குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – கும்பம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.
இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…
குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
கும்பம் : (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்): உங்கள் ராசிக்கு வரும் குருபகவான் 13.06.21 – 14.11.21 வரை மீண்டும் மகரத்தில் 12ம் வீட்டில் சஞ்சரித்து விட்டு பின் உங்கள் ராசியை அடைந்து 13.04.22 வரை சஞ்சரிக்கிறார். ஜனன ஜாதகத்தை பொருத்து கெடு பலன்களின் தாக்கம் இருக்கும். எதிலும் ஒரு மந்த நிலையும், பொருள்விரயம், பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
மற்ற கிரஹங்களில் புதன் சுக்ரன் பெரும்பாலும் நன்மை தருவதால் ஓரளவு நினைப்பது நிறைவேறும். மற்ற கிரஹங்கள் நன்மை தீமை கலந்து செய்கின்றனர். அமைதி பொறுமை, யோசித்து செயல்படுதல், சிக்கனம், சேமிப்பு என்று இருந்தால் ஓரளவு இந்த வருடம் கடந்துவிடும். அவசரப்படுதல் எவரையும் நம்பி பொருப்பை பணத்தை கொடுப்பது என்று இருந்தால் பாதிப்பு அதிகம் இருக்கும்.
பண வரவு குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் சொந்த தொழிலில் அதிக சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது கவனமாக இருப்பது அவசியம். பணப்புழக்கம் சுமாராக இருக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கும். உறவினர்களால் வரும் சங்கடம் பணப்பிரச்சனை இவை மன உளைச்சலை தரும். வாக்குவாதம், எரிச்சலால் வார்த்தைகளை கொட்டுதல் இவை பெரும்பாதிப்பை தரும். இந்த வருடம் வருமானம் சுமார் சுப நிகழ்வுகள் இருந்தாலும் செலவு கட்டுக்கடங்காது, ஒவ்வொரு விஷயத்திலும் பெருமுயற்சி செய்யவேண்டும்.
குடும்பம் : மகிழ்ச்சி ஓரளவு இருந்தாலும் வாழ்க்கை துணைவருடன் அனுசரித்து போவது அவரை கலந்து ஆலோசித்து செய்வது பெற்றோருடன் விவாதம் செய்யாமல் அவர்கள் யோசனையை செயல்படுத்துவது பிள்ளைகள் வழியில் வரும் பிரச்சனைகளை குடும்ப அங்கத்தினருடன் விவாதித்து முடிவெடுப்பது என்று இருந்தால் சந்தோஷமாக குடும்பம் ஓடும்.
ஆரோக்கியம் : ஏற்கனவே இருந்த வியாதிகளின் தாக்கம் 13.06.21 வரை அதிகரிக்கலாம். வாழ்க்கை துணைவர் பெற்றோர்கள் உடல் நிலையிலும் சில மருத்துவ செலவுகளை கொண்டு வரலாம், பயணங்கள் ஒரு ஜாக்கிரதை உணர்வை கொண்டு இருப்பது நலம் தரும். பெரிய பாதிப்புகள் என்பது வருமான குறைவால் மன உளைச்சலை தருவதால் ஆகும். நிதான போக்கை கடைபிடித்து மருத்துவ ஆலோசனை படி நடப்பது தியான பயிற்சி இறை நம்பிக்கை இவை ஓரளவு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வேலை: வேலை பளு அதிகரிக்கும், விரும்பாத இடமாற்றம் இருக்கும் பதவி,சம்பள உயர்வுகள் தன் நாக்கினால் கிடைக்காமல் போகலாம். நிதானமும் பொறுமையும் கொண்டு எவருடனும் சண்டை செய்யாமல் தன் வேலையை சரிவர செய்வது அவசியம் இதன் பலன் 14.11.21க்கு பின் கிடைக்கும். புதிய வேலை கிடைப்பதிலும் ஓரளவு சுமாராக இருக்கும் வேலை பளு இருந்து கொண்டிருக்கும். வேலையில் கவனம் தேவை
சொந்த தொழில் : வருமானம் ஓரளவே இருக்கும் பெரிய லாபங்கள் இருக்காது போட்டியாளர்கள் தொல்லை, ஊழியர்களால் பிரச்சனைகள் அதிக செலவு, அதிக உழைப்பு என்று இருக்கும். புதிய முயற்சிகள் தொழில்விரிவாக்கம் 14.11.21 பின்னரே வெற்றி பெறும். கூடுமானவரையில் கடன்வாங்குவதையும், அரசாங்கத்துடனான மோதலையும் தவிர்ப்பது கணக்கு வழக்குகளை சரிவர வைத்து கொள்ளுதல், கூட்டாளிகளுடன் ஆலோசித்து அவர்கள் சொல்லும் யோசனையை ஏற்று செயல்படுவது பெரும் நஷ்டங்களை குறைக்கும். இந்த வருடம் சுமார்.
கல்வி : மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் நல்ல மதிப்பெண்கள் பெறுவர், ஆசிரியர் பெற்றோர் பாராட்டை பெறுவர். விரும்பிய பாடம், கல்லூரி வெளிநாட்டு படிப்பு இவை கிடைக்கும். இருந்தாலும் கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து செல்வது நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் தகுந்த ஆலோசனைகளை பெறுவது, எவருடனும் மோதல் போக்கு இல்லாமல் இருத்தல் படிப்புக்கு தடைகள் வராமலும் மன உளைச்சல் ஏற்படாமலும் தடுக்கும். பெற்றோர் ஆஸிரியர் ஆலோசனை படி நடப்பது நலம் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
ப்ரார்த்தனைகள் : ப்ரத்யுங்கராதேவி, சாஸ்தா போன்ற தெய்வங்களை வழிபடுவது துர்க்கை கோயிலில் விளக்கேற்றுவது அம்பாள் ஸ்லோகங்களை சொல்வது போன்றவையும், முடிந்த அளவு அன்ன தானம், வஸ்திர தானம் இயலாதவர்களுக்கு சரீர ஒத்தாசை பண உதவி செய்வதும் நன்மை தரும்.