ராசி பலன்கள் வருட ராசி பலன்கள் 2019 வருட ராசிபலன்: விருச்சிகம்

2019 வருட ராசிபலன்: விருச்சிகம்

-

- Advertisment -

சினிமா:

விஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்?

அந்த வகையில் ரசிகர்களும் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடி பார்த்துள்ளனர். அப்போது இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர்,

‘தல’ யை பின் தொடரும் தளபதி!

அடுத்து நடிகர் விஜய், யார் சொன்னக் கதையில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது

விஜய்யின் கத்தியை ரீமேக் செய்த இயக்குநர் தீவிர சிகிச்சை பிரிவில்…

சீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஷயம் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

சைக்கோ – PSYCHO – ஸ்டன்னிங்க் … (விமர்சனம்)

ஆனாலும் கொலைகளை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்திய விதங்களில் தமிழ் சினிமா உலகுக்கு சைக்கோ நிச்சயம் ஒரு ஸ்டன்னிங்க் எக்ஸ்பீரியன்ஸ்...
-Advertisement-

பாவம்… இதெல்லாம் தெரியாம இவங்க ‘மொழிப் போர் தியாகிகள்’ ஆயிட்டாங்களே!

இந்ந லட்சண புன்னகையில் தமிழ் நாட்டில் இவனுங்க மொழிபோர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தமிழை காப்பாத்துறாங்களாம்…

100வது நாள்… முரசொலி இட மூலப்பத்திரம் கேட்டு! கொண்டாடும் டிவிட்டர்வாசிகள்!

அது தற்போது 100வது நாளை எட்டியுள்ளது. இதன் சிறப்பு டிவிட்டர் பதிவுகளை தற்போது டிவிட்டர்வாசிகள் செய்து வருகின்றனர்

நானும் அவளும்..!

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி!

சென்னை, மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்துள்ளது.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ பன்னாட்டுப் பயிலரங்கம்!

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத்துறை மற்றும் தமிழ் அநிதம் ( அமெரிக்கா ) இணைந்து ஜன.25 அன்று நடத்திய “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்னும் பொருண்மையிலான பன்னாட்டுப் பயிலரங்க நிகழ்வில் ... மின் நூலாக்கம் குறித்த விளக்கம்

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அமர்சேவா சங்க நிறுவனருக்கு முதல்வர் வாழ்த்து!

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தை நிறுவிய எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது இப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

திருப்பதியை ஆந்திர தலைநகராக்க… தெலுங்கு தேசம் கோரிக்கை!

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை மாற்ற நினைத்தால் திருப்பதி நகரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ தொரபாபு வேண்டுகோள் விடுத்தார்.

குடியரசு தினக் கொண்டாட்ட துளிகள்…

தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். நாட்டின் 71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.

தென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர்! மாவட்டங்களில் குடியரசு தின கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர்.

கொட்டும் பனியில் தேசிய கீதம்! காஷ்மீரத்தின் காட்சி இது!

கொட்டும் பனியில் கிராமத்தினர் கூடி நின்று, குடியரசு தினமான இன்று தேசிய கீதம் இசைத்தனர்.

ரணகளமான ஆந்திரம்!தெனாலியில் பெரும் பரபரப்பு; அமராவதி ஜெஎசி முகாமுக்கு தீவைப்பு!

ஆதரவாளர்கள் மீது எதிர்ப்பாளர்கள் கோழி முட்டையும் தக்காளிப் பழங்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல பெண்கள் காயமடைந்தனர்.

சொல்ல முடியாத இடத்தில் தோன்றும் வலி காதல்: நிவேதா பெத்துராஜ்!

அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார்.

17ஆயிரம் அடி உயரம்; மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்… குடியரசு தினம் கொண்டாடிய வீரர்கள்!

லடாக்கில் 17,000 அடி உயரத்தில்… மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் பனியிலும் குளிரிலும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குடியரசு தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
- Advertisement -
- Advertisement -

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

விருச்சிக ராசி(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய) :

இந்த வருடம் பெரிய ரிஸ்க் எதையும் எடுக்க வேண்டாம் புதிய முயற்சிகளையும் தள்ளி போட்டு விட்டு உங்கள் இஷ்டமான தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொள்வது நல்லது, ஏழரை சனியின் தாக்கம் ஜென்ம குருவால் அதிகரிக்கும், மேலும் மார்ச் 2019க்கு பின் ராகு 8லும் , கேது 2லும் வந்து இன்னும் சிரமத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சிக்கனமாக இருப்பது நல்லது பொருளாதார நிலை மந்தமாகும். குடும்ப நிதி நிலமை சுமார். பகவன் நாமத்தை சொல்வது ஸ்தோத்திரங்களை கேட்பது நலம் தரும்.

உடல் ஆரோக்கியம்:

இந்த வருடம் ஜென்மத்தில் குரு இருப்பதாலும் மார்ச்சில் 8ல் ராகு வருவதாலும் உடல் படுத்தல் அதிகரிக்கும், சின்னசின்னதாக கூட ஆரோக்கிய கேடுகள் இருக்கும். தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது நல்லது. நடுவில் ஏப்ரலில் குரு 2ல் பெயர்வதால் ஆகஸ்ட் வரை பின் நவம்பர் 4ம் தேதி முதல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம். முடிந்தால் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லுங்கள்.

உறவுகள்:

உங்கள் பெற்றோர், மனைவி/கணவர் சகோதரர்கள், பிள்ளைகள் என்று அனைவருடனும் ஏதோ ஒருவிதத்தில் மன கசப்பு ஏற்படும், உறவினர்கள் விரோதியாக மாறி சதி செய்வர், உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படும் துக்கம் உங்களை பெரியதாக பாதிக்கும், பிள்ளை/பெண்ணுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தால் விரோதிகளால் அது தடை படும். மிகுந்த சிரமங்களை அனுபவிக்க நேரிடும். மௌனியாக இருப்பது நல்லது வீண் வாக்குவாதம் வேண்டாம் மன அழுத்தம் ஏற்படலாம் கணவன் மனைவி மற்றவர்களிடமும் விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும்.

உத்தியோகம்:

முன்னேற்றம் என்பது குறைவு, கடுமையாக உழைத்தாலும் மேலதிகாரிகள் திருப்தியுற மாட்டார்கள். எதிரிகள் கை ஓங்கும், எதிலும் கவனமாய் இருத்தல் அவசியம், பதவி உயர்வு என்பது கிடைப்பதில் இழுபறியாக இருக்கும், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு விசா போன்ற பிரச்சனைகள் வரலாம், மார்ச்சுக்கு பின் அல்லது செப்டம்பரில் வேலை பறிபோகும் நிலையும் தாய்நாடு திரும்பும் நிலையும் உண்டாகும். புதிய வேலை கிடைப்பது துர்லபமாக இருக்கும். ஜீவன ஸ்தானத்துக்கு ராகுவின் பார்வை இருப்பதால் கஷ்ட ஜீவனம் நடக்கும். நவம்பர் 4 வரை பொறுமையாகவும் இறைபக்தியுடனும் இருப்பது நலம் தரும். அதன் பின் தான் முன்னேற்றம்.

தொழில்/வியாபாரம்:

மிகுந்த சவால்களையும் போட்டிகளையும் சந்திக்க வேண்டும், எதிரிகள் உங்களை அழிக்க பார்ப்பர், கூட்டுத்தொழிலில் இருப்பவருக்கு பார்ட்னர் விலகலாம் அல்லது உங்களை விலக்கலாம். பண நெருக்கடி இருக்கும், தொழில் மந்தமாகும், வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவீர்கள். நவம்பர் 4க்கு பின் மிகுந்த நல்ல சூழல் உண்டாகும். மறுபடியும் முன்னேற்றம் வரும்.

கலைஞர்கள்:

நவம்பர் 4 வரை சோதனைக்காலம் தான் கவனமாக இல்லாவிடில் பணம் பாழாகும், வாய்ப்புகள் தட்டி போகும், பெரிய ஒப்பந்தங்கள் வராது, திரை துறை, மீடியா போன்றவற்றில் வேலை செய்பவர்களுக்கு வருமான குறைவும் வேலை இழப்பும் கூட உண்டாகும். உடன் இருப்பவரால் பிரச்சனை உண்டாகும். மன அமைதியை குலைக்கும்படியாக பிரச்சனைகள் உருவாகும்.

அரசியல்வாதிகள்:

பொறுமை அவசியம், தொண்டர்களை தக்க வைக்க அதிக பணம் செலவழிக்க நேரிடும். எதிரிகளால் கட்சி மேலிடத்தில் செல்வாக்கு குறையும். சட்டரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த வருடம் தேர்தலில் நிற்க வாய்ப்புகிடைத்தால் ஒதுங்கி கொள்வது நலம் தரும். நவம்பர் 4க்கு பின் தான் நல்ல நிலை உண்டாகும்.

மாணவர்கள்:

ஜென்ம குரு உடல் நலத்தை பாதித்து படிப்பில் அக்கறையை குறைப்பார். நெருங்கிய நண்பர்கள் பிரச்சனையை உண்டாக்குவர். படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். போட்டி பந்தயங்களில் வெற்றி துர்லபம். ஆசிரியர் பெற்றோர் சொல்படி நடப்பது உத்தமம். தவறான நண்பர் சேர்க்கையால் தவறான பழக்கத்துக்கு அடிமை ஆகலாம். வருடக்கடைசி மாதம் முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயிகள்:

பயிர்கள் எதிர்பார்த்த பலனை தராது. மகசூல் குறையும், பண நெருக்கடி உண்டாகும். கால்நடைகளும் மருத்துவ செலவை வைக்கும், குடும்ப சூழலும் சரியில்லாமல் போகும், கடன் தொல்லைக்கு ஆளாக நேரிடும். வழக்குகள் தாமதம் ஆகும் புதிய வழக்குகளிலும் சிக்கி கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நலம் தரும்.

பெண்கள்:

விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும், உடல் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். வார்த்தைகளை குறைத்து மௌனமாக இருப்பது நல்லது குடும்ப உறவுகளுடனும் அக்கம்பக்கத்தாரோடும் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நலம் தரும். கணவன் மனைவிக்கு இடையில் பிரிவு உண்டாகலாம். ஏற்கனவே விவாகரத்து வழக்கு இருக்கும் பெண்கள் அதில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இழுத்தடித்து கொண்டிருக்கும், திருமணம் தள்ளி போகும், உழைக்கும் மகளிருக்கும் இது சிரம காலம் பொறுமையுடன் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா பெண்களுக்கும் 4.11.2019க்கு பின் நல்லகாலம் பிறக்கிறது.

வணங்கவேண்டிய தெய்வம் ப்ரார்த்தனைகளும்:

சனீஸ்வரனை வணங்கவேண்டும் ஆஞ்சநேயரை சேவிக்க வேண்டும், ராம நாமத்தை சொல்வது பலன் தரும், சனீஸ்வரனுக்கு எள்விளக்கு ஏற்றவும், ஆதித்ய ஹ்ருதயம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்று சொல்வது நல்லது. ஊனமுற்றோருக்கு உதவி செய்வதும் அன்னதானம் செய்வதும் பலவிதமான நன்மையை தரும்.

.வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,909FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கியமான உணவு: பனீர் ராகி கொழுக்கட்டை!

கேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.

ஏக்கத்தோடு வரும் பிள்ளைங்களுக்கு அருமையா சாக்லேட் சேமியா!

உருகி நன்கு கலந்ததும் வேக வைத்த சேமியா – பால் கலவையுடன் சேர்த்து… பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லெட் சேமியா

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |