- Ads -
Home ஜோதிடம் நியூமராலஜி நியூமராலஜி: 4ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 4ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 4ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

4, 13, 22, 31ஆம் எண்ணுக்கான பொதுப் பலன்:-

பிறந்த எண் 4-ல் கூட்டு எண் 1

இவர்களுக்கு ராகுவுடன் சூரியன் இணைந்து தரும் பலனாகும். இவர் உயரமாகவும், சுருட்டை முடியுடன் இருப்பர். அழகாகவும் உடல் எடை சற்று பருத்தும் காணப்படுவர். வசிகரிக்கும் கண்கள் கொண்டவராக இருப்பர்.

இவ்வெண் கொண்டவர்கள் அனைவரிடமும் கலகலவென பேசி எல்லாருக்கும் பிடித்தவராக நடந்துக் கொள்வர். சமயத்திற்கு ஏற்ப ஆளுக்குத் தக்கபடி நடந்து கொள்ளுவர். எளிதில் அனைத்திலும் நம்பிக்கை கொண்டிடுவர். நிறைய பேசுவார். இவரை நம்பி உதவியை எதிர்பார்க்கலாம்.

கல்வித்தடை வரும், விட்டை விட்டு வெளியேறுவார் இது போன்ற திடீர் திருப்பங்கள் ஏற்படும். எதையும் சகித்துக் கொள்ளும் தன்மை இவரிடம் இருக்கும். நடுவயதில் குணம் மாறும் உருப்படியான வேலைகளில் இறங்குவர். தொழிற் திறமையால் முன்னேறுவர்.

செலவு அதிகம் செய்வர். பிறர் பாராட்ட வேண்டும் என்று சக்திக்கு மேல் அதிகமாக செலவு செய்பவராக இருப்பர். இவருக்கு அமையும் துணை தான் குடும்ப நிர்வாகம் செய்தாக வேண்டும். குடும்பத்தில் அனைவரையும் அடக்கி ஆளுபவராக இருப்பார். திடீர் அதிஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பூர்விக சொத்து கொஞ்சமாவது இருக்கும் ஆனால் இவருக்கு பயன்படாது.

அச்சுத்தொழில், போக்குவரத்துத்துறை, தொழில், சினிமா, நாடகம், வானொலி, தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், நூலெழுதுதல், புத்தக வியாபாரம், தனியாரில் வேலை பார்த்தல், வாகனம் தயாரித்தலும், ஒட்டுதலும் பொருத்தமான தொழில்கள் ஆகும்.

நடுவயது வரை காய்ச்சலைத் தவிர வேறொரு நோயும் வராது. ஆனால் பிறகு வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் வரலாம். உடல் உறுப்பு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மஞ்சட்காமாலை, மலேரியா ஜுரம், கண் கோளாறுகள், வாயுவால் உண்டாகும் தொல்லை, முதுகு போன்ற நோய்களில் அவதிப்படலாம்.

 

பிறந்த எண் 4-ல் கூட்டு எண் 2

இவ்வெண் கொண்டவர் ராகுவுடன் சந்திரன் சேர்ந்த ஆதிக்கப் பலன் உண்டாகும். இவர் சுமாரான உயரமும், உடல் பருமனாகவும் காணப்படுவார். அனைவரையும் கவரும் வகையில் பார்க்க அழகாக காட்சியளிப்பார். முடி நீண்டதாகவும், புருவம் அடர்ந்தும் இருக்கும்.

இவர் பொதுவாக அச்சமுள்ளவர்களாகவும், அமைதியாகவும் இருப்பர். சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவராகம், தீய செயல்களை விரும்பாதவராகவும் நடப்பார். சிறு வயதிலேயே மகா கெட்டிக்காரர்களாக இருப்பர். இவர் மனதில் பொறாமை குணம் எப்போதும் இருக்கும் ஆனால் வெளிப்படக் காட்டிக்கொள்ள மாட்டார்.

பிறர் மீது இரக்கம் காட்டும் குணம் கொண்டவர். இவர்களுக்கு பெற்றோர் அன்பும் ஆதரவும் பூரனமாக கிடைக்காது. தெய்வ பக்தி, கலைப்பற்று இருக்கும்.

நல்ல குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் பிறந்த இவர்கள் யாரிடமும் ஒட்ட மாட்டார். குடும்ப வாழ்வில் சன்டை, சச்சரவுகள் இருக்கும். காலப்போக்கில் ஒரு நிலைமையைச் செல்வாக்குடன் பெறுவர். பிற்கால வாழ்வில் நிம்மதி பிறக்கும். பெரியோர்களை விட்டில் ஆதரித்துக்கூடி வாழ்வர்.

மிகவும் கற்றவரான இவர்கள் எல்லாச் சங்கதிகளையும் அறிந்திருப்பர். சாத்திரம், சம்பிரதாயம் என உலக நடைமுறை அறிந்து வாஸ்து சாத்திரப்படி வீடுகட்டி விற்பவராக இருப்பார். வாக்குத் திறமையால் வக்கீலாவார். மருத்துவத்துறை, ரசாயன பேராசிரியர் போன்ற துறைகளில் பணி புரிவர். வீடு புரோக்கர், சினிமாத் தயாரிப்பாளர், அச்சக அதிபதியாகவும் இருக்கலாம்.

கப சம்பந்தமான நோயும், மூச்சுத் தொடர்பான நோயும், நீர்க் கோர்த்துக் கொள்ளுதல் போன்ற நோய்கள் ஏற்படும்.

 

பிறந்த எண் 4-ல் கூட்டு எண் 3

ராகுவுடன் குரு இணைந்த ஆதிக்கப்பலன் கொண்டவராக இருப்பர். நல்ல உயரமாகவும் உருண்டை வடிவமுகம், நெற்றி சற்று மேடாகவும் இருப்பர். தலைமுடி சுருண்டு அடர்த்தியாக இருக்கும்.

இவர் விளையாட்டும் கேலியுமாக பேசி மற்றவர்களை கவரும் குணம் கொண்டவர். சிறு வயதிலிருந்து உடல் சற்று பருத்து காணப்படும். கல்வி இவருக்கு நன்றாக வரும். பெரியவர்களை மதித்து நடப்பவர். வாழ்க்கையில் திடீர் நிகழ்ச்சிகளால் திருப்பங்கள் உண்டாகும்.

ஆத்திரம் வந்தாலும் அடக்கிக் கொள்ளுவார். கையெழுத்து கிறுக்கலாக இருக்கும். நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகும்.

குடும்பப் பற்றும் பிள்ளைப் பாசமும் அதிகம் கொண்டவர்.

நன்கு உழைத்து முன்னேறுவார். மனமொத்த துணை அமைந்தாலும் மணவாழ்வில் தடையேற்படும். திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்வோரும் இருக்கின்றனர். அமைதியான குடும்ப வாழ்க்கையே அமையும்.

ஆன்மீக நாட்டமுள்ள இவர்கள் கோயில்களில் வேலை செய்வார். முதலில் வேலை எதுவும் சரிவர அமையாது. இவரது பின் வாழ்வில் சிறந்த தொழில் அமையும். இவர் ஆசிரியர், விளையாட்டு வீரர், அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட வேலைகள் அமையும்.

வெப்பம் மிக இவர்களுக்கு உடல் கெடும். வயிற்று வலி, குடல் புற்று, தோல் நோய்கள், சிறுநீரகக் கேடும் ஏற்படும்.

 

பிறந்த எண் 4-ல் கூட்டு எண் 4

உங்கள் கூட்டு எண் 4 ஆக இருப்பதால் ராகுவின் ஆதிக்கப்பலன் அதிகமாக இருக்கும். நீங்கள் தோற்றத்திற்கு நல்ல உயரமாகவும், உடல் உறுதியாகவும் இருப்பர். சதுர முக அமைப்பும் முடி மேன்மையாகவும் இருக்கும்.

இவர்கள் உலக அறிவை நன்கு அறிந்தவராக இருப்பர். சாத்திரங்கள், உடற்பயிற்சிகள், யோகப் பயிற்சிகள் அறிந்திருப்பர். மரியாதை, இங்கிதம் அறிந்தவரானாலும், தடிப்பான பேச்சு உங்களிடம் இருக்கும். பல இடங்கள் சுற்றி வந்த அனுபவம் இருக்கும்.

மற்றவர்களை புரிந்து வாழும் குணம் கொண்டவர் நீங்கள். பொருளைவிடப் புகழை விரும்பிச் சம்பாதிப்பவர். சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.

பெரிய குடும்பத்தில் பிறந்து பெரிய குடும்பமாகவே இருப்பார். காதல் வாழ்க்கை இவருக்கு தோல்வியை கொடுக்கும். பலர் திருமணம் ஆகாமலே இருந்து விடுவர். அனைத்து வித்தைகளையும் கற்று இருப்பதால் ஏதாவது ஒரு தொழிலில் பணம் சம்பாதிக்கும் திறமை உள்ளவர்.

போக்குவரத்துத் துறை, பத்திரிக்கை, சினிமா போன்றவற்றில் தொழில் அமையும். வண்டி, வாகனம் வாங்கி விற்றுக் கொடுத்து லாபம் ஈட்டுவார். தரகு, கமிஷன் ஏஜன்ட், சீட்டுக் கம்பெனி நடத்துதல் ஆகிய தொழிலில் ஈடுபடுவர்.

சாதாரணமாக ஆரோக்கியமானவர் இவர். கபம், வாதம் தொடர்பான நோய்கள் தாக்கக்கூடும். பிறந்த கூட்டு எண் இரண்டும் ஒன்றாக உள்ளதால் இவர்களது பெயர் எண் பலனையும் பார்க்க வேண்டும்.

 

பிறந்த எண் 4-ல் கூட்டு எண் 5

இது ராகுவுடன் புதன் சேர்ந்த ஆதிக்கம் ஆகும். இவர் உயரமாக, மாநிறமுள்ளவராக இருப்பார். சிறிய முகமும், பெரிய தலையும் இருக்கும். உடல் அளவான சதைப்பிடிப்புடன் இருக்கும். இவர் கண்கள் கவர்ச்சியான பார்வையுடன் இருக்கும்.

பார்த்தவுடன் இவர்களை அடி போட்டு விட முடியாது. சாதுவாக ஏதும் தெரியாதது போல் இருப்பார். ஆனால் மிகவும் அறிவுள்ளவர். சுறுசுறுப்பாக இருப்பார். குடும்பப் பற்று அதிகமாக இருக்கும். சகோதர சகோதரிகளிடம் பிரியமாக இருப்பார்.

எடுத்த வேலைகளை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார். அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார். இவரை நெருங்கி இருப்பவரும் புரிந்துக் கொள்ள முடியாது. சுயநலம், தற்பெருமை இருக்கும்.

பிறர் தொழிலைக் கவனித்து நடத்தவே விரும்புவார். சொந்தத் தொழில் நடத்த அஞ்சுவர். வருமானம் உயரும். சாதாரண நிலையிலிருந்து முன்னுக்கு வருபவர். கலப்புத் திருமணம் புரிவார். பெற்றோர் ஆதரவின்றி தனித்தே வாழும் நிலை ஏற்படும்.

தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் வேலை புரிவார். ஏஜண்டுகளாகவும், போக்குவரத்துத்துறை, அச்சகம், பத்திரிகைத்துறை, பதிப்பகம், அரசியரல், சினிமா எனப் பலவகை வேலைகளுக்கு ஆதாரமான தொழிலகங்களிலும் அலுவலகங்களிலும் இருப்பார்.

சாதாரணமாக அடிக்கடி நோய் ஏற்பட வாய்பில்லை. சிலருக்கு குடிப்பழக்கம் இருக்கும். கண் கோளாறு, சர்க்கரை போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.

 

பிறந்த எண் 4-ல் கூட்டு எண் 6

ராகுவுடன் சுக்கிரன் இணைந்த ஆதிக்கப் பலன் கொண்டவர் இவர். பார்க்க மென்மை கலந்த தோற்றத்துடன் இருப்பர். சதைப் பிடிப்புடன் இருப்பர். முடி அடர்ந்தும் செம்பட்டை நிறமாயிருக்கும். சிலருக்கு இலேசாக மாறுகண் அமைந்திருக்கலாம்.

தைரியம் உள்ள மகிழ்ச்சியுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள். போர் வீரர் போல் சுறுசுறுப்பானவர்கள். இவர்களின் பேச்சு தம் மகிழ்ச்சியை வெயிப்படத்துவதாகவும் பிறரை மகிழ்வு படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

இவர் எந்த விலை கொடுத்தும் தம் மனம் கவர்ந்த பொருட்களை வாங்கி விடுவர். பிறர் மெச்சும் படி ஆடம்பரமாக வசதிகளுடன் வாழ விரும்புவார். காதலில் ஈடுபடுவார்.

முதலில் நோக்கமின்றி அலைந்தாலும் பிறகு மாறி ஒரு நல்ல தொழிலைப் பிடித்துக் கொள்ளுவர். சிரமங்களில் எதில் நீச்சலிட்டு முன்னேறுவர். இவர்களுக்கு மனமொத்த துணை அமையும்.

அதிகம் சிரமப்படாத நகை, பட்டு, ஜவுளி, வியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபடுவர். கதை, வசனம் எழுதிப் புகழ் பெறுவர். அச்சு, டிடிபி, நூலகம், பத்திரிக்கை, மீடியாக்களில் வேலை புரிவர். தையற்காரராக இருப்பர். வெள்ளி, இரும்பு, சம்பந்த வேலை, தொழில்களிலிருப்பர்.

வெப்பமான உடல் என்பதால் கட்டிகள், இதயப் பாதிப்பு, தலைவலி, நரம்புப் பலவீனம், சிறுநீரக நோய், சர்க்கரை, உப்பு ரத்ததில் மிகும் கோளாறு உண்டாகும்.

 

பிறந்த எண் 4-ல் கூட்டு எண் 7

இவ்வெண் உள்ளவர்கள் ராகுவுடன் கேது இணைந்த ஆதிக்கப்பலன் உண்டாகும். இவர் சாதாரணமாக உயரமாக இருப்பா. சரியான உடலமைப்பும் மாநிறத்துடனும் தோற்றமளிப்பர். உடல் பலத்துடனும், வளையக் கூடியதாகவும் இருக்கும்.

பொதுவாகவே இவர்கள் சரியான குறும்புக்காரராக, எல்லாருக்கும் நன்பராகவும் இருப்பர். முரட்டுத்தனமான பேச்சும், நடத்தையும் இருந்தாலும் நல்ல அறிவும், ஞானமும் உடையவராக இருப்பார்கள் சட்டம், சம்பிரதாயம், நீதி, நேர்மை எல்லாவற்றுக்கும் அடங்கி நடப்பவராக இருப்பார்.

இவர் எந்த செயலையும் பக்குவமாகவும், சிறப்பாகவும் செய்து முடிப்பார். சமையல் கலைகளில் தனித்திறமை வாய்ந்தவராக இருப்பர். இவருக்கு எப்போதும் ஏதாவது சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும்.

சாதாரண குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். படிப்பில் சிறந்து விளங்குவர். இவருக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக அமையாது. நடுவயதிற்குப் பின்பே நல்லகாலம் உண்டாகும். இவருக்கு திருமணம் தாமதமாகவே ஆகும். குடும்ப வாழ்க்கை பிற்பகுதியில் நிம்மதி தரும்.

கலைகளில் வல்லவரான இவர்கள் எழுத்து, பேச்சி, கவிதை போன்ற துறைகளில் தொழில் துவங்குவர். பத்திரிக்கை தொடர்பான வேலைகளை செய்வார் குறிப்பாக ஆன்மிகப் பத்திரிகையில் இருப்பார்.

பிபி, மூலம் போன்ற நோய்கள் தாக்கக்கூடும். வயிற்று உபாதை மற்றும் தலைவலி ஏற்படலாம்.

 

பிறந்த எண் 4-ல் கூட்டு எண் 8

ராகுவுடன் சனி சேர்ந்த ஆதிக்கப்பலன் இவர்களுக்கு. பார்க்க இவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பர்.  அபூர்வமாக சிலர் உயரமாக இருப்பார்கள். இவரின் கண்கள் மிகச்சிறியதாக இருக்கும்.

இவர் சிறு வயதிலிருந்தே பல கஷ்டங்களை அனுபவித்த பின்பு தம் கடும் முயச்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர். இவருக்கு அமையும் தொழில் நிரந்தரமானதாக இருக்கும். படிப்பு என்பது இவருக்கு அனுபவக் கல்வியாகவே அமையும். மனிதர்களை புரிந்துக் கொண்டு பேசி பழகும் குணம் கொண்டவர்.

சிறு வயதிலேயே பெரிய மனிதர்போல மனத் தெளிவுடன் நடந்துக் கொள்வார். ஏழைகள் மேல் அளவிலாப் பிரியம் வைத்திருப்பார். எல்லோரிடமும் சமமாகப் பழகும் தன்மை கொண்டவர்.

இவருக்கு ஒரு குறிப்பிட்ட தொழில் என்று எதுவும் சரிவர அமையாது.  சுயமுயற்சியில் ஏதேனும் ஒன்றை பிடித்துக்கொள்வார். பெற்றோர்களை பிரிந்து வாழும் நிலை ஏற்படும். வாழ்க்கை துணை நன்றாக அமையும். குடும்பத்தில் போராட்டம், குழப்பம் நீடிக்கும்.

நெருப்பு, நீர் தொடர்புள்ள தொழிலில் ஈடுபடுவர். கார், டூவிலர் உற்பத்தி செய்யும் தொழில் புரிவர். ஓட்டல், கல்யாண சமையல், காண்ட்ராக்ட், அச்சகம், பத்திரிகைகளில் பணிவாய்ப்பு அமையும்.

கை, கால்,  மூட்டுவலி, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், முதுகு கழுத்து வலி, சர்க்கரை போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.

 

பிறந்த எண் 4-ல் கூட்டு எண் 9

இவர் ராகுவுடன் செவ்வாய் சேர்ந்த ஆதிக்கப் பலனைக் கொண்டவர். உடல் சற்று பூசினாற்போல் சராசரி உயரத்துடன் இருப்பர். மாநிறமாக இருப்பர். நீண்ட முகம் கொண்டவர். கை,கால் நீண்டிருக்கும்.

முரடராக இருப்பர். எவரிடமும் ஏமாற மாட்டார். படிப்பைவிட விளையாட்டு, வீர கலையில் நாட்டம் அதிகமாக கொண்டவர். சில நேரங்களில் இவருடைய பேச்சு பிறருக்கு அச்சம் தரும். ஒரு விஷயத்தை நினைத்து விட்டால் அதை செய்து முடிக்காமல் விட மாட்டார். பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் சென்று வாழ்வார்.

முன்னேறும் ஆர்வம் இருக்கும். உலக சுக வாழ்க்கையில் எதையும் விடாமல் அனுபவிக்க நினைப்பர். காதல் வாழ்க்கையில் ஈடுபடுவர்.  மனைவியானாலும் கூட இவரிடம் துன்பமே அடைவார். குடும்ப வாழ்க்கையில் மிகவும் தொல்லை அனுபவிப்பர்.

இவர் சர்க்கஸ், கட்டட வேலைகள், போலீஸ், ராணுவம், அச்சு இயந்திர வண்டி, மோட்டார் தொழிற்சாலைத் தொடர்பானவற்றில் பணி புரிவர். அரசியலிலும், அரசாங்க உயர் பதவிகளிரும், ஆன்மிகத்துறையிலும், பத்திரிக்கையிலும் பணியாற்றுவர். சிலர் ரியல் எஸ்டேட், புரோக்கர்களாக, சிவில் என்ஜீனியர்களாக வருவர்.

வயிற்றுக் கோளாறுகள் உண்டு. சிறு வயதிலேயே விபத்துக்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது.

 பலன்கள் கணிப்பு: எழுத்தாளர் ஸ்வாமி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version