- Ads -
Home ஜோதிடம் நியூமராலஜி நியூமராலஜி: 2ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 2ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 2ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

2, 11, 20, 29ஆம் எண்ணுக்கான பொதுப் பலன்:-
பிறந்த எண் 2-ல் கூட்டு எண் 1

சந்திரனில் சூரியன் சேர்ந்த ஆதிக்கப் பலனை அளிக்கும். அளவான உயரமும், மஞ்சள் நிற மேனியும் கொண்டவர். முடி அதிகமாகவும் புருவம் அடந்தும் காணப்படும். இவர்கள் அழகாகவும் கண்கள் சற்று நீளமாகவும் கொண்டவராக இருப்பர்.

இவர் ஒரு சமயம் உற்சாகமாகவும் மறுசமயம் சோர்வுடனும் காணப்படுவர். எப்போகும் எதையாவது செய்து கொண்டே எதையாவது யோசித்துக் கொண்டே குழப்பமடைவர். கற்பனை வளமும் பேச்சு திறனும் அதிகமாகவே இருக்கும். தெய்வ பக்தி அதிகம் கொண்டவர். தங்களிடம் பிடிவாத குணம் சற்று அதிகமாகவே இருக்கும்.

சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் ஏற்படும். காதலுக்காக எதையும் தியாகம் செய்ய துனிவர். பெற்றோரை பிரிந்து வாழும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திர தோஷம்  உண்டு. வாழ்க்கையில் முற்பகுதி பிரச்சனைக்குரியதாகவும் பிற்பகுதியில் அமைதியும் நிலவும். முற்பகுதி வாழ்க்கை பிறரைச் சார்ந்திருக்கும்.

கல்வி சிறப்பாக இருப்பதால் வக்கீல், மருத்துவராக முடியும். அக்னி, இரும்பு சம்பந்தமான தொழிற்சாலைகளில் பணி செய்யும் வாய்ப்பு உண்டாகும். தேட்டம், விவசாயம், மூலிகை, நெசவுத் தொழில் போன்றவற்றில் வெற்றி காண்பர். பேச்சு திறமையால் தொட்டதெல்லாம் வெற்றி தான் உங்களுக்கு.

வெப்ப மிகுதியால் நோய்கள் பாதிக்கும். கண் நோய், ரத்தக்கட்டி, உயர் ரத்த அழுத்தம், மஞ்கல் காமலை, தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற தொல்லைகள் ஏற்படும். கவனம் செலுத்தினால் குறைய வாய்ப்புள்ளது.

 

பிறந்த எண் 2-ல் கூட்டு எண் 2

சந்திரனுடைய முழுமையான ஆதிக்கத்தைக் காட்டும் எண். பார்க்க சற்று குள்ளமாகவும் அழகாகவும் இருப்பர். பிறரை கவரும் வடிவமிருக்கும், தலை நிறைய முடியும் அடந்த புருவமும் காணப்படும். எப்பொழுதும் துருதுருவென்று இருப்பீர்கள்.

குளிர்ந்த மணம் கொண்டவர். அலைபாயும் மணமும், தண்ணீர் போல ஈரம் உள்ள நெஞ்சினர். நீர் பிறர் உயிரை காப்பது போல் சமயத்தில் பிறருக்கு உதவி செய்து காப்பர். இவரின் அமைதி குணம் பல சாதனைகளை செய்ய தூண்டும். பிடிவாதம் சற்று அதிகமாகவே இருக்கும். மனதில் அச்சமும், குழப்பமும் ஏற்படும்.

குடும்பத்தில் முதலில் குழப்பம் இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமையும். வாழ்க்கையில் இவரை பிறர் அனுசரித்து தான் நடக்க வேண்டும். ஒற்றுமை இருக்கும் அதே சமயம் போரட்டமும் நிலவும்.

இவர் புகைப்படம் பிடித்தல், அழகு, வாசனைப் பொருள், துணிமணி தயாரித்து விற்றல், வேளாண்மை, தோட்டம் போடுதல், மனோதத்துவ மருத்துவராதல், போன்ற தொழிலில் ஈடுபடுவார்கள். இவருக்கு கவிதை எழுதுதல், நடித்தல் பொருத்தமானவை. பிறந்த எண்ணும், கூட்டு எண்ணும் ஒன்றானால் பெயர் எண்படி வாழ்க்கையும் அமையும்.

கபம், மலச்சிக்கல், வாதம் தொடர்பான நோய் ஏற்படும். ரத்தக் கொதிப்பு, மூலம், மனோ கற்பனையால் உண்டாகும் பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்படலாம். காயங்கள், புண்கள் ஆறாமல் தொல்லை தரும் நிலை உண்டாகும்.

பிறந்த எண் 2-ல் கூட்டு எண் 3

இவ்வெண் கொண்டவர்கள் சந்திரனில் குரு சேர்ந்த ஆதிக்கம். நடுத்தர உயரமும், கழுத்து உள்ளடங்கியும் காணப்படுவர். இவரிகளின் நெற்றி அகலமாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படுவார்.

இவர்கள் பேச்சு திறன் அதிகம் கொண்டவராக இருப்பர். தெய்வ பக்தி சாத்திர நம்பிக்கையும் பொது நலத்தில் அதிக ஈடுபாடும் உடையவராக இருப்பார்கள். மன உறுதியும், தந்திரமாக காரியங்களை சாதித்துக் கொள்ளும் திறமையும் இருக்கும். இவர்கள் அடிக்கடி தமக்கு ஆறுதல் கூறுவதையும், புகழுவதும் விரும்ப மாட்டார்.

வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு செயல்படும் குணம் கொண்டவர். கல்வி திறன் அதிகமாக இருப்பதால் கவி எழுதுதல், கட்டுரை புனைதல் ஆகியவற்றில் புலமை பெற்று இருப்பர். பெண்களாயின் பாட்டு முதலிய கலைத்திறமையுடன் குடும்பப் பாங்கும் அமைய நூலறிவும் உள்ளவராக இருப்பர்.

பெரிய குடும்பத்தில் பிறப்பதால் கொஞ்சம் வறுமையும் அதன் பின் வளமையும் இருக்கும். சிறு வயதிலேயே இவருக்கு திருமணம் நடைபெறுவதால் சில பிரச்னைகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் மணவலிமை உடையவர். மதிப்புடன் வாழ்க்கை அமையும், ஆண், பெண் வாரிசுகள் உண்டு.  குடும்பம் கலகலவென இருக்கும், கெஜகேசரி யோகம் அமைந்தாற்போல இவர்கள் வாழ்க்கை உயரும்.

நிறுவனங்கள், பள்ளிகள், அரசுத்துறைகளில் பணி வாய்ப்பும் கிடைக்கும். பாங்க், பணம் புழங்கும் அமைப்புகளில் அதிகாரம் மிக்க பதவிகளில் பணிவாய்ப்பு கிட்டும். கலை சார்ந்த சினிமா, நாடகம், தொலைக்காட்சித் தொடர்களிலும், பாட்டு, கவிதை, எழுத்துத் திறமையால் புகழ் பெறுவர். இது உங்களுக்கு யோகமான பலன்களை தரும் எண்ணாகவே உள்ளது.

தோல் நோய், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அசிடிடி, அல்சர், தலைவலி, மலச்சிக்கல் உண்டாகலாம். வயது மிக சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.

 

பிறந்த எண் 2-ல் கூட்டு எண் 4

சந்திரனுடன் ராகு சேர்ந்த பலனை உடையவர். இவர் சராசரி உயரமும் அழகாகவும் இருப்பார். உடல் ஆரோக்கியத்துடனும் சிரித்த முகத்துடனும் இருப்பார். அறிவை வெளிகாட்டும் அழகான கண்களும், அகன்ற நெற்றியும் அமைந்திருக்கும்.

இவ்வெண் உள்ளவர் பார்த்தவுடன் எதையும் யாரையும் புரிந்து கொண்டு நடக்கும் குணம் கொண்டவர். கல்வி தடைகள் ஏற்படும். சிறு வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும். தன் வாழ்க்கையை தானே பார்த்துக் கொள்வர் பிறரைச் சார்ந்து வாழ மாட்டார். நண்பர்களுடன் அதிகம் பழகும் குணம் கொண்டவர். சிறந்த அறிவாளியாக இருக்கும் இவரை எவரும் வெறுக்க மாட்டார். தொழிலில் அதிக திறமை கொண்டவர்.

பிறந்தது முதல் குடும்ப நிலை தாழ துன்ப நிலையைச் சந்திப்பார். உடல் சிரமம் ஏற்படுவது மட்டுமின்றி கிடைத்த வேலை பார்த்து சிரமப்பட்டுழைத்து நிறையச் சம்பாதிப்பர். வருமானம் பெருகினாலும் ஒரு நிலைத்த அமையாது. குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை சந்திக்கும் நிலை உண்டாகும்.

சிறு சிறு வேலைகள் இருந்தாலும் அதை மனநிறைவோடு செய்வர். இவ்வெண் கொண்டவர் மிகச் சிலரே அலுவலங்களில் பணி புரிவர். பிறருக்கு அடங்கி வேலைச் செய்ய மாட்டார். பல இடங்களில் மாறி மாறி வேலை செய்யும் நிலை உண்டாகும். நிறைய செலவழிப்பது இவர்களின் வழக்கம்.

சாதாரணமாக இவர்கள் நோய் வாய்ப்படுவதில்லை. ஜலத் தொடர்பான நோய்கள் வரும். காய்ச்சல் சிறு வயதில் அடிக்கடி பாதிக்கும். மஞ்சல் காமாலை, கல்லீரல் கோளாறுகள் ஏற்படும். சிந்தனை மிகுதியால் நரம்பு இலேசாகத் தளர்ச்சி காணும். பல்வலி வாய்ப்புண் உண்டாகும்.

பிறந்த எண் 2-ல் கூட்டு எண் 5

சந்திரனுடன் புதன் இணைந்த பலன் பெறுபவர். சிறிய முகம், சிவந்த நிறம். உடல். நடுத்தரமான உயரம் இருக்கும். அழகான தோற்றத்துடன் கவர்ச்சியுடன் எல்லாரும் விரும்பும்படி இருப்பர்.

இவர்கள் பொதுவாக நகைச்சுவை உணர்வு மிக்கவர். அழகான அடைகளை உடுத்தவும் ஆசைப்படுவார். பிறர் பாராட்டுகளை அதிகம் விரும்புவர். தம் அறியாமையை மறைக்க சப்பைக்கட்டு கட்டி ஏதேதோ பேசுவார். அறிவும் புதுமையில் ஆர்வமும், சுறுசுறுப்பும் இவர்களிடம் இருக்கும். பொழதுபோக்கில் அதிக காலம் கழிப்பர். அச்சம் அதிகம் கொண்டவர்.

அதிகம் பேசிக் குழப்புவர். யாராவது குறை கூறினால் மட்டந் தட்டினால் தாங்க மாட்டார். நெருங்கியவரும் இவர்களை சந்தேகிக்கும்படி நடப்பர். எழுத்து. வாதிடல், அரசியல் ஆகியவற்றில் மிகுந்ந ஈடுபாடு இருக்கும். வெளியே ஒன்றும் உள்ளே ஒன்றுமாக வைத்து நடப்பர்.

கல்வி நன்கு கற்று பட்டம் பெறுவர். தமக்கு ஏற்ற தொழிலைச் சரிவரச் செய்து முன்னேறுவர். வருமானம் கூடிக்கொண்டே போகும். இதனால் வீடு, நிலம், தோட்டம் போன்றவற்றை சேரும் யோகநிலை ஏற்படும். மனமொத்த மனைவி, பிள்ளைகள் உண்டு ஆகையால் நல்ல வாழ்க்கை உண்டு.

இவர் வக்கீல் தொழிலுக்கு பொருத்தமானவர். ஆனாலும் படிப்பிற்கு ஏற்றத் தொழிலைவிடத் தமக்குப் பிடித்த தொழிலே செய்வர். நாடகம், கதை, நடிப்பு இவர்கள் மனம் கவரும் தொழில்கள். தனியார் நிறுவனப் பணி புரிந்தாலும் அப்படியே தனித்தொழில் புரிவதில் அதிக நாட்டம் செல்லும்.  நூல் வெளியிடும் பதிப்பகம் நடத்துதல், மருந்து கடை வைப்பது ஆகியவற்றில் சொந்த தொழில் செய்வார்.

இவர்கள் அதிக சுறுசுறுப்பாகவும், அலைந்து திரிந்தும் இயங்குவதால் நரம்புத் தளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு ஹிஸ்டீரியா உண்டாகலாம். இரத்த அழுத்தம், பல் வலி, ஈறு நோய் போன்றவை தாக்க கூடும்.

பிறந்த எண் 2-ல் கூட்டு எண் 6

சந்திரனுடன் சுக்கிரன் சேர்ந்த பலன் உண்டாகும். இவர் சராசரி உயரத்திற்கும் அதிகமாக வளர்ந்த தோற்றமிருக்கும். கவர்ச்சியாகவும் மிக்க அழகான வடிவமும் இவர்களுக்கு இருக்கும். கண்களின் இரப்பை அடத்தியாக அமைந்திருக்கும்.

சிலருக்கு இலேசான மாறுகண் இருக்கலாம். பெண்மை கலந்த தோற்றம் இவர்களுடையது. இவர் அகன்ற நெற்றியும், பரந்து விரிந்த மார்பும், எடுப்பான பின்பக்கமும் வஞ்சனையில்லா சரீரம் கம்பீரமும், கவர்ச்சியும் கொண்டவராக இருப்பர்.

கருணையுடம் அன்பும் நிறைந்தவராக இருப்பர். இவருக்கு கற்பனை, மகிழ்ச்சி, கலையுள்ளம் அதிகமாக அருக்கும். குளிர்ச்சியான மனமும், உடலும் இருக்கும். நல்ல ரசிகராக எதையும் நுட்பமாக ஆழ்ந்து ரசித்து மகிழ்வர். இவர்களுக்கும் இவர்களோடு இருப்பவருக்கும் சாப்பாடு, வசதிகளுக்கு, பொழது போக்குகளுக்கு குறைவிருக்காது.

அபூர்வ வித்தைகள், அற்புதச் சங்கதிகளை அறியத் துடிப்பர். உணச்சி வசப்படுவார். மிகவும் அதிர்ஷ்டமுள்ளவர். இசை, சுவையான சாப்பாடு, நல்ல பட்டாடை, பாதுகாப்பு, வசதியான வாழ்க்கை அடைய வேண்டும் என்று நினைப்பவர்.

பெண் தன்மையுடன் செயலிலும் எண்ணத்திலும் நளினம் உடைய இவர்கள் குடும்ப வாழ்க்கையைப் பெரிதும் விரும்புவர். குடும்பத்தை காபற்ற நிறையச் சம்பாதிப்பர். அலுவலகங்களில் கூடப் பெண்களின் போட்டியை சந்திக்க நேரும்.

மென் தொழில்களான கலை சார்ந்த தொழில்கள் சிறப்பாக அமையும். கவி எழுதுதல், கதை, கட்டுரை இயற்றுதல், நடித்தல், படம் எடுத்தல், பத்திரிகையில் இருத்தல் போன்ற தொழில் அமையும். கர்நாடக இசைப்பாடகர், நடனமணிகள், இசை வாத்திய நிபுணர், இசையமைப்பாளர், பட்டு ஜவுளி, ஜோதிடர் போன்ற பணி வாய்ப்புகளில் இருப்பார்.

சர்க்கரை வியாதி, கண் கோளாறுகள் தாக்கக் கூடும். வயிற்றுவலி, அஜீரண கோளாறு ஏற்படும். வாதம், கபம் தொடர்பான நோய்களில் ஏதாவது உண்டாகலாம்.

 

பிறந்த எண் 2-ல் கூட்டு எண் 7

சந்திரனில் கேது சேர்ந்த பயன் இவர்களுக்கு உண்டாகும். இவர் சதைபிடித்த கன்னமும், எடுப்பான மூக்கு, வட்ட முகம் கொண்டவராக இருப்பர். நிறம் சற்று மாநிறமாகவும், முடி நீண்டும் அடர்த்தியாகவும் காணப்படும். இவரின் கண்கள் இலேசாக மாறுகண் உண்டு. உடலில் பலமிராது பார்வைக்கு போர்வீரர் போல் காட்சியளிப்பார்.

குணத்தில் நல்லவர் ஆன இவர் இயற்கையிலேயே சில தீய நடத்தைக்கு எதிர் ஆனவர். மனித நேயம் மிக்கவர். பெரியவர்களை மதித்து நடப்பவர். மதிப்பு, மரியாதை, மானம் எனப் பார்த்து ஒழுங்காக நடப்பர். தெய்வ நம்பிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். மனச்சாட்சிக்குத் துரோகம் செய்யாமல் நடக்கும் குணம் கொண்டவர்.

தூய ஆடை அணிவர். பேச்சு திறமை சற்று அதிகமாகவே இருக்கும். அதிக விளம்பரப்படுத்திக் கொள்ள அறியார். பொது நல சங்கதிகளையும் அரசியலையும் நன்கு பேசி அலசுவர். சண்டை சச்சரவுகளிலிருந்து விலகிப் போய்விடுவர். எந்த காரியம் எடுத்தாலும் திட்டம் போட்டு கச்சிதமாகக் காரியம் செய்வார். தோல்வி ஏற்பட்டாலும் ஒப்புக் கொண்டு விடுவார். சிறு துன்பம  நேர்ந்தாலும் பெரிதாக தோன்றும் ஆதலால் மிகவும் கவலைப்படுவார். யாருக்கும் தம்மால் துன்பம் நேர்ந்துவிடக் கூடாதெனக் கவனமாக இருப்பார்.

அப்படிடைச் செலவிற்கு சம்பாத்தித்து விடுவார். ஆனாலும் செலவாளியான இவர்களுக்குப் பொருள் பற்றாக்குறை இருக்கும். புகழும் பிரபலமும் இவருக்கு உண்டாகும். இவருக்கு அமையும் வாழ்க்கை துணைவியோடு சிறு சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். சொந்த வீடு, வாசல், வசதி என அனைத்தும் பிற்பாதி வாழ்க்கையில் அமையும். வெளிநாடு வெல்லும் வாய்ப்பு வரும்.

உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, மூட்டுக்களில் வலி, தலைவலி போன்ற உபாதைகளுக்கு ஆட்படலாம். காய்ச்சல், கண் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி வந்து மறையும்.

பிறந்த எண் 2-ல் கூட்டு எண் 8

இவ்வெண் கொண்டவர் நடுத்தர உயரம் கொண்டவராக இருப்பர். சந்திரனுடன் சனி இணைந்த பலனைத்தரும். இரண்டும் சேர்ந்து சூரியன் எண் வருவதால் உயரம் குறைந்து காணப்படுவர். உடல் முழுவதும் முடி நிறைந்திருக்கும். கண்கள் சிவப்பாகவும் புருவங்கள் அடந்தும் காணப்படும். மாநிறமாகவும் உடல் சற்று பருத்தும் காணப்படுவார்.

நல்லவரானாலும் கடுமையான பேச்சு, துளியும் விட்டுத் தராத கறாரான நடத்தை இவரைக் கொடியவராகக் காட்டும். பிடிவாதக்குணம் அதிகம் கொண்டவர். எந்த வேலையையும் தாமே செய்வதை எளிதாக நினைப்பர். பிறரிடம் கூறி வேலை வாங்குவது அவருக்கு சிரமம் ஆகும். இவருக்கு உடலில் பலம் உள்ள அளவிற்கு மனதில் உறுதி கிடையாது.

இவர் சிறப்பாக கவிதை எழுதும் திறமை உள்ளவர். செவ்வாய்ப் பலம் குறைவாக இருப்பதால் இவர் செய்யும் செயல்கள் குடத்துக்குள் எரியும் விளக்கு போல் ஆவார். தம் திறமையை வெளிக்காட்ட கூச்சப்படும் சுபாவம் கொண்டவர்.

குழந்தை, மனைவி என எவரிடமும் மிகக் கண்ப்பாக நடந்து வெறுப்பிற்குள்ளாவார். ஆனாலும் சொந்த செலவை குறைத்துக் குடும்பத்திற்காக உழைப்பார். இவருக்கு அமையும் மனைவி பொறுமையோடு எல்லாவற்றையும் சமாளித்து நிர்வகிப்பாள்.

தொழிற்படிப்பில் நாட்டம் செல்லும். பலருக்கு சினிமாவில் சேர ஆசை இருக்கும். ரேடியோ, தொலைக்காட்சி, திரைப்படம், நாடகம் என கதை, பாடல், கட்டுரைகளுடன் அலைவர். சிலர் வெற்றியும் அடைவர். பெயரில் இருப்பவர் பத்திரிகைத் துறைக்கு வருவர். சந்திரனும் புதனும் இவர்களை பத்திரிக்கை ஆசிரியராகவும் செய்யும். இவர்களுக்கு கூட்டு எண் 8 ஆக இருப்பதால் பிற்காலத்தில் சனி சற்று நல்ல வாழ்க்கையைத் தருவார்.

அதிக உழைப்பு, இள வயதில் வறுமை இவர்களுக்கு வியாதிகளைத் தரும். கண்களில் கோளாறு, கெட்ட பழகத்திற்கு அடிமையாவதால் அது தொடர்பான நோய் தாக்கக் கூடும். வயிறு பாதிப்பு, மலச்சிக்கல் தோன்றுதல், வாத தொல்லை, இதய பலவீனம் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும்.

 

பிறந்த எண் 2-ல் கூட்டு எண் 9

சந்திரனில் செவ்வாய் இணைந்த பலன் இவருக்கு, உடலுறுதியும் அளவான உயரமும் கொண்டு நன்றாக அச்சமின்றி நடப்பார். கண்கள் பெரியதாகவும், மாநிறம் கொண்டவராகவும் சற்று மந்தமான குரலுடன் இருப்பார். பார்வைக்கு கம்பீரத் தோற்றத்துடன் காணப்படுவார்.

இவருக்கு மன வலிமையும், துணிவும் அதிகம் கொண்டவர். வாய்ச் சண்டையுடன் கைச் சண்டையும் போடத் தயங்க மாட்டார். பிறர் மனத்தை நன்றாக எடைபோட்டு தந்திரமாகக் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வார். இவர் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று பிரபலமடைவார். விட்டுக் கொடுக்காமல் பேசும் குணம் கொண்டவர். பிடிவாத குணத்தால் யார் சொல்லையும் கேட்க மாட்டார்.

காதல் திருமணம் புரிந்து கொள்வார். பொருள் போதியளவு கிட்டாமல் திண்டாடுவர். வம்புச் சண்டைகளுக்குப் பின் திருமணம் நடக்கும். பலர் சாடிஸ்களாக இருப்பார்.

தந்திரமும், துணிவும், வாதத் திறமையும் உடைய இவர்கள் போலீஸ், ராணுவம், உளவுத் துறை போன்ற பணிகளில் சேரலாம். கல்லூரி பேராசியர்களாகவும் இருப்பார்கள். ரியல் எஸ்டெட்,  கட்டப்பஞ்சாயத்து போன்ற பணிகளில் ஈடுபடலாம். விவசாயம், பன்ணை அமைத்தல், செடி, விதை, பூ, பழம், கறிகாய் போன்ற தொழில் செய்பவராக இருப்பார்கள்.

வெப்பம் அதிகமுள்ள இவர்கள் பித்த நோய்களை உண்டாகலாம். வயிற்று வலி, காய்ச்சல், இரத்த அழுத்தம், ரத்தக்கட்டி, கண் கோளாறு உண்டாகலாம். குடலில் அறுவை சிகிச்சை நடக்கும், அடி, காயம் போன்ற நோய்கள் உண்டாகும்.

 பலன்கள் கணிப்பு: எழுத்தாளர் ஸ்வாமி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version