நாளை சந்திர கிரகணம்… ‘இந்த’ ராசிகளில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள்!

வீட்டின் முன்பும் கடைகளின் முன்பும் நர திருஷ்டி போவதற்காக கட்டிய பரங்கிக்காய்களையும் நார் தேங்காய்களையும் எடுத்துவிட்டு புதிதாக கட்டினால் கிரகண திருஷ்டி நீங்கி சுகப் பலன் கிடைக்கும் என்று பண்டிதர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆஷாட பௌர்ணமி அன்று ஏற்படும் கிரக சந்திர கிரகணம் 150 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏற்பட உள்ளது. இந்த ஒரு பகுதி சந்திர கிரகணம் உத்திராட நட்சத்திரம் முதல் பாதத்தில் தொடங்கி இரண்டாம் பாதத்தில் முடிகிறது.

சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பூர்ணிமா அன்று சந்திர கிரகணம் ஏற்படுகிறது. தனுசு ராசி உத்திராட நட்சத்திரத்தில் பிடிக்கப்போகும் கிரகணம். சில ராசிக்காரர்களுக்கு இந்த கிரகத்திற்கு பின் சுப பலன்கள்.

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஜூலை 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடு இரவில் நிகழப் போகிறது. அருணாசலப் பிரதேசத்தின் உட்புற பகுதிகள் சிலவற்றை தவிர இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கிரகணத்தை தெளிவாக காண முடியும். இதனை கேது கிரக சந்திர கிரகணம் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள்.

செவ்வாய் நடு இரவு 1.30 மணிக்கு தனுசு ராசி உத்திராட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் ஆரம்பமாகி விடிகாலை 4. 31க்கு மகர ராசி உத்திராடம் 2-ம் பாதத்தில் முடிகின்றது. இந்த கிரகணத்தால் எந்த ராசிகளில் பிரபாவம் ஏற்படும் என்பதையும் ஜோதிடர்கள் விவரித்துள்ளார்கள்.

மொத்தம் 178 நிமிடங்கள் நிகழும் இந்த கிரகணம் உத்தராடம், பூராடம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மீதும், தனுசு மகர ராசிக்காரர்களின் மீதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு தீமை.

துலாம் கும்ப ராசிக்காரர்களுக்கு மத்தியமம்.

மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், மீன ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்திற்குப் பிறகு சுப பலன்கள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள்.

உத்தராடம், பூராடம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், தனுசு, மகர ராசிகளைச் சேர்ந்தவர்கள் இந்த கிரகணத்தை பார்க்க வேண்டாம் என்கிறார்கள்.

இரவு 8 மணிக்கு முன்பே உணவை முடித்துக்கொள்ளவேண்டும். இந்த ராசிக்காரர்கள் கிரகணம் விட்ட பின்னர் ஸ்நானம் செய்து இஷ்ட தெய்வத்தை பூஜிக்க வேண்டும்.

சிவ பஞ்சாக்ஷரி மந்திரம் ஜெபம் செய்வது சுப பலனை தரும். கிரகணம் ஏற்பட்ட 11 நாட்களுக்குள்ளாகவே சிவாலயங்களில் ருத்ராபிஷேகம் செய்தால் பரிகாரம் ஆகும்.

அதே போல அரிசி கொள்ளு வெள்ளியாலான சந்திர பிம்பம், நாகம் போன்றவற்றை பிராமணர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு செய்வதால் கிரக தோஷத்திலிருந்து விடுபடலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

சாஸ்திரிய முறைகளை அனுசரிக்கும் ஹிந்துக்கள் கிரகணத்தின் முன்பும் கிரகணத்தின் போதும் கிரகணம் விட்ட பின்னும் ஸ்நானம் செய்து தியானம் செய்ய வேண்டும். கிரகணம் விட்ட பின் வீட்டை சுத்தம் செய்து கடவுள் விக்கரகங்களை சுத்தம் செய்து புதிதாக பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

வீட்டின் முன்பும் கடைகளின் முன்பும் நர திருஷ்டி போவதற்காக கட்டிய பரங்கிக்காய்களையும் நார் தேங்காய்களையும் எடுத்துவிட்டு புதிதாக கட்டினால் கிரகண திருஷ்டி நீங்கி சுகப் பலன் கிடைக்கும் என்று பண்டிதர்கள் தெரிவிக்கிறார்கள்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...