― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஜோதிடம்பஞ்சாங்கம்பஞ்சாங்கம் - ஏப்.17 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் – ஏப்.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

- Advertisement -
astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் ஏப்.17

||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்

பஞ்சாங்கம்  | 17.04.2024 | புதன்கிழமை

         !!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!

श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்
சித்திரை 4 { 17.4.2024* } புதன் கிழமை**
வருடம் ~ க்ரோதி வருடம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 7.52 pm வரை நவமி பின் தசமி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 8 55 am வரை பூசம் பின் ஆயில்யம்
யோகம் ~ சூலம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்…
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை
10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.06
சந்திராஷ்டமம் ~ தனுசு
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ நவமி
இன்று* ~ ஸ்ரீ ராம நவமி.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

thiruvalluvar deivapulavar

இன்றைய (17-04-2024) ராசிபலன்கள்


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். குழந்தைகளின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் உண்டாகும். மறைமுகமான சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் ஆரோக்கியம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் நாட்டம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : விரயங்கள் ஏற்படும்.
பரணி : ஆதாயம் உண்டாகும்.
கிருத்திகை : நாட்டம் ஏற்படும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


மனதளவில் இருந்துவந்த கவலைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : கவலைகள் விலகும்.
ரோகிணி : தீர்வு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.
திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.
புனர்பூசம் : மாற்றத்தை ஏற்படுத்தும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ஆயில்யம் : விழிப்புணர்வுடன் இருக்கவும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிப்பது பகைமையை தவிர்க்கும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடன் இருப்பவர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். வியாபார வியூகங்களில் சில குழப்பங்கள் உண்டாகும். அலுவலகப் பணிகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரம் : செலவுகளை குறைக்கவும்.
உத்திரம் : சோர்வுகள் ஏற்படும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சிந்தனைகள் பிறக்கும்.
அஸ்தம் : அறிமுகம் உண்டாகும்.
சித்திரை : லாபகரமான நாள்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : சிந்தனை அதிகரிக்கும்.
சுவாதி : மாற்றங்கள் பிறக்கும்.
விசாகம் : மதிப்பு கிடைக்கும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மேன்மை உண்டாகும். மனதில் வித்தியாசமான சிந்தனை ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : பிரச்சனைகள் நீங்கும்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : மாற்றமான நாள்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். குழந்தைகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் இழுபறிகள் ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் சுமூகமற்ற சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மூலம் : காலதாமதமான நாள்.
பூராடம் : இடமாற்றங்கள் ஏற்படும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


மறைமுகமான திறமைகள் வெளிப்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனம் மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : ஆதரவு அதிகரிக்கும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் வழியில் அனுகூலமான சூழல் அமையும். எதிர்பாராத சில திடீர் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தைரியம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். அலுவலகப் பணிகளில் காலதாமதம் ஏற்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உணவு தொடர்பான விஷயங்களில் திருப்தி இன்மை ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : திருப்தி இன்மையான நாள்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version