இன்றைய பஞ்சாங்கம் ஜூலை 12 – வெள்ளி

தினசரி. காம்🌹  ஶ்ரீராமஜெயம் .

பஞ்சாங்கம் *ஆனி ~ 27 ~ (12.07.19)
வெள்ளி கிழமை
வருடம் ~ விகாரி
{ விகாரி நாம சம்வத்ஸரம்}.

அயனம்~ உத்தராயணம்
ருது ~ கிரீஷ்ம ருது
மாதம்~ மிதுன மாஸம் { ஆனி மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்

திதி ~ மறுநாள்காலை 3.14 AM வரை ஏகாதசி பின் த்வாதசி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை
நட்சத்திரம் ~ UPTO 7.09 PM விசாகம் பின் அனுஷம்
யோகம் ~ஸாத்தம்
கரணம் ~ வணிஜை அமிர்தாதியோகம் ~ சுபயோகம்

நல்ல நேரம் ~ காலை 6.30~7.30am & 5.05~ 5.30pm.
ராகு காலம்~ 10.30 am ~12.00 pm.
எமகண்டம்~மாலை 3.00 ~ 4.30 pm.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00 am.

சூரிய உதயம் ~ காலை 6.00 am.
சந்திராஷ்டமம் ~ UPTO 1.13 pm வரை மீனம் பின் மேஷம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம.
ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி
*இன்று ~ ஏகாதசி.

இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய (12-07-2019) ராசி பலன்கள்

ஸ்ரீ மாத்ரே நம:


மேஷம்: 

உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிலுவையில் இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அசுவினி : நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.
பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.


ரிஷபம்

எண்ணிய செயல்களை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் உருவாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். எதிர்ப்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : விவாதத்தை தவிர்க்கவும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.


மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். சுபச் செய்திகளால் சுபவிரயம் உண்டாகும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : சுப விரயம் உண்டாகும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.


கடகம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். எதிர்பாராத தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதுவிதமான பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் சோர்வு வந்து போகும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : அனுகூலம் ஏற்படும்.


சிம்மம்

தாய்வழி உறவுகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்சேர்க்கை உண்டாகும். பயணங்களில் கவனம் வேண்டும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். பெரியோர்களிடம் சற்று அமைதியுடன் செயல்படவும். கடன் தொல்லைகளால் மனவருத்தங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : நிதானம் தேவை.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : மனவருத்தங்கள் நேரிடலாம்.


கன்னி

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும். பூமி விருத்திக்கான பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : எதிர்ப்புகள் அடங்கும்.
சித்திரை : சிந்தனைகள் மேலோங்கும்.


துலாம்

சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்கள் பலமாக இருந்து உதவுவார்கள். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவு பெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.


விருச்சகம்

திருமண முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம், பக்கம் வீட்டார்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். கலை சார்ந்த அறிவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அனுஷம் : அறிமுகம் உண்டாகும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.


தனுசு

உயர் கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளின் மீது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மனவருத்தங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.


மகரம்

மனதில் தோன்றிய குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்த பணவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் ஈர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : தெளிவு உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.


கும்பம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார உதவிகள் நண்பர்களின் மூலம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனைகளின் மூலம் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : தேவைகள் பூர்த்தியாகும்.
சதயம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.


மீனம்

நினைத்த காரியங்கள் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : காரியங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : திருப்தியான சூழல் உண்டாகும்.


தினசரி .காம்

உழைப்பு = வெற்றி

துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

– சுவாமி விவேகானந்தர்

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: இனியவை கூறல் – குறள் எண்: 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

மு.வ உரை:

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

ஆன்மிக கேள்வி பதில்கள்

* சுப்பிரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?

ரேவா நதி தீரத்தில் ஜபம் செய்தால் அதிக பலன் என்கிறார்களே! அந்த நதி எங்குள்ளது?

அம்பாளின் அஷ்டோத்ர நமாவளியில் ‘பக்த ஹம்ச பரீமுக்ய’ என்று வருகிறதே! பொருள் என்ன?

* வீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் விளக்கு எரியாதா?

* காலத்தால் பிற்பட்ட வாசுதேவ மந்திரத்தை முந்தைய துருவனுக்கு நாரதர் உபதேசித்தது எப்படி?

ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...