-Advertisement-
Home ஜோதிடம் குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி : மகரம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)

குரு பெயர்ச்சி : மகரம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)

ஓம் நமோ நாராயணா என்று காலை இரவு 108 தடவை உச்சரிப்பது மன உறுதியை தந்து சங்கடங்களை போக்கும். முடிந்த அளவு தான தர்மங்களை

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – மகரம்

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.

இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…

குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@gmail.com


மகரம் : (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 4பாதங்கள், அவிட்டம் 1,2 பாதம் முடிய) :

10 makaram

பொது (பொருளாதாரம், ஜீவனம்): வருடம் முழுவதும் ராசிநாதன் ராசியில் ஆட்சி அதோடு குருபகவான் 2லும், ஜென்மத்திலும்,பின் 2லுமாக சஞ்சாரம், ஜென்மகுரு சிறைவாசம் என்று சொல்லப்பட்டாலும், பெரியதாக பாதிப்பு இல்லை, சில விஷயங்கள் கட்டுப்பட்டு, சில முயற்சிகள் தாமதம் என்ற நிலையில் இருக்கும்.

13.06.21 – 14.11.21 வரையிலான காலங்கள் மந்தமாக இருக்கும், வேலை பளு, வருமானத்தில் தொய்வு என்று இருக்கும். வரும் 06.04.21 – 13.06.21 வரையில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி பண சேமிப்பை அதிகரித்து வைத்துகொண்டாலும் முயற்சிகளில் உண்டாகும் வெற்றியை தக்கவைத்து கொண்டாலும் அடுத்த மூன்றுமாதங்களை சமாளித்து விடலாம். 14.11.21 முதல் நல்ல காலம் திரும்ப ஆரம்பிக்கும்.

பொதுவாக பொருளாதார ஏற்றம் இருக்கும் பண வரவு தாராளமாக இருக்கும். அதை சேமித்தால் நலம் தரும். மேலும் குருபகவான் பார்வை சனிபகவான் பார்வை இரண்டும் வீடு வாகன யோகம், இல்லத்தில் சுப நிகழ்வுகளால் புதிய உறவுகள் உண்டாதல், புதிய வேலை, யாத்திரை, விருந்து என்று நன்றாகவே இருக்கும்.

பெரிய சங்கடங்கள் இருக்காது காரணம் மற்ற கிரஹங்களும் பெரும்பாலான நேரங்கள் நன்மை தருவதால் கவலை வேண்டாம். அதே நேரம் 5ல் இருக்கும் ராகு செவ்வாய் இணைவு மருத்துவ செலவு மறதியினால் பொருள் விரயம், புகழ், செல்வாக்கு பாதித்தல் கொடுத்த வாக்கை தவறவிடுதல் போன்ற பாதிப்புகள் பண விரயம், வீண் செலவுகள், மன உளைச்சல் என்று கொடுக்கும். பெரும்பாலும் நன்மை அதிகம் என்பதால் தீமைகளை சமாளித்து விடுவீர்கள்.

குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை இருந்தாலும் விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நலம் தரும். பெற்றோர்கள் மன சங்கடம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாமல் பொறுமை நிதானத்துடன் அவர்கள் பேச்சை கேட்பதும் பிற்காலத்தில் துன்பங்களை குறைக்கும். பிள்ளைகளால் சங்கடம் உண்டாகலாம் நிதானமாக கையாள்வது குடும்ப நிம்மதியை காக்கும். திருமணம் குழந்தை போன்ற சுப நிகழ்வுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆரோக்கியம் : வாழ்க்கை துணவர் வழியிலும், பெற்றோர்வழியிலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம், உங்களுக்கு புண், தலைவலி, வயறு உபாதைகளாலும் மன உளைச்சலாலும் மருத்துவ செலவுகள் இருக்கும். பெரும்பாலும் ஏற்கனவே இருந்து கொண்டிருந்த நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை இருக்கும் புதிய பாதிப்புகள் ஆகார வகையால் உண்டாக கூடும். அதில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

வேலை: உத்தியோகத்தில் வேலை பளு இருந்து கொண்டிருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பதும் பொறுமையை கைகொள்வதும் பதவி உயர்வு, சம்பள உயர்வு இவற்றை தரும். மன உளைச்சல் தரும்படி சக ஊழியர்கள் மேலதிகாரிகள் நடந்தாலும் பொறுமையும் நிதானமும் இருந்து அதை கடந்தால் வெற்றி நிச்சயம். விரும்பாத இடமாற்றமும் உண்டாகும் பொருளாதாரம் பாதிப்பை தராது எனினும் செலவுகளும் கூடுவதால் ஒரு மந்த நிலை போல் இருக்கும்.14.11.21க்கும் நல்ல நிலை இருக்கும். புதிய வேலை முயற்சிகள் பலன் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் 14.11.21க்கு பின்னர் நல்ல சூழல் உண்டாகும்.

சொந்த தொழில் : லாபங்கள் வருவது அதிகரித்தாலும் எதிரி போட்டியாளர்கள் தொல்லையும் இருந்து கொண்டிருக்கும் அதனால் பண விரயம் உண்டாகும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வது கடந்த காலங்களில் ஏற்பட்ட வழக்குகள் சாதமாக இருக்கு பொறுமை நிதானத்தை கடைபிடிப்பது தொலாளர்களோடு மோதல் இல்லாமல் இருத்தல், புதிய முயற்சிகளை 14.11.21க்கு பின் ஒத்தி போடுவது என இருந்தால் நஷ்டம் ஏற்படாது. பெண் கூட்டாளிகளை கொண்ட நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் காணும். அதே போல் கூட்டாளிகளுடன் விவாதம் வேண்டாம் அனுசரித்து போவது நல்ல பலனை தரும். பொதுவில் இந்த வருடம் நஷ்டம் வராது எனினும் சில சங்கடங்கள் வரும் அதனால் கவனம் தேவை.

கல்வி : மாணவர்கள் பெரு முயற்சிக்கு பின்னர் வெற்றி காண்பர். கூட்டாளிகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை புதிய படிப்பு, வெளிநாட்டு கல்வி, விரும்பிய கல்லூரி இவற்றுக்கு பெற்றோர் பெரியோர் ஆலோசனை கேட்டு செய்வது நலம் தரும். போட்டி பந்தயங்கள் பெருமுயற்சிக்கு பின்னர் ஓரளவு வெற்றி தரும். மீண்டும் மேல் படிப்பை தொடங்க விழைபவர்கள் 14.11.21க்கு பின் முயற்சிக்கவும்.

ப்ரார்த்தனைகள் : திருவேங்கடமுடையான், நின்ற திருக்கோல பெருமாள், கோயிலகளில் விளக்கேற்றி வழிபடுவது இஷ்ட தெய்வம் அல்லது ஓம் நமோ நாராயணா என்று காலை இரவு 108 தடவை உச்சரிப்பது மன உறுதியை தந்து சங்கடங்களை போக்கும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்வது நன்மை தரும்.

Show comments
';