To Read it in other Indian languages…

Home ஜோதிடம் பஞ்சாங்கம் பஞ்சாங்கம் ஜன.24- செவ்வாய்| இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் ஜன.24- செவ்வாய்| இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - Dhinasari Tamil

இன்றைய பஞ்சாங்கம்  -ஜன.24

தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:|| 

!!ஸ்ரீ:!!

தை ~ 10 (24.1.2023) செவ்வாய் கிழமை.
வருடம் ~ சுபக்ருத் வருடம் {சுபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ ஹேமந்த ருது.
மாதம் ~ தை மாஸம் {மகர மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ 8.44 pm வரை த்ருதியை பின் சதுர்த்தி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம் ~ சதயம்
யோகம் ~ வரியான்
கரணம் ~ தை துளை
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.40
சந்திராஷ்டமம்~ கடகம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்ருதியை
இன்று * ~

ராகுகாலம்~ மாலை~ 03.00~04.30
எமகண்டம்~ காலை~ 09.00~10.30
குளிகை~ மதியம்~ 12.00~01.30
ஶூர்யோதயம்~ காலை~06.42
ஶூர்யாஸ்தமனம்~ மாலை~06.06

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

dhinasari panchangam jyothidam - Dhinasari Tamil
sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

ayurveda - Dhinasari Tamil
astrology panchangam rasipalan dhinasari 2

இன்றைய ராசிபலன்கள்
24.1.2023

மேஷம்

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒப்பந்த பணிகள் சாதகமாக நிறைவு பெறும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மாறுபட்ட சிந்தனைகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அஸ்வினி : ஒத்துழைப்பான நாள்.
பரணி : பாராட்டுகளை பெறுவீர்கள்.
கிருத்திகை : தீர்வு உண்டாகும்.


ரிஷபம்

செயல்களில் இருந்துவந்த சோர்வு குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். எதிலும் நேர்மையுடனும், கடமையுடனும் செயல்படுவீர்கள். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.
ரோகிணி : ஆதாயம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : மதிப்பு கிடைக்கும்.


மிதுனம்

வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த நிலுவை பணிகளை செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையம் தொடர்பான துறைகளில் புதிய அறிமுகம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
திருவாதிரை : மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


கடகம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். மறைமுகமான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தோன்றி மறையும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே உங்களுடைய பணிகளை செய்வது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : பொறுமை வேண்டும்.
ஆயில்யம் : நிதானம் அவசியம்.


சிம்மம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
பூரம் : எண்ணங்கள் கைகூடும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.


கன்னி

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அஸ்தம் : சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
சித்திரை : லாபம் அதிகரிக்கும்.


துலாம்

மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயங்கள் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
சித்திரை : சிந்தனைகள் உண்டாகும்.
சுவாதி : அறிமுகம் ஏற்படும்.
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.


விருச்சிகம்

மனதிற்கு விரும்பியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவுகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகளும், எண்ணங்களும் நிறைவேறும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அனுஷம் : திருப்தியான நாள்.
கேட்டை : வெற்றி கிடைக்கும்.


தனுசு

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நவீன தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். எதிலும் துரிதத்துடன் செயல்பட்டு முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


மகரம்

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சிந்தனையின் போக்கில் உற்சாகம் தோன்றும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். குழப்பம் நீங்கி புதிய பாதையும், தெளிவும் ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திராடம் : வரவு மேம்படும்.
திருவோணம் : உற்சாகமான நாள்.
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.


கும்பம்

புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். இனம்புரியாத சில கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். சிறு சிறு விமர்சனங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களையும், முயற்சிகளையும் தெளிவுப்படுத்துவது நல்லது. தெளிவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : கவலைகள் நீங்கும்.
சதயம் : விமர்சனங்கள் மறையும்.
பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.


மீனம்

குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையில் இருந்துவந்த தடைகள் நீங்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
பூரட்டாதி : வாதங்கள் மறையும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : தடைகள் நீங்கும்.


இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thirukkural - Dhinasari Tamil
thiruvalluvar deivapulavar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

சாலமன் பாப்பையா உரை:
பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

கல்விப் பாலம்

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

1 COMMENT

  1. ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக்க லக்கனம் பிறந்த தேதி
    ௨௦.௦௮.௧௯௮௫ நேரம் காலை ௪.௩௦ம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.