2016 ஆண்டு பலன்: சிம்மம்

சிம்மம்:

 

நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை கடினமாக உழைக்கும் மனௌறுதி கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

 

கிரகநிலை:

 

குருபகவான் ராசியிலும் ராகு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சனி பகவான் சுகஸ்தானத்திலும் கேது அஷ்டமஸ்தானத்திலும் – இருக்கிறார்கள்.          

08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது ராசிக்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தைரிய வீரிய  ஸ்தானம் –  ஸப்தம  ஸ்தானம் –  லாப ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.          

 

08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது ஸப்தம  வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  பாக்கிய  ஸ்தானம் –  ராசி –   பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.          

 

01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  ரண ருண ரோக  ஸ்தானம் –  சப்தம பார்வையால்  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் –  நவம பார்வையால்  தொழில்  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

 

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில்  பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள்.  கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப் பவர்கள்  எதையும் குழப்பத்துட னேயே செய்ய நேரிடும். சக ஊழியர் களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம்  கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

 

வரும் 2016ம் ஆண்டு எது நடந்தாலும் நன்மைக்கே என்ற உறுதிப்பாட்டுடன் உங்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கும். நிறைவேற்ற வேண்டிய பல பணிகள் உங்களை சுற்றி சுற்றி இருக்கும். உங்கள் ராசிக்கு வரப்போகும் ராகுவாலும் – தனஸ்தானத்தில் வலம் வரப்போகும் குரு – இந்த அமைப்பால் ஒவ்வொரு செயலும் வெற்றி தருவதாகவே இருக்கும். ஆனாலும் சனியின் தசம பார்வையால் போட்டு வைத்திருந்த திட்டங்களில் சுணக்கம் ஏறப்ட வாய்ப்புண்டு. பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தைத் தருவதாகவே இருக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் – நண்பர்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பீர்கள். ஆன்மீக காரியங்களை மனநிறைவுடன் நடத்துவீர்கள். துன்பங்கள் விலகிப் போகும். சில சமயங்களில் கடுமையான சொற்கள் வெளிப்படலாம். இதனால் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லவும் வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்கவும் – வீடு – மனைகள் வாங்கவும் மிகவும் நல்ல காலகட்டமிது. ஏற்கனவே இருக்கும் வீட்டினையும் சீர் செய்ய வாய்ப்புகள் வந்து சேரும். குலதெய்வம் உங்களை அரண் போல் காக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வாய்ப்பும் – சந்தாண பாக்கியமும் கிட்டும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து  ஏற்றமான நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை தொற்றிக் கொள்ளும். தம்பதிகளுக்குள் நல்ல இணக்கமான சூழல் இருக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆயுள் அபிவிருத்தி ஏற்படும். வெளிநாடு வாய்ப்புகள் வந்து குவியும்.

 

உத்தியோகஸ்தர்களுக்கு:

அரசு மற்றும் தனியார் துறையில் உயர்பதவியில் உள்ள ஊழியர்கள் தங்கள் பணீயில் திறம்பட செயலாற்றி கொடுக்கப்பட இலக்கினை அடைவார்கள். அடிக்கடி வெளியூர் – வெளிநாடு பிரயாணம் செய்யும் நிலை உருவாகும். பள்ளி – கல்லூரி போன்ற கல்வி ஸ்தாபனங்களை நடத்தி வருபவர்களுக்கு உயர்ந்த நிலை ஏற்படும். சக அதிகாரிகளுடன் சுமூகமான நிலை காணப்படும். சொல்லும் செயலும் மிகுந்த கவனம் நிறைந்ததாக இருக்கும். மேலிடத்துடன் ஏற்படும் கருத்து மோதலால் அவப்பெயர் ஏற்படலாம். உத்தியோக உயர்வுக்காக கல்வி பயில்பவர்களுக்கு நல்ல முறையில் தேர்ச்சி பெற்று பணியில் உயர்வும் கிட்டும். வேலை பற்றீ மனதிலிருந்த கவலைகள் நீங்கும். உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

 

தொழிலதிபர்களுக்கு:

உணவு தானியங்கள் – தாவர எண்ணைகள் உற்பத்தி செய்ப்வர்களுக்கு உற்பத்தி பெருகும். ஏற்றுமதி வாய்ப்புகள் வந்து குவியும். மருத்துவமனை நடத்துபவர்களுக்கு நவீன உபகரணங்கள் சேரும். இதனால் நல்ல பெயர் கிடைக்கும். ஆடைகள் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு உற்பத்தி பெருகுவதோடு மட்டுமல்லாமல் அதிகமான ஆர்டர்களும் கிடைக்கும். தொழிலுக்கென்று புதிய வாகனம் – அலுவலகம் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடன் – வழக்குகள் பைசல் ஆகும். லாபத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. உங்கள் நிறுவன பங்குகள் உச்சத்தைத் தொட வாய்ப்புகள் கிடைக்கும். பங்குதாரர்களின் எண்ணிக்கை அதிகமாகும். வியாபார நிமித்தமாக வெளிநாடு செல்வோருக்கு எந்த தடங்கலும் இராது.

 

 

மாணவர்களுக்கு:

கம்ப்யூட்டர் – தொழில் நுட்பக் கல்வி – தொலைத்தொடர்பு – வானியல் விஞ்ஞானம் – நுணுக்கமான கல்வி பயிலும் மாணாக்கர்கள் நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். எந்த தடங்கலும் இன்றி கல்வியில் வளர்ச்சி இருக்கும். அனைவரையும் மதித்து நடக்கும் பண்பு அதிகரிக்கும். இதனால் அனைத்து இடத்தில் நற்பெயர் கிட்டும். உற்றார் உறவினர்கள் – சக மாணவர்கள் – ஆசிரியர்கள் ஆகியோரின் ஆதரவால் மனமகிழ்ச்சி உண்டாகும். வாகனம் சார்ந்த படிப்பு – மின்சாரம் – மிகப் பெரிய அளவில் கட்டுமானம் சார்ந்த கல்வி பயில்பவர்களுக்கு கவனச் சிதறல்கள் ஏற்படலாம். ரசாயணம் – மருத்துவம் போன்ற கல்வி கற்பவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான சூழல் ஏற்படும். புதிய நண்பர்கள் பழக்கமாவார்கள். முக்கிய பரிட்சைகள் எழுதுபவர்கள் தங்களது சுகதுக்கங்களை மறந்து கடுமையாக உழைத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

 

பெண்களுக்கு:

குடும்பத்தை நிர்வாக செய்து வரும் பெண்களுக்கு நெருங்கிய சொந்தங்கள் மூலம் இன்னல்கள் ஏற்படலாம். புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்புகள் வந்து சேரும். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நிர்வாகம் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். உங்களுக்கு எதிரான செயல்களை செய்வோர் உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரால் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடுவார்கள். சமூகம் சார்ந்த பொறுப்புகள் கிடைக்கும். புத்திரபாக்கியம் எதிர்பார்ந்திருந்த பெண்களுக்கு நல்ல முறையில் கிடைக்கும். உங்களால் குடும்பத்தில் ஒற்றுமையும் குதூகலமும் நிறைந்திருக்கும். ஆரோக்கிய பலம் ஏற்படும்.

 

கலைஞர்களுக்கு:

திரைப்படத்துறை – தொலைகாட்சிதுறை கலைஞ்சர்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு பெறுவார்கள். கிராமப்புற கலைஞ்சர்கள் தங்களை உலகத்திற்கு வெளிகாட்ட சரியான சமயமிது. வருமானம் போதுமானதாக இருக்கும். புகழுக்கும் பாராட்டுக்கும் குறைவில்லை. நகைத்தொழில் செய்பவர்களின் வாழ்வு மேம்படும். தொழில் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன் அதிலுள்ள ஷ்டரத்துகளை ஒருமுறைக்கு இருமுறை படித்து வைத்துக் கொள்வது நல்லது.

 

அரசியல்துறையினருக்கு:

எண்ணீய செய்லகள் செய்வதில் சிரமங்கள் இருந்தாலும் சிரமேற் கொண்டு செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். அதே வேளையில் சில காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றியின் படிக்கட்டுகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். புதிய பதவிகளை பெறுவதின் மூலம் அனைவருக்கும் நன்மைகள் வாய்ப்புகள் கிட்டும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ர்பு வரும். இறைபக்தியால் அனைத்து விதமான பிரச்சனைகளை சாதித்துக் கொள்வீர்கள். மற்ற மொழி பேசும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. அறிமுக இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது அவசியமாகிறது. எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி மனதில் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

பரிகாரம்: ஞாயிறுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: சூரியனார் கோவில், பாபநாசம், திருவண்ணாமலை.