Home ஜோதிடம் குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் – கன்னி ராசி (உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய)

gurupeyarchi-2020
gurupeyarchi-2020

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
குரு பெயர்ச்சி பலன்கள் – கன்னி ராசி
(உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய)

குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

kanni2020table

குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.
சனி –  மகரத்தில்
ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
மேஷம் 24.12.2020  
ரிஷபம் 22.02.2021  
விருச்சிகம்  27.11.202011.12.2020
தனூர்16.12.2020 17.12.202004.01.2021
மகரம்14.01.2021 05.01.202128.01.2021
கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
மீனம்15.03.2021 01.04.202117.03.2021

பொது : குரு பார்வை பெறுவது சிறப்பு, குரு 5ல் பெயர்ச்சியாகிறார் இதுவரை இருந்துவந்த தொல்லைகள் பூரணமாக விலகுகிறது. ராசிநாதன் புதன் 2ல் ஆரம்பித்து 7 வரை செல்கிறார் ராசிக்கு பலமாகவே அவர் இருக்கிறார். சுக்ரன் சூரியனும் பலம், பொதுவில் 9ல் ராகு மட்டும் கொஞ்சம் சலனம் கொடுக்கும். குடும்ப செலவுகளை அதிகரிக்கும். இருந்தாலும் பெரும்பாலான கிரஹங்கள் சாதகமாக இருப்பதால் பணம் பலவழியிலும் வந்து பொருளாதார ஏற்றம் இருக்கும். 3ல் இருக்கும் கேது புகழை பரப்புவார். சுக்ரனும் தன் பங்குக்கு செல்வம், ஆடை ஆபரண சேர்க்கை, குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், அதனால் உறவினர் நெருக்கம், நினைத்த காரியம் கைகூடுதல், சமூக அந்தஸ்து, புதிய வீடு குடிபோகுதல் ராகுவின் பார்வை 7ம் இடத்துக்கு இருந்தாலும் சனியின் பார்வையும் இருப்பதால் வாழ்க்கை துணைவர் வழியில் லாபமும் இருக்கும் சிறு செலவுகளும் இருக்கும். பொதுவில் நன்மை அதிகம். உங்கள் திட்டங்களை செயல்படுத்தலாம்

குடும்பம்: கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். 7ம் இடத்துக்கு சனி ராகு பார்வை இருந்தாலும் அங்கு செவ்வாய் இருக்கும் காலம் வரை (24.12.2020) வரை நன்மையே இருக்கும். மற்ற கிரஹங்களும் புதனும் நன்மை செய்வதால் புதிய வரவுகள் சுப நிகழ்ச்சிகள் பிள்ளைகளால் பெருமை, உறவுகளின் ஒற்றுமை என்று நன்றாகவே இருக்கும்.மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆரோக்கியம் : பொதுவில் 6க்குடையவர் 5ல் குருவுடன் சேர்ந்து இருக்கிறார். பெரிய பாதிப்புகள் இல்லை எனினும் குழந்தைகள் மூலம் சிறு வைத்திய செலவு வரும். 7ம் இடம் ராகுவால் பார்க்கப்படுவதால் வாழ்க்கை துணைவருடைய உடல் நலம் சிறு அளவில் பாதிக்கப்படும். சனியால் ஓரளவு சரியாகும். பெற்றோர் உடல் நலத்திலும் அக்கறை தேவை வைத்திய செலவுகள் இருந்து கொண்டிருக்கும். தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

உத்தியோகம் : மீடியா, எழுத்து துறை, கணக்கர், ஆசிரியர், ரானுவம்,போலீஸ் ஹெச் ஆர் துறை, கருவூலம், வங்கிகளில் எழுத்து பணியில் இருப்போர், கோயில் பணிசெய்வோர், திருப்பணி செய்வோர் போன்றோருக்கு ஏற்றகாலம் பதவி உயர்வு சம்பள உயர்வு இருக்கும். பாக்கியத்தில் ராகு இருப்பதால் வேலை பளுவும் அதிகரிக்கும். இருந்தாலும் இடையூறுகள் குறைவாக இருக்கும். விரும்பிய இடமாற்றம், புதிய பணி கிடைத்தல், அரசாங்க ஆதரவு என்று நன்றாகவே இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை கொள்ளுங்கள். நல்ல காலம் வரும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

சொந்த தொழில் / வியாபாரம் : கலைத்துறை, டிவி, எழுத்து, ப்ரோகிதம், ஜோதிடம், ஆடிட்டிங்க், வங்கி, நகை/ஆபரணம் விற்பனை, வீட்டு உபயோக பொருள் விற்பவர், தயாரிப்பவர் இவர்களுக்கு நன்றாக இருக்கு. மற்ற தொழிலும் ஓரளவு பரவாயில்லை, 9ல் ராகு கொஞ்சம் சங்கடம் கொடுக்கும் கவனமுடன் இருக்கவேண்டும். எதிர்கள் தொல்லை தருவர். அரசாங்கத்தோடு அனுசரனையான போக்கு வேண்டும். கடன் வாங்குவதில் கவனம் தேவை, சிலர் தொழில் விஸ்தரிப்பு புதிய தொழில் ஆரம்பிப்பர் பிப்ரவரி 2021க்கு மேல் வளர்ச்சி பெறும்.

விவசாயி : பூமிகாரகன் செவ்வாய் 7ல் மற்றும் 8,9ல் இந்த குருபெயர்ச்சியில் சஞ்சரிப்பதாலும் குரு அனுகூலம் இருப்பதாலும் மகசூல் நன்றாக இருக்கும் இரட்டை வருவாய் இருக்கும். புதிய பணப்பயிர்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். அதை கொண்டு புதிய நிலம் வாங்கலாம். வழக்குகள் சுமூக தீர்வு வரும். வீட்டில் சுப நிகழ்வுகள் மூலம் செலவு வரும் மகிழ்ச்சியான நிலை இருக்கும்.

அரசியல்வாதி : சூரியன் சஞ்சாரம் வலுவை தந்தாலும் 14.01.2021 – 15.03.2021 காலகட்டம் கொஞ்சம் மன சஞ்சலம், பொருள்விரயம் பெயர் கெடுதல் என்று இருக்கும் கவனம் தேவை வாக்கு கொடுப்பதில் எச்சரிக்கை அவசியம். குரு மற்றும் பல கிரஹங்கள் சாதகமாய் இருப்பதால் பதவி, பணம், சமூக அந்தஸ்து புகழ், மேலிட செல்வாக்கு என்று நன்றாக இருக்கும். வாய்ப்பை பயன்படுத்தி அதேநேரம் நிதானத்துடன் இருந்தால் பெரிய தொல்லை இல்லை

மாணவர்கள் : புதன் சாதகம், சூரியன் சாதகம், மற்ற கிரஹங்களும் ஓரளவு அனுகூலம், படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள், புதிய பாடதிட்டம் பயன் தரும், விரும்பிய கல்லூரி, படிப்பு எண்ணம் ஈடேறும், பந்தயங்களில் வெற்றி, அயல்நாட்டு படிப்பு சிலருக்கு கிட்டும். பொதுவில் இந்த பெயர்ச்சி முழுவதுமே நன்றாக இருக்கும் சங்கடம் குறைவு.

திருமணம் : 7க்குடையவர் 5ல், மேலும் ராசியை பார்க்கிறார் தடைபட்டுவந்த திருமண ஏற்பாடுகள் கைகூடும். இந்த பெயர்ச்சிக்குள் திருமணம் அமையும்.

குழந்தை : 5ல் 5க்குடையவருடன் இருப்பதால் சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். தசாபுக்திகள் சாதகமாய் இருக்கிறவர்களுக்கு குழந்தை உண்டாகும்.

பெண்கள் : மகிழ்ச்சியான பெயர்ச்சி, பல கிரஹங்கள் சாதகம், ஆடை ஆபரண சேர்க்கை, சொத்து சேர்தல் குடும்பத்தில் குதூகலம், எண்ணம் ஈடேறுதல், கணவர் பெற்றோர் பிள்ளைகள் என்று எல்லோரும் உங்கள் பேச்சை கேட்பர். உறவுகள் பலப்படும். உத்தியோகஸ்தர்களும், சொந்த தொழில் செய்வோரும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பணத்தை சேம்ப்பர். யாத்திரைகள், விருந்து கேளிக்கைகள் என்று சென்றுவருவார்கள்.

ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

ravisarangan-lakshminarasimhan

குருபெயர்ச்சி பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block1, Alsa Green Park Appartment
Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus
Chrompet, Chennai – 600 044
Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)
Email : mannargudirs1960@gmail.com.

தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…! 

https://dhinasari.com/astrology/guru-peyarchchi

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மேஷம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: ரிஷபம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: சிம்மம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்

Show comments