
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – மே 16
பஞ்சாங்கம்
ஸ்ரீராமஜெயம்
பஞ்சாங்கம் 16.05.2022 | திங்கட்கிழமை
வருடம்~ ஶுபக்ருத்வருஷம்~ ஶுபக்ருத்நாமஸம்வத்ஸரம்
அயனம்~ உத்தராயனம்
ருது~வஸந்த ருது
மாதம்/தேதி~ வைகாசி-02~ வ்ருஷபமாதம்
பக்ஷம்~ஶுக்லபக்ஷம்
திதி~பௌர்ணமி காலை 10.22 வரை பிறகு ப்ரதமை
ஸ்ரார்த திதி~ ப்ரதமை
நாள்~ திங்கட்கிழமை- இந்துவாஸரம்
நக்ஷத்திரம்~ விசாகம் மதியம் 02.07 வரை பிறகு அனுஷம்
யோகம்~ சரியில்லை/சுபயோகம்
கரணம்~பவம்
யோகம்~பரிகம்
சந்திராஷ்டமம்~
ரேவதி/அஸ்வினி
சூலம் ~கிழக்கு
இன்று~வைகாசி விசாகம்
ராகுகாலம்~காலை~07.30~09.00
எமகண்டம்~ காலை~ 10.30~12.00
குளிகை~ மதியம்~ 01.30~03.00
சூர்யோதயம்~ காலை~05.56
சூர்யாஸ்தமனம்~மாலை~06.26
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (16-05-2022) ராசி பலன்கள்
மேஷம்
சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். தந்தையிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.
பரணி : காலதாமதமான நாள்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு தொடர்பான பணிகளில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கை துணைவரின் வழியில் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : சேமிப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்
நண்பர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் சாதகமான சூழல் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவாதிரை : உதவி கிடைக்கும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.
கடகம்
செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வேலை நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு கிடைக்கும். கடன் நிமிர்த்தமான சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.
பூசம் : முடிவு கிடைக்கும்.
ஆயில்யம் : போட்டிகள் குறையும்.
சிம்மம்
சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : மாற்றம் ஏற்படும்.
பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
கன்னி
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.
துலாம்
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவது தொடர்பான விரயங்கள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
விசாகம் : விரயங்கள் ஏற்படும்.
விருச்சிகம்
முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் சஞ்சலங்களால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையும், பொறுப்பும் அதிகரிக்கும். மதிப்பு உயரும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
அனுஷம் : குழப்பம் நீங்கும்.
கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
தனுசு
எண்ணிய காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களிடம் உணர்ச்சிவசமின்றி செயல்படுவது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
மகரம்
வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உத்தியோகம் நிமிர்த்தமான முக்கிய முடிவினை எடுப்பீர்கள். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பழைய கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.
திருவோணம் : வெற்றிகரமான நாள்.
அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்
வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் தனவரவு மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவி சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : வரவு மேம்படும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : விருப்பம் நிறைவேறும்.
மீனம்
வியாபாரம் நிமிர்த்தமாக இருந்துவந்த போட்டிகள் குறையும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவுபெறும். எந்தவொரு செயல்களிலும் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், புதுமையான தேடலும் உண்டாகும். தெளிவு ஏற்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : போட்டிகள் குறையும்.
உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.
ரேவதி : தேடல் உண்டாகும்.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 78 பாடல் – 2
ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய ரழகினையருளுவர் குழகலதறியார்
கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர் நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி
ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.
விளக்கவுரை
வயல்களில் உள்ள சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய், அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர்மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ?
It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.