2016 ஆண்டு பலன்: கன்னி

கன்னி:

தோற்றப்பொலிவின் மூலம் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் திறன் கொண்ட கன்னி ராசி அன்பர்களே

 

கிரகநிலை:

குருபகவான் அயன சயன போக ஸ்தானத்திலும் ராகு ராசியிலும் சனி பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலும் கேது ஸப்தம ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.        

 

08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது அயன சயன போக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் –  ரண ருண ரோக  ஸ்தானம் –  தொழில்  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.       

 

08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் –  அயன சயன போக  ஸ்தானம் –  சுக ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.   

 

 

01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் ராசிக்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் –  சப்தம பார்வையால்  ஸப்தம  ஸ்தானம் –  நவம பார்வையால்  பாக்கிய  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் வீண் பிரச்சனையால் மனகுழப்பம் ஏற்படலாம். பயணங்களில்  தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது.  பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். போட்டிகள் உண்டாகலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை உண்டாகும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி குறையும். பேசாமல் சென்றால் கூட வீண் பிரச்சனை களை சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துசெல்வது நல்லது. பிள்ளைகளிடம் கவனமாக இருப்பது நன்மை தரும்.

 

 

2016ம் ஆண்டில் நீங்கள் புதிய செயல்களை தொடங்கி வெற்றி காண்பீர்கள். கடந்த ஆண்டில் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இவ்வாண்டு அணுகூலமாக நடைபெறும். தேவையற்ற வேலைகளை செய்து குடும்பத்தினரிடம் அவப்பெயர் நீங்கும். அதோடு மட்டுமல்லாமல் சாதனைகள் செய்து மற்றவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவீர்கள். உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருவதற்கான வழிகள் வந்து சேரும். புதிய வாகனங்கள் – மனை யோகம் ஏற்படும். மற்றவரிகளிடம் பேசும் போது வார்த்தைப் பிரயோகம் முக்கியம். உடல் உழைப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வருமாணம் அதிகரிக்கும். வேலைய் இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தம்பதிகளுக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புத்திரங்கள் வகையில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். வம்பு வழக்குகள் சரியாகும். இடம் விட்டி இடம் பெயரும் சூழல் உருவாகும். குடும்பத்திஐ விட்டு பிரிய வேண்டிய காலகட்டம் வரலாம். நற்குணம் இல்லதாவர்களின் பழக்க தோஷத்தால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். கவனம் தேவை. சில போலிகள் நல்லவர்கள் போல் நடித்து உங்களை ஏமாற்றலாம். வாக்குவாதங்களால் நேர விரையம் – பொருளாதார இழப்பு – நிம்மதி குறைவு ஆகியவை ஏற்படலாம். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் உள்ள வழக்குகள் இவ்வாண்டு இறுதிக்குள் உங்களுக்கு சாதகமாகும். கடன் பாக்கிகள் பைசல் பண்ணுவதில் சிறிது தடை ஏற்படலாம். வீட்டில் உள்ள வளர்ப்புப் பிராணிகளிடம் கவனம் தேவை.

 

உத்தியோகஸ்தர்களுக்கு:

அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சக ஊழியர்கள் மற்றும் மேலிடத்தால் ஏதேனும் மனக்கிலேசங்கள் ஏற்படலாம். மேலதிகாரிகள் உங்களை நடத்தும் விதத்தால் உங்களுக்கு அவ்வப்போது எரிச்சல் ஏற்படலாம். இதுவரை உங்களுக்கு சாதகமாக் நடந்து வந்தவர்கள் கூட இனி உங்களிடம் பகைமை பாராட்டலாம். பேசும் வார்த்தைகளில் அவச்சொல் வரமால் பார்த்துக் கொள்வது நல்லது. தெய்வப் பணிகளில் ஆர்வமும் சமூகம் சார்ந்த பணிகளில் தொய்வும் ஏற்படலாம். சம்பள உயர்வு கணிசமாக இருக்கும். பிறரால் அச்சுறுத்தல் இருந்தாலும் அதைககண்டு ஒதுங்கி விடுவது நன்மை தரும். உத்தியோக உயர்வுடன் கூடிய பணி இட மாற்றத்திற்கு வாய்ப்புகள் உள்ளது.

 

தொழிலதிபர்களுக்கு:

ஆட்டோமொபைல் – சரக்கு போக்குவரத்து – கப்பல் துறை – விமான சார்ந்த துறையினருக்கு எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். உற்பத்தியாளர்கள் கணிசமாக உற்பத்தியைப் பெருக்குவார்கள். தங்கலிடம் பணியாற்றூம் ஊழியர்களுக்கு அனைத்து விதமான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்கள். பதிப்பகங்கள் – அச்சுக்கூடங்கள் – புத்தக விற்பனையாளர்கள் – ஆன்மீக எழுத்தாளர்களுக்கு எதிர்பார்க்கும் அனைத்து லாபங்களும் நல்ல மூறையில் வந்து சேரும். வாகனங்கள் புதிது படுத்துதல் – சொத்துக்கள் வாங்குதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கடல் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்வோருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து குவியும். பங்குதாரகளுக்குள் சிறு சிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும்.

 

மாணவர்களுக்கு:

கணிப்பொறி – கணக்குப் பதிவியல் – பொருளாதாரம் – கணிதம் சார்ந்த மாணவர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி சாதனைகள் புரிவார்கள். தொழில்நுட்ப பயிற்சி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரலாம். மேலாண்மை சம்பந்தமான படிப்பில் சிறு சிறு தடைகள் வரலாம். கல்லூரியில் நடக்கும் நேர்முகத்தேர்விலேயே வேலை கிடைக்கும் சூழல் இருக்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவ மணிகளுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். மனதில் துணிவு உர்ய்வாகும். வீரதீர செயல்களில் அதிக கவனம் செல்லக்கூடும். குடும்பத்தினர் – நண்பர்கள் – உறவினர்கள் -ஆசிரியர்கள் ஆகியோன் ஆதரவு கிடைக்கும். புதிதான சாதனைகளைப் படைப்பீர்கள்.

 

பெண்களுக்கு:

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கேற்ப பொறுமையாக அனைத்து காரியங்களையும் சாதிப்பீர்கள். சுயதொழில் செய்து வரும் பெண்கள் கூட்டுத்தொழிலில் அதிக லாபம் பெறுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்திலிருந்து நற்பெயர் கிட்டும். சேவை சார்ந்த துறையில் இருக்கும் பெண்களுக்கு பாராட்டுகள் குவியும். உஞ்கள் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிஉறைவேறும். சந்தோஷ சூழ்நிலை நிலவும்.

 

கலைஞர்களுக்கு:

திரைக்கலைஞர்கள் மிக சிரமப்பட்டு தங்களது தொழிலை நிலைநிறுத்திக் கொள்ள இயலும். சமையல் கலைஞர்கள் – ஆடை வடிவமைப்பினர் – அலங்கார கலைஞ்சர்கள் – தொழில்நுட்பக் கலைஞ்சர்கள் தங்களது புதிய எண்ணங்களை நுழைத்து வெற்றி காண்பார்கள். கிராமபுறம் சார்ந்த கூத்துக் கலைஞர்களுக்கு விருத்துகள் கிடைக்கும். நகைத்தொழில் செய்வோருக்கு மிகக் குறைந்த லாபமெ கிடைக்கும். நிலையான பொருளாதார வசதியும் ஆரொக்கியமான் உடல்நிலையும் உண்டாகும். இசைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நன்அர்கள் உதவியாக இருப்பார்கள்.

 

அரசியல்துறையினர்:

கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது நன்மை தரும். வீண் பகை உருவாகலாம். உங்கள் மீதான பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு மீண்டும் வீண் பிரச்சனைகள் தலை தூக்கலாம். சிலருகு தலைமறைவு வாழ்க்கை ஏற்படலாம். ஆனாலும் பணவரவிற்கு பஞ்சமிருக்காது. மேலிடத்திற்கும் உஞ்களுக்கும் இடையில் சில கருத்து மோதல்கள் வரலாம். பதவி கிடைப்பதில் கட்சிக்குள் எதிர்ப்பு உருவாகும். உங்களுக்கு எதிரானவர்கள் உங்களை ப்பற்றி அவதூறு பிரச்சாரம் செய்யலாம். கவனம் தேவை. அனுகூலமான நிலை வர குருப் பெயர்ச்சி வரை காத்திருப்பது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி  வரவும்.

சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: தெற்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

செல்ல வேண்டிய தலம்: திருவெண்காடு, சபரிமலை, பாபநாசம் சொரிமுத்தையனார்.