
தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்
சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.
இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.
பிலவ வருட வெண்பா:
பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்
பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.
குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.
சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!
புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
துலாம் : (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4 பாதங்கள் , விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய):
சித்திரை முதல் ஆடி வரையில்: உங்கள் ராசிநாதன் வருடம் தொடங்கும்போது 7ல் சூரியன் சந்திரனுடன். இந்த வருடம் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இதுவரை தடங்கலாக இருந்த எந்த ஒரு விஷயமும் இனி பூர்த்தியாகி மகிழ்ச்சியை தரும்.
பெரிய அளவில் பண வரவு இருக்கும். சேமிப்பு அதிகம் ஆகும். மற்ற கிரஹ சஞ்சாரங்களும் பெரிய பாதிப்பை தரவில்லை, 4ல் சனி ஆட்சி சுகஸ்தானம், தாயார் ஸ்தானம் மட்டுமல்லாது பூமி லாபமும் கூட அந்த சனிபகவானை 2ல் இருக்கும் கேது பார்ப்பது ஆசைப்பட்ட வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
மேலும் செவ்வாயின் பலமும் வீட்டை உறுதி படுத்தும். இதுவரை சங்கடத்தை கொடுத்துவந்த வழக்குகள் சாதகம் ஆகும் மேலும் திருமணம் கைகூடும் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளால் புதிய உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பணப்புழக்கம் தாராளமாக இருப்பதாலும் தெய்வ அனுகூலம் இருப்பதாலும் உத்தியோகம், சொந்த தொழில் இவற்றில் நல்ல நிலை இருக்கும்.
விரும்பிய இடமாற்றம் இருக்கும். இந்த 4 மாதங்கள் உங்கள் எண்ணங்கள் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சி அதிகரிக்கும். வரும் வாய்ப்புகளை சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள்
ஆவணி முதல் கார்த்திகை வரையில்: பொதுவாக கிரஹங்கள் சாதக நிலையே ப்ரதிபலிக்கிறது இருந்தாலும் 2ல் கேது சங்கடங்களையும் உடல் ரீதியான படுத்தல் குடும்ப அங்கத்தினர் முன்னேற்றம் தடை, 8ல் ராகு மன குழப்பம் சில சஞ்சலங்கள் தொழில் மந்தம். பண விரயம், பணம் தாமதமாக வருதல் என்று இருக்கிறது. அதிக உழைப்பு தேவைப்படும். சிக்கணம் நன்மை தரும். ஜென்மத்தில் சூரியன் வரும்போது சனியின் 10ம் பார்வை படுவதால் நீசபங்க ராஜயோகமாக மாறி எதிலும் வெற்றி என்று தரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். வாழ்க்கை துணைவர் பிள்ளைகள் மூலம் மருத்துவ செலவும், தேவையில்லாத விரயமும் இருக்கும். உத்தியோகத்தில் அதிக சுமை இருக்கும். இருந்தாலும் நல்ல பெயரும் கொஞ்சம் ஊதிய உயர்வும் வரும். சொந்த தொழிலில் கடன் கிடைப்பது கடினமாக இருக்கும் போட்டிகள் அதிகரித்து மன சோர்வை தரும். இருந்தாலும் சனியின் பார்வை எதிர்ப்புகளை முறியடிக்கும் சக்தியை தந்து பண வரவை அதிகரிக்க செய்யும். அனைத்து பிரிவினருக்கும் தனிப்பட்ட ஜாதங்களில் கிரஹ வலிமை நன்றாக இருந்தால் நன்மை அதிகமும், சுமாராக இருந்தால் சில எதிர்பாராத சங்கடங்கள் மன வருத்தங்களும் இருக்குமே தவிர பாதிப்புகள் இருக்காது. வழக்குகளில் ஒரு தேக்க நிலை இருக்கும். புதிய வழக்குகள் உண்டாவதை தவிர்க்க எவருடனும் அனுசரித்து போவது நல்லது.
மார்கழி முதல் பங்குனி வரையில்: குரு மற்றும் ராகு கேதுகள் அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகி அதன் பலனை முன்கூட்டியே வழங்குவதால் தடைபட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும் புதியவாய்ப்புகள் தேடி வந்து பண பிரச்சனையை தீர்க்கும். பணப்புழக்கம் தாராளம், தாமதித்த திருமண நிகழ்வுகள் சிலருக்கு குழந்தைபாக்கியம் என்றும் சிலர் புதுவீடு, வாகனம் வாங்குதல் என்று சுப விரயமாக இருக்கும். கிரஹங்கள் அனைத்தும் சாதகமாய் இருப்பதால் இதுவரை செய்து வந்த செயல்கள் யாவிலும் வெற்றியும் அதன் மூலம் சமூக அந்தஸ்து புகழ், உறவுகள் நண்பர்கள் நெருக்கம் , இல்லம் மகிழ்ச்சி பெறுதல் என்று நன்றாகவே இருக்கும். சேமிப்பு குடும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி கிடைக்கும், இடமாற்றம் மகிழ்ச்சி தரும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் உண்டாகும். அனைத்து தொழில் செய்வோரும் வியாபாரம் செழித்து பணவரவை தாராளமாக்கும். சரக்குகள் விற்று தீர்ந்து லாபம் அதிகரிக்கும். அரசு உதவி, வங்கி கடன் உதவி எல்லாம் தாராளமாக கிடைக்கும். பொதுவில் பணம் பலவழியிலும் வந்து சேமிப்பையும் புதிய பொருட்சேர்க்கை வீடுவாகன யோகம் என்றும் கேளிக்கை விருந்து, புனித யாத்திரை இவைகளாலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ப்ரார்த்தனைகள் : நன்மை மிக அதிகம் இருப்பதால் நரசிம்மரை வழிபடுங்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாவதால் குலதெய்வ வழிபாடு அபிஷேகம் வஸ்திரம் சாற்றுதல் போன்றவை செய்யுங்கள். முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம் எளியோருக்கு உதவி செய்வது என்று இருப்பதால் தீமைகள் கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.