
தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்
சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.
இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.
பிலவ வருட வெண்பா:
பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்
பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.
குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.
சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!
புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
கன்னி : (உத்திரம் 2,3,4 பாதங்கள்,ஹஸ்தம் 4பாதங்கள், சித்திரை 1,2 பாதங்கள் முடிய) :
சித்திரை முதல் ஆடி வரையில்: உங்கள் ராசிநாதன் 7ல் பலமாய் தன் நக்ஷத்திரக்காலில் வருடம் ஆரம்பத்தில் அதனால் ஏற்படும் நன்மையும்,வருடம் முழுவதும் செவ்வாய்,ராகு, சூரியன், செவ்வாய், கேது,சுக்ரன் என எல்லா கிரஹங்களும் பொருளாதாரத்தை மேம்படுத்தி பணப்புழக்கத்தை செய்வர்.
5ல் இருக்கும் சனி பிள்ளைகளால் மருத்துவ செலவு, கல்வி செலவு என கொடுப்பார். பணம் தாராளமாக இருக்கும் அதனால் பெரிய வருத்தங்கள் இருக்காது. புதுவீடுவாங்கும் திட்டம் கொஞ்சம் ஸ்லோவாக நடக்கும். வங்கி கடன், நிலுவை தொகையை செலுத்துவது இவற்றில் தாமதம், திடீர் பயண செலவுகள் என்று வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.
அதே நேரம் சூரியனும், புதனும் புத்திகூர்மையை உண்டாக்கி சேமிப்பை அதிகரிப்பர், கேதுவும் தன்பங்குக்கு பெயர் புகழ், அதிகாரம் பணவரவு என தந்து பலத்தை சேர்ப்பார் பொதுவில் கஷ்டம் என்றால் மருத்துவ செலவுகள், வேலைகள் தாமதம் ஆகுதல் மன உளைச்சல் ஏற்படுதல் போன்றவை மட்டுமே பெரிய சிக்கல்கள் இருக்காது. உத்தியோகத்திலும் சொத்த தொழிலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை எனினும் கஷ்டப்படும் நிலை இருக்காது.
கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் நிலையும் உண்டாகும், பிள்ளைகளால் செலவு இருந்தாலும் பாதிப்பு இல்லை, பெற்றோர் வகையிலும் ஓரளவு அனுகூலம் இருக்கும். உறவுகள் நெருங்கி வரும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியும் ஒற்றுமையையும் தரும். புதிய உறவுகள் நன்மையை உண்டாக்கும்.
ஆவணி முதல் கார்த்திகை வரையில்: குரு 5ல் வக்ரி சனியுடன், 12ல்,1ல்,2ல் சூரியன் சஞ்சாரம், 10ல் செவ்வாய் என்று வெகு சுமாராகவே பலன்கள் இருக்கும். குழந்தைகள் மற்றும் பெற்றோர் வகையில் அதிக மருத்துவ செலவுகளும், தனக்கே வயிறு, குடல், கண் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் இருந்து கொண்டிருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாகும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சக ஊழியர்களால் சில பிரச்சனைகள் வந்து தீரும். அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் கொஞ்சம் சிரமத்துக்கு பின் நிறைவேறும். பொதுவில் உத்தியோகத்தில் முன்னேற்றம் சுமாராக இருக்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். நிதானம் அவசியம். சொந்த தொழிலில் எதிரிகள் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள், தொழில் விரிவாக்கம் தாமதம் ஆகலாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது நல்லது. ஊழியர்கள் வகையில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வது நல்லது. மெதுவான முன்னேற்றம் என்றாலும் நஷ்டம் இல்லை. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சேமிப்பும் நல்ல பலனை தரும்.
மார்கழி முதல் பங்குனி வரையில்: வருடக்கடையில் உண்டாகும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகள் 2-4 மாதம் முன்பே பலன் தருவதானாலும் கன்னி ராசியினருக்கு சுமாரான பலன் ஓரளவு பரவாயில்லை பணப்புழக்கம் பரவாயில்லை, உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம், விரும்பிய புதிய வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு. புதிய முயற்சிகள் பலன்தரும்.கோரிக்கைகள் நிறைவேறும், சொந்த தொழிலில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். புதிய விரிவாக்க முயற்சிகள் நிறைவேறும். பொதுவில் பணத்தட்டுப்பாடு இருக்காது. இல்லத்தில் சுப நிகழ்வுகள் கூடி வரும். இருந்தாலும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாய் இருத்தல் வேண்டும். ஓரளவு மருத்துவ செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரம் வீண் விவாதங்களை தவிர்ப்பது மன உளைச்சல் ஏற்படுவதை குறைக்கும்.
ப்ரார்த்தனைகள்: இந்த வருடம் சுமாராக இருப்பதால் அருகில் இருக்கும் நின்ற திருக்கோல பெருமாளை வழிபடுவதும், கோயிலில் துளசி மாலை சாற்றுவது, ஸ்லோகங்கள் சொல்வது, விளக்கேற்றுவது, முடிந்த அளவு வயோதிகர்கள் இயலாதவர்களுக்கு உதவி செய்வது தான தர்மம் செய்வது நன்மை தரும். நீர் மோர் தானம் செய்யுங்கள்.