Home ஜோதிடம் ராகு-கேது பெயர்ச்சி 2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020- மிதுனம்

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020- மிதுனம்

raghukethu peyarchi

ராகு கேது பெயர்ச்சி  23.09.2020 5.56.10மணி முதல்  12.04.2022 இரவு 8.57.41 வரை..

ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)

அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.

லக்னம் 05.14(செவ்வாய்) 02.40ராகு 29.59.99 
   கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு  சுக்ரன் 25.05
(சனி) 01.14 
குரு 23.27சந்திரன் 29.44 கேது 29.59.99புதன் 01.20சூரியன் 06.48

மிதுனம்
(மிருகசீரிடம் 3,4, திருவாதிரை,
புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய): 
65/100

உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ல் & கேது 6ல் இது நன்மை செய்யும் நிலை. பொதுவாக 12ல் ராகு கடன் வியாதி எதிரி இந்த மூன்றும் இல்லாமல் செய்திடும் பொருளாதார நிலை மேம்படும். 6ல் கேதுவும் வருவாயை அதிகரித்து மேல்மட்ட மனிதர்கள் செல்வாக்கை ஏற்படுத்தும். ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் இவை அதிகம் ஆகும். மேலும் இந்த 18 மாதத்தில் மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் பரவாயில்லை என்று சொல்லும் படி இருப்பதால் பெரிய நஷ்டங்கள் இல்லை மனம் நிம்மதியாக இருக்கும். அஷ்டமத்தில் சனி குரு சஞ்சாரமும் பெரிய பாதிப்பை தராது. சூரியன் சந்திரன் செவ்வாய் நக்ஷத்திரத்தில் பயணிப்பது அவர்களின் பலம் தத்கால நட்பு இதனால் நன்மைகள் அதிகம் இருக்கும்.

குடும்பம் பொருளாதாரம் :  மகிழ்ச்சி அதிகரிக்கும் கேதுவால் வருவாய் பெருகும் போட்ட திட்டங்கள் வெற்றி அடையும், 02.06.2021 வரை ஜீவன வகையில் அதிக லாபம் வரும். அதனால் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை சிரமம் இல்லாமல் நடத்துவீர்கள், புதிய வீடு, புதிய இடமாற்றமும் இருக்கும். யாத்திரைகள் கேளிக்கைகள் என்று நன்றாகவும். ஆடை ஆபரண சேர்க்கையும் இருக்கும். 02.06.2021-  09.02.22 வரை நன்மை தீமை கலந்து இருக்கும். குருவால் மன சோர்வு கொஞ்சம் மந்த நிலை அல்லது குடும்பத்தில் சஞ்சலம் இருந்து கொண்டிருக்கும். பணவரவு தாராளமாக இருந்தாலும் அதே அளவு செலவும் இருக்கும். 09.02.22 – 12.04.22 வரை நல்ல சூழல் நினைத்தது நடக்கும் வாழ்வில் ஏற்றம் இருக்கும்.

உடல் ஆரோக்கியம் : 6ல் இருக்கும் கேது, மற்றும் செவ்வாய்,புதன் சஞ்சாரங்கள் 12.04.2022 வரையிலும் கூட பெரிய ஆரோக்கிய பாதிப்பை தராது எனினும் குரு, சுக்ரனால் வாழ்க்கை துணைவர் & சனி சஞ்சாரம் பெற்றோர்கள் வழியில் வைத்திய செலவை கொடுக்கும். மன சோர்வு அவ்வப்போது ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சை, ஆகார கட்டுப்பாடு இறைத்யானம் இவை நன்மை தரும். பொதுவில் இந்த பெயர்ச்சியில் ஏற்கனவே இருந்த வியாதிகளின் தாக்கம் மிக குறைவாக இருக்கும் என்பது உறுதி.

உத்யோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்): அலுவலகத்தில் வாங்கிய கடன் அல்லது வெளியில் வாங்கிய கடன் அடைபடும் நேரம் இது அதற்கு ஏற்றார் போல் வருவாய் பெருகும். சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு அல்லது நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  அதே சமயம் 02.06.2021 – 09.02.2022 வரையில் கொஞ்சம் வேலை பளு, சக தொழிலாளிகளுடன் கருத்து வேறுபாடு அதனால் வேலையில் மாற்றம் அல்லது இடமாற்றம் சின்னச்சின்ன பிரச்சனைகள் என்று இருக்கும் ஆனால் பணப்பற்றாக்குறை வராது. கொஞ்சம் கவனமாக இருப்பது பேச்சை குறைப்பது நன்மை தரும். 09.02.2022 முதல் லாபம் ஆரம்பிக்கும்.

தொழில்(வியாபாரம், கலை, அரசியல் விவசாயம், அனைத்து சொந்த தொழில்): 10,6,2 அதிபதிகள் சஞ்சாரம் இந்த பெயர்ச்சியில் 02.06.21 வரை நன்றாக, 02.06.21 -09.2.22 வரை சுமாராக அதன் பின் சிறப்பாக இருப்பதால் முதலில் நல்ல வருவாய் இருக்கும் தொழில் வளர்ச்சி இருக்கும். செவ்வாய் ஜூன் 2021 வரை புதிய தொழில் அல்லது தொழில் விரிவாக்கம் என்று செய்ய வைத்து புகழையும் தருவார். அரசியல்வாதிகள் பதவி பெறலாம். 02.06.2021 – 09.02.2022 வரை கொஞ்சம் நிதானத்துடன் செயல்படவேண்டும். பணத்தை கையாள்வதில் சிக்கனம் தேவை தொழிலாளிகள் பார்ட்னர்கள் ரசிகர் தொண்ட என்று தொல்லைகள் அதிகரிக்கும் பேச்சை குறைப்பது நல்லது. போட்டிகள் ஒருபக்கம் இருந்தாலும் தொழிலில் வருமானம் குறையாது 09.02.2022க்கு பின் நினைத்தது நிறைவேறும். பொதுவில் நன்மை அதிகம் தரும் பெயர்ச்சி

மாணவர்கள் : புதன் & கேது ஓரளவு நன்மை செய்யும் படிப்பில் கவனம் தேவை முயற்சிகளில் சொல்ப பலனே இருக்கும். பெற்றோர் ஆசிரியர் அறிவுரை படி நடப்பது. நட்பை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது. போட்டி பந்தையங்களில் அதிக முயற்சி தேவை. 09.02.22க்கு பின் தான் வெற்றி அதிகம் இருக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சி ஓரளவே நல்ல பெயர் மதிப்பெண் நல்ல கல்விக்கூடம் என்று கிடைக்கும். அதிக முயற்சி தேவைப்படும்.

சர்வே ஜனா சுகினோ பவந்து:

lakshmi narasimhachari

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version