிக் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜை 

செவ்வாய்க்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் இப்பூஜையைச் செய்ய வேண்டும் திருமணத் தடை மட்டுமின்றி வறுமையைத் தீர்க்கவும் இந்தப் பூஜையைச் செய்யலாம். செவ்வாய் தசையில் ராகு புத்தி நடப்பவர்கள். ராகு தசை நடப்பவர்கள், ராகு எட்டாம் இடத்தில் இருந்து தசை நடப்பவர்கள், வெகுக் கஷ்டம் அனுபவிப்பவர்கள் எல்லாரும் இந்த பூஜையைச் செய்யலாம் . விரதமிருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பூஜை முடிந்த பின்பே உணவு உண்ண வேண்டும்.

துர்க்கை சந்நதியில் எலுமிச்சை பழத்தில் நல்ல எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றவும். தயிர் சாதம், எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை முதலிய ஏதாவது ஒன்றை நிவேதனம் செய்யலாம். சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பது நலம். துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாற்றுவதும் நலம் தரும். துர்க்கைக்கு மஞ்சள் நிறப் பூக்கள் பூஜைக்கு ஏற்றது.

அரளி பூ மாலை சாற்றுவது அல்லது அரளி பூ கொண்டு அர்ச்சனை செய்வதும்,உகந்தது. துர்க்கை சம்பந்தமான துதிகளைப் பாராயணம் செய்யலாம் . பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமோ மாங்கல்ய தோஷமோ இருப்பின், இப்பூஜையைச் செய்து வர கணவரின் ஆயுள் விருத்தியாகும்.

புத்திர தேராஷம் உள்ளவர்களும் இப்பூஜையைச் செய்யலாம் ஆண்கள் தொழிலில் கடன் தொல்லைகள் இருப்பின் இப்பூஜையைச் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர்.

– பரிகார ஜோதிடர் S.காளிராஜன்,
ராஜஸ்ரீ ஜோதிட நிலையம்
இலத்தூர், நெல்லை மாவட்டம்
தொடர்பு எண்: 9843710327

https://dhinasari.com/astrology/astrology-articles/87577-if-raghu-with-these-planets-you-should-do-poojas-in-these-days.html

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...