குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: தனுசு

எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு ராசியினரே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்யமாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். தொலைநோக்கு சிந்தனை உடைய அதேநேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றும் திறன் உடையவர்கள். தெய்வ நம்பிக்கை அதிகமாக இருப்பவர்கள். இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருந்த ராசிநாதனான குருபகவான் இனி உங்களது லாபஸ்தானத்தில் நட்பு வீட்டில் சஞ்சாரம் செய்யப்போகிறார். இங்கிருந்து உங்களது தைரிய வீர்ய ஸ்தானம், பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம், சப்தம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருந்த ராசிநாதன் குருபகவான் இனி உங்களது லாபஸ்தானத்தில் நட்பு வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து உங்களது தைரிய வீர்ய ஸ்தானம் – ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் – சப்தம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது அஷ்டம ஸ்தானத்திலும் கேது தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சனி விரய ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதனால், பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ராசிக்கு 9ல் சூரியன், சனி, புதன் சஞ்சாரம் இருப்பதால் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழக வேண்டும்.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்க ளுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணவிஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். மேலிடத்திலிருந்தும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை வந்தடையும்.

கலைத்துறையினருக்கு புகழ் சேர்க்கும் விதமாக வேலைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பணத்தை எதிர்பார்த்ததை விட புகழ் சேர்க்கும் விதமாக அமையும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

அதிசாரம் மற்றும் வக்ர கால பலன்கள் – 14 பிப்ரவரி 2018 முதல் 04 ஜூலை 2018 வரை:

முக்கியத் திட்டங்கள் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களை அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சகஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பணவரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள்.

மூலம்:
எந்தக் காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும்.

பூராடம்:
பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:
வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரவு இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

பரிகாரம்: தேவாரப் பாக்கள், திருவாசகம் ஆகியவை படித்து சிவனை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்க ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லலாம். இயலாவிட்டால் ஒலியை இசைக்க விட்டு காதால் கேட்கலாம்.

மலர் பரிகாரம்: துளசி தளத்தை பெருமாளுக்கு வியாழன் தோறும் சமர்ப்பித்து வணங்கிவர அவரின் கிருபை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை.

அதிர்ஷ்ட எண்: 9, 3.