
தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்
சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.
இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.
பிலவ வருட வெண்பா:
பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்
பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.
குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.
சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!
புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
கும்பம் : (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) :
சித்திரை முதல் ஆடி வரையில்: வருட ஆரம்பம் 3ல் சூரியன் சஞ்சாரம் ஒரு ஆறுதல் ஓரளவு நன்மை மனம் தைரியம் ஏற்படும் சந்திரனும் சுக்ரனும் கூட பணவரவை தாராளமாக்கும் ஆனால் குருபகவான் ஜென்மத்தில் 13.06.21 வரை + ராகு, 5ல் செவ்வாய் கொஞ்சம் பாதிப்பை தருகிறது.
எதிலும் ஒரு மந்த நிலையும், பொருள்விரயம், பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். மற்ற கிரஹங்களில் புதன் சுக்ரன் பெரும்பாலும் நன்மை தருவதால் ஓரளவு நினைப்பது நிறைவேறும். மற்ற கிரஹங்கள் நன்மை தீமை கலந்து செய்கின்றனர். அமைதி பொறுமை, யோசித்து செயல்படுதல், சிக்கனம், சேமிப்பு என்று இருந்தால் ஓரளவு இந்த நான்கு மாதங்களை கடந்துவிடும்.
அவசரப்படுதல் எவரையும் நம்பி பொறுப்பை பணத்தை கொடுப்பது என்று இருந்தால் பாதிப்பு அதிகம் இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் சொந்த தொழிலில் அதிக சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது கவனமாக இருப்பது அவசியம். பணப்புழக்கம் சுமாராக இருக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கும்.
உறவினர்களால் வரும் சங்கடம் பணப்பிரச்சனை இவை மன உளைச்சலை தரும். வாக்குவாதம், எரிச்சலால் வார்த்தைகளை கொட்டுதல் இவை பெரும்பாதிப்பை தரும்.
ஆவணி முதல் கார்த்திகை வரையில்: 12ல் குரு சனி, 7ல் சூரியன் , வக்ர புதன் இப்படி எதில் எடுத்தாலும் விரயம், பாதிப்பு என்ற அளவிலேயே இருக்கும், சுக்ரனும் சனி பார்வையாலும் பணவரவையும் முன்னேற்றத்தை கொடுத்தாலும், மனம் அதைரியப்படும் தேவையில்லாத மருத்துவ செல்வுகள், உத்தியோகத்தில் பின்னடைவு சொந்த தொழிலில் மந்த நிலை, புதிய முயற்சிகள் தடை படுதல், இல்லத்தில் மன விரோதங்கள் வேலை பார்க்கும் இடத்தில் சண்டை என்றெல்லாம் போய் கொண்டே இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் போதாது என்பது போல இருக்கும். அவசரப்படாமல் நிதானமாக யோசித்து, நலம்விரும்பும் பெரியோர்களின் ஆலோசனைப்படியும், வார்த்தைகளை கொட்டாமலும் இருந்தால் ஓரளவு நன்றாக கடந்துவிடலாம். மருத்துவ செலவுகள் தனக்கே, வாழ்க்கை துணைவர், பெற்றோர் குழந்தைகள் என்று எல்லோராலும் அதிகரிக்கலாம். பிள்ளைகள் வழியில் வரும் பிரச்சனைகளை குடும்ப அங்கத்தினருடன் விவாதித்து முடிவெடுப்பது என்று இருந்தால் சந்தோஷமாக குடும்பம் ஓடும். புது வீடு அல்லது பணத்தை இன்வெஸ்ட் செய்வது போன்ற விஷயங்களில் 14.11.21க்கு பின் செயல்படுத்துவதும் தக்க ஆலோசனை பெற்று செய்வதும் நன்மை தரும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். இந்த 4 மாதம் அதிக சிரமம் உண்டாகும்.
மார்கழி முதல் பங்குனி வரையில்: குரு 2லும், ராகு கேது 3-9லுமாக பங்குனியில் மாறுவது அதற்கு முன்னர் அந்த பலனை தருவதால் இதுவரை இருந்துவந்த வேதனைகள் தீரும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய வேலை, பதவி உயர்வு போன்றவை கிடைத்து பணப்புழக்கம் தாராளம் என்று இருக்கும். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும், சொந்த தொழிலில் வளர்ச்சி கூட ஆரம்பிக்கும். இல்லத்தில் திருமணம், குழந்தை போன்ற சுப செலவுகள் மகிழ்ச்சியை தரும். சிலருக்கு வீடுவாங்கும் யோகம் கைகூடும். வரவேண்டிய கடன்கள் வசூலாகும், விவசாயம் வளர்ச்சி அடையும், தடைபட்டுவந்த வழக்குகள் சாதகமாக தீர்ப்பு வரும். அரசாங்கம் சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வந்து ஒரு நிம்மதியை தரும். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும். இல்லத்து உறுப்பினர்கள் மருத்துவ செலவும் குறைய ஆரம்பிக்கும். விட்டுப்போன தொடர்புகள் புதிப்பிக்கப்பட்டு மன ஆறுதல் மகிழ்ச்சி உண்டாகும். விருந்து கேளிக்கைகள், ஆடை ஆபரண சேர்க்கை, புனித பயணம், வேலை நிமித்தம் பிரிந்த குடும்பம் திரும்ப ஒன்று சேருதல். எதிரிகள் தொல்லை குறையும். நல்ல நிலை உண்டாகும். மகிழ்ச்சி கூடும். பொதுவில் இந்த கடைசி 4மாதங்கள் மிக நன்றாக இருக்கும்.
ப்ரார்த்தனைகள் : ப்ரத்யுங்கராதேவி, சாஸ்தா போன்ற தெய்வங்களை வழிபடுவது துர்க்கை கோயிலில் விளக்கேற்றுவது அம்பாள் ஸ்லோகங்களை சொல்வது போன்றவையும், முடிந்த அளவு அன்ன தானம், வஸ்திர தானம் இயலாதவர்களுக்கு சரீர ஒத்தாசை பண உதவி செய்வதும் நன்மை தரும்.குல தெய்வ வழிபாடும் முக்கியம்.