spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2019: பொது தகவல்கள்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: பொது தகவல்கள்!

- Advertisement -

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவகோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்ற வாக்கு சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி. இணையங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு இதழ்களில் ஜோதிடக் கட்டுரைகள், ராசி பலன்கள், ஜோதிடக் குறிப்புகள் இவற்றை எழுதியுள்ளார். இவரது துல்லியமான பொதுப் பலன்கள் பலரது நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றவை!

நம் தினசரி இணைய வாசகர்களுக்காக ஜோதிடர் கணித்துத் தந்த பலன்கள்…

ஆசிரியர்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
குரு பெயர்ச்சி  திரு கணித பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை நவம்பர் 4, 2019 2:39 PM இந்திய நேரப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் நவம்பர் 20, 2020 9:15 PM வரை தனுசு  ராசியில் சஞ்சரிக்கிறார்.

குரு பெயர்ச்சி  வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை அக்டோபர் 29, 2019 4:25 AM இந்திய நேரப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் வரை நவம்பர் 15, 2020 10:06 PM தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.

அடியேன் திருகணிதத்தை ஒட்டி பலனை எழுதி இருக்கிறேன்.

குரு பகவான் மார்ச் 30, 2020 முதல் 90 நாட்களுக்கு மகர (Makara Rasi) ராசியில் அதி சாரமாக சஞ்சரிக்கிறார். குரு பகவான் வக்கிரம் அடைந்து மீண்டும் ஜூன் 30, 2020 -ம் தேதி தனுசு ராசியை வந்தடைகிறார்.

ஜனவரி 23, 2020 அன்று சனியும் தனுஷ் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார் . சனி பகவான் ஜனவரி 16, 2023 வரை மகர ராசியில் தங்கியிருபார். சனி 2022 ஆம் ஆண்டில் ஆதி-சாரமாக சிறிது நேரம் கும்ப ராசியில் சஞ்சரிப்பார்.

ராகு மிதுனா ராசியிலும் மற்றும் கேது தனுஷு ராசியிலும் செப்டம்பர் 25, 2020 வரை இருப்பார், பின்னர் முறையே ரிஷப ராசி மற்றும் விருச்சிக ராசிக்கு பின்னோக்கி செல்வார்கள்.

இந்த குரு பெயர்ச்சி கால கட்டத்தில் இருக்கும் முக்கியமான கிரக அம்சங்கள்:

1. குரு, சனி மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் தனுஷு ராசியில் நவம்பர் 04, 2019 முதல் ஜனவரி 23, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள்.
2. குரு, செவ்வாய் மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் தனுஷு ராசியில் பெப்ரவரி 08, 2020 முதல் மார்ச் 22, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள்.
3. குரு, சனி மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் மகர ராசியில் மார்ச் 30, 2020 முதல் மே 05, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள். குரு பகவான் மகர ராசியில் அதி சாரமாக 90 நாட்களுக்கு மார்ச் 30, 2020 வரை சஞ்சரிப்பார்.
4. சுக்கிர பகவான் மே 13, 2020 முதல் ஜூன் 25, 2020 வரை வக்கிரம் பெற்று சஞ்சரிப்பார்.
5. செவ்வாய் செப்டம்பர் 9, 2020 முதல் நவம்பர் 14, 2020 வரை வக்கிரம் பெற்று சஞ்சரிப்பார்.

கிரகங்கள் தங்களது சேர்க்கை மற்றும் வக்கிரம் என்று குறுகிய கல கட்டத்தில் மாறி மாறி சஞ்சரிப்பதால், மக்களின் அதிர்ஷ்டங்கள் அடுத்த ஓராண்டு கால கட்டத்திற்கு அடிக்கடி மாறுபடும்.

* மேஷ ராசி, மிதுன ராசி, சிம்ஹம் ராசி, விருச்சிகம் ராசி, கும்ப ராசி மற்றும் மீன ராசி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்கள் அதிகம்  கிடைக்கும்

* கடக ராசி மற்றும் துலா ராசியில் பிறந்தவர்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்த பலன்கள் கிடைக்கும்.

* ரிஷப ராசி, கன்னி ராசி, தனுஷு ராசி மற்றும் மகர ராசி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். ஜனன ஜாதகத்தை ஒட்டி பலன்கள் அமையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் – 2019-20 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

குறிப்பு :-

இங்கே கொடுக்கப் படும் 12 ராசிகளுக்குமாக பலன்கள் பொதுவானவை. அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை அருகில் இருக்கும் ஜோதிடரிடம் காட்டி குருவின் நிலை, சனி, ராகு, கேதுக்களின் நிலையையும் அறிந்து உங்கள் சரியான பலன்களை பெறுவதே உத்தமம் ஆகும்.

மேலும் பரிகாரம் என்பது பிரம்மாண்டமாகப் பூஜைகள் ஹோமங்கள் செய்வது, க்ஷேத்திராடனம் என புனித தல யாத்திரை செல்வது மட்டுமே என்று எண்ண வேண்டாம்.

தங்களால் முடிந்த அளவு அன்னதானம் வஸ்திர தானம், ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி தானம், வறிய பெண்களுக்கு மாங்கல்ய தானம், முதியோர்களுக்கு சரீர ஒத்தாசை ஆகியவற்றைச் செய்தலும் நற்பலன் தருபவையே.

சர்வே ஜனோ சுகினோ பவந்து: எல்லோரும் இன்புற்றிருக்க இறையருள் கைகூடட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe