spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்

- Advertisement -
gurupeyarchi-2020

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
குரு பெயர்ச்சி பலன்கள் – மீனம் ராசி
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய)

meenam rasi
meenam rasi

குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

dhanushu2020table

குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.
சனி –  மகரத்தில்
ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
மேஷம் 24.12.2020  
ரிஷபம் 22.02.2021  
விருச்சிகம்  27.11.202011.12.2020
தனூர்16.12.2020 17.12.202004.01.2021
மகரம்14.01.2021 05.01.202128.01.2021
கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
மீனம்15.03.2021 01.04.202117.03.2021

பொது : லாபஸ்தானத்தில் அடியெடுத்துவைக்கும் ராசியாதிபதி குரு, லாபாதிபதி சனியுடன் இணைவு ஒரு யோகத்தை தருகிறது. ராகுவும் 3ல் பலமாய் கீர்த்தி பெருகுதல் பணவரவு, புகழ் அதிகரித்தல், செயல்களில் வெற்றி, புது வீடுவாகனம் வாங்குதல், குடும்பத்தில் மகிழ்ச்சி செல்வம் பெருகுதல், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள், ஒற்றுமை, சமூக அந்தஸ்து என்று தரும். சுக்ரன் சூரியன் இரண்டும் கலந்து கட்டி நன்மை தீமை இரண்டையும் தரும். வருமானம் ஆடை ஆபரண சேர்க்கை, விருந்து கேளிக்கைகள் புனித யாத்திரை என்று தரும் அதேபோல கொஞ்சம் சோர்வு, பணம் பலவிதங்களிலும் பாழாகுதல்,வீன் வம்பு வழக்கு என்று தரும். புதன் டிசம்பர் வரை வீண்பழி அலைச்சல், ஞாபக மறதி பெற்றோருக்கு பாதிப்புகள் என்றும் அதன்பின் ஆரோக்கியம் பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சி தேவைகள் பூர்த்தி என்று இருக்கும். செவ்வாய் பிப்ரவரி முடிய நன்மை செய்யாது. குடும்பத்தில் சண்டை சச்சரவு அக்கம்பக்கத்தாரோடு வாதம், அபகீர்த்தி என்று செய்யும் பிப்ரவரிக்கு பின் ஓரளவு சுகம் தரும். கேது 9ல் பெயர்ச்சி முடிய பொருள் விரயம் தந்தை உடல் பாதிப்பு மருத்துவ செலவு என்று இருந்து கொண்டிருக்கும்.நன்மை தராது.

குடும்பம்: பொதுவில் பல கிரஹங்கள் நன்மை செய்வதாலும் குரு சனி பார்வைகளும் நன்மை தருவதாலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வரவு கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளால் பெருமை, சுபகாரியங்கள் யாத்திரைகள், தெய்வ அனுகூலம் என்று இருக்கும். பெரிய தொல்லைகள் இருக்காது.

ஆரோக்கியம் : செவ்வாய் உடல் உஷ்ணம், ரத்தம், இருதயம், காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும், ராகு பார்ப்பதால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தரும், வைத்தியசெலவு குருவால் கட்டுப்படும். பெற்றோர் வாழ்க்கை துணைவர் உடல் நலமும் பாதிப்படைந்து வைத்திய செலவு இருந்து கொண்டிருக்கும். சாப்பாடு கவனம் தியானப்பயிற்சி, இவற்றால் ஓரளவு நன்மை இருக்கும்.

உத்தியோகம் : பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய உத்தியோகம் இடமாற்றம், வெளிநாட்டு வாய்ப்பு, வேலையில் உற்சாகம், மேலதிகாரிகள் பாராட்டு, இரட்டை வருமானம், நல்ல பெயர், விரும்பிய இடம் மாறுதல் சேமிப்பு என்று நன்றாகவே இருக்கும். வேலை பளு இருந்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்வதால் பெரிய கஷ்டம் இல்லை. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு இருக்கும். இப்பொழுது கஷ்டப்பட்டு செய்யும் வேலைக்கு அடுத்த கும்பராசி குருப்பெயர்ச்சியின் போது இரட்டிப்பாக பலன் உண்டாகும்.

சொந்த தொழில் / வியாபாரம் : பொருளாதார நிலை மேம்படும், புதிய தொழில் தொடங்குதல், விஸ்தரிப்பு, நாள்பட்ட சரக்கு விற்பனை, போட்டிகளை எதிரிகளை எளிதாக சமாளிக்கும் மனோ தைரியம், தொழிலாளர்களின் ஒத்துழைப்பு, அரசாங்க ஆதரவு, வங்கி கடன், ஆர்டர்கள் குவிதல், உற்பத்தி பெருகி அனைத்தும் விற்பனை ஆதல் என்று இருக்கும் அதேநேரம் கணக்குவழக்குகளை சரியாக வைத்திருத்தல், பணத்தை சேமித்தல் என்று இருப்பது நலம் தரும்.

விவசாயி : விளைச்சல் அதிகரிக்கும். கால்நடையால் மருத்துவ செலவுகளும் இருக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பழைய வழக்குகள் தீர்வு சாதகமாக வரும் வார்த்தைகளை விடுவதால் புதிய வழக்குகளில் சிக்க நேரிடும். கவனம் தேவை, குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் புதிய நிலம் வாங்கும் முயற்சிகள் பிப்ரவரிக்கு பின் நிறைவேறும். எதையும் யோசித்து செய்வது நலம் தரும்.

அரசியல்வாதி : பதவி தேடி வரும், புகழ் செல்வாக்கு அந்தஸ்து உயரும், எதிரிகள் காணாமல் போவர், தொண்டர்கள் ஆதரவு கூடும், பணப்புழக்கம் தாராளம், உடல் ரீதியான மருத்துவ செலவுகள் உண்டாகலாம் கவனம் தேவை எவரையும் நம்பி திட்டங்களை சொல்ல வேண்டாம். பெரிய அளவில் பாதிக்காது எனினும் சிறு சங்கடங்களை தரும். பொதுவில் நன்றாக இருக்கு

மாணவர்கள் : படிப்பில் உற்சாகம் இருந்தாலும் ஜனவரிக்கு மேல் இன்னும் நன்றாக இருக்கும். பொறுமையும் பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டுதல் படி நடத்தலும் நலம் தரும். ஜனவரிக்கு மேல் விரும்பிய பாடம், கல்லூரி, அயல்நாட்டு படிப்பு திட்டம் நிறைவேறும். பந்தையங்களில் வெற்றி உண்டாகும்.

திருமணம் : 7ம் இடம் குருவால் பார்க்கப்படுவதால் திருமண முயற்சிகள் வெற்றி பெரும். தசாபுக்திகளும் சாதகமாயிருந்தால் திருமணம் கைகூடும்.

குழந்தை : 5க்குடைய சந்திரனின் திருவோண நக்ஷத்திரக்காலில் குரு பயணிக்கும் காலத்தில் டிசம்பர் கடைசி, பிப்ரவரி முடிய குழந்தை உற்பத்தியாகும். ஜனன ஜாதகத்தில் 5க்குடையவர் தசை புக்திகள் நடந்தால் குழந்தை பிறக்கும்.

பெண்கள் : மகிழ்ச்சி அதிகரிக்கும், வேலையில், குடும்பத்தில், சொந்த தொழிலில் என்று பொருளாதாரம் சமூக அந்தஸ்து புகழ் கீர்த்தி பெருகி நினைத்த முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை, விருந்து கேளிக்கைகள், தீர்த்த யாத்திரை, வெளியூர் வாசம், ஆரோக்கியம் என்று எல்லாவிதத்திலும் நன்றாகவே இருக்கும்.

ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

ravisarangan-lakshminarasimhan
ravisarangan lakshminarasimhan

குருபெயர்ச்சி பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block1, Alsa Green Park Appartment
Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus
Chrompet, Chennai – 600 044
Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)
Email : [email protected].

தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…! 

https://dhinasari.com/astrology/guru-peyarchchi

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மேஷம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: ரிஷபம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: சிம்மம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe