2016 ஆண்டு பலன்: துலாம்

துலாம்:

உங்களது நேர்மையான செய்லகளால் மற்றவர்களின் பாராட்டுதல்களையும் –  சுக்கிரனின் பூரண அருளாசியும் ஒருங்கே பெற்ற துலா ராசி அன்பர்களே,

 

கிரகநிலை:

 

குருபகவான் லாப ஸ்தானத்திலும் ராகு அயன சயன போக ஸ்தானத்திலும் சனி பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது ரண ருண ரோகஸ்தானத்திலும் – இருக்கிறார்கள்.      

 

08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது லாப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசி  –  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் –  பாக்கிய  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.          

 

 

08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  ஸப்தம   லாப  ஸ்தானம் –  தைரிய வீரிய  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.  

 

01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் அயன சயன போக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  சுக ஸ்தானம் –  சப்தம பார்வையால்  ரண ருண ரோக  ஸ்தானம் –  நவம பார்வையால்  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

 

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.  மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும்.  பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன்  சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். 

 

 

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 2016ம் ஆண்டில் அதி அற்புதமான பலன்களை பெறப் போகிறீர்கள். ராகு கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு செயலும் தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு செய்வீர்கள். சகல் செல்வங்களும் பெற்று வாழும் பேறு கிடைக்கும். நண்பர்களின் உதவியும் – குடும்பத்தினரின் பாசமும் – அரசுத்துறை சார்ந்தவர்களின் ஆதரவும் உங்களை சந்தோஷத்தில் நிலைகுலையச் செய்யும். பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் அடிக்கடி நிகழும், அதன்மூலம் லாபமும் கிடைக்கும். வீடு – மனை – ஆடை -ஆபரண சேர்க்கை உண்டு. சொல்லும் செயலும் ஒருங்கே இருக்கும். தைரியம் மிளிரும். அதிக புகழ் உண்டாகும். புதிய லக்வி கற்பதற்கான சூழல் ஏற்படும். அதிக புக உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும். எதிரிகள் பலமிழந்து போவார்கள். பெற்றொர்ர்கள் உங்களுக்கு அணுசரனையாக இருப்பர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வந்த பிணி நீங்கும். தியான – யோக செய்வது நன்மை தரும்.

 

உத்தியோகஸ்தர்களுக்கு:

அரசு – தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நீதி – நெர்மையுடன் செயல்பட்டு மக்கள் ஆதரவைப் எப்றுவீர்கள். அத்தியாவசிய கோரிக்கைகள் அனைத்தும் எமேலிடத்தால் அங்கீகரிக்கபப்டும். நடைமுறை ம்வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கன சூழல் உருவாகும். புகழ் அதிகரிக்கும்.வாகனஞ்களை மாற்றூவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பூமி – மனை – வீடு வசதிகளுக்கான வங்கிக் கடனுதவி தாரளாமகக் கிடைக்கும். அலுவலக எதிரிகள் காணாமல் போவார்கள். கிடைக்கும் ஆதாயத்தை சேமிக்கும் பழக்கம் உருவாகும். அலுவகத்தில் சிறப்பாக பணிபுரிவதால் அரசாஞ்கத்தில் சிறப்பு சலுகைகள் கிட்டும். பழையகால் இழப்புகள் இவ்வாண்டில் சரிசமமாகும். வேலையில் அதிக கவனம் செலுத்துவதால் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

 

 

தொழிலதிபர்களுக்கு:

பால் – மருத்துவம் – பண்ணைகள் வைத்திருப்போருக்கு சில கட்டுப்பாடுகளால் தொழிலில் விரக்தியான சூழ்நிலை உருவாகலாம். ஆனாலும் மனதில் தைரியத்துடன் பீடு நடை போடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சனி – குரு சஞ்சாரத்தால் ஆட்டோமொபைல் – இயந்திரம் சார்ந்த துறையினருக்கு லாபங்கள் அதிகமாகும். வீடு – அலுவலகம் போன்றவற்றில் பணம் – ஆவணங்கள் – நகைகள் ஆகியவற்றை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது. பஞ்குதாரர்களுடன் வீண் மனக்கிலேசம் ஏற்படூ மனநிம்மதி குறையக்கூடும். கடுமையான உழைப்பை செலவழிக்க வேண்டி வரலாம். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. குருப்பெயர்ச்சிக்கு பின் அனுகூலமான நிலை வந்து சேரும். பாங்க் கடனகள் பைசல் ஆகும். கடந்த ஆண்டில் இருந்து வந்த நிலுவைத் தொகை அனைத்தும் கொஞ்ச கொஞ்சமாக அடையும். ஆடை வடிவமைப்பளருக்கு ஆச்சர்யங்கள் தரும் வைகயில் லாபங்கள் வந்து சேரும்.

 

மாணவர்களுக்கு:

உயர்கல்வி பயில்வதற்கான சூழல் உருவாகும். கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டி வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். படிப்பில் நல்ல முன்ன்ற்றம் ஏற்படும். நண்பர்கள் – ஆசிரியர்கள் சகஜமாகப் பழகுவார்கள். சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். அதிக நேரம் விழித்திருந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் உங்களுக்கு அனுசரனையாக இருந்து உங்களை ஊக்குவிப்பார்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று நற்பெயர் எடுப்பீர்கள்.

 

பெண்களுக்கு:

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் வேலைகளை திருப்திகரமாக முடித்து நிர்வாகத்தினரிடம் நற்பெயர் வாங்குவார்கள். பணி உயர்வும் – சம்பள உயர்வும் எதிர்பார்த்தபடி  கிடைக்கும். குடும்ப நிர்வாகம் செய்யும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். இதனால் முதுகுவலி – உடல்வலி ஏற்படலாம். மாத விலக்கின் போது அதிகமான வயிற்று வலியும் ஏற்படலாம் – கவனம் தேவை. வருமானத்திற்கு எவ்வித குறைவும் இருக்காது. கால்நடை வளர்ப்போருக்கு அதிகமான லாபங்கள் வந்து சேரும். சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் கிடைப்பதோடு நல்ல அங்கீகாரமும் வந்து சேரும். திருமண வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த பெண்களுக்கு மங்கள நாண் ஏறும் வருடமிது.

 

கலைஞர்கள்:

திரைக்கலைஞர்கள் கூடுதல் திறமையினை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவார்கள். கிராமியக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து குவியும். நகைத்தொழில் செய்பவர்களுக்கு மிக அதிக லாபம் வந்து சேரும். கட்டிட கலைஞர்களுக்கு பொன்னான காலமிது. புதிய வாகனங்கள் சேர்க்கை உண்டு. தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் சேர்க்கையால் தொழில் அபிவிருத்தி ஏற்படும்.

 

அரசியல்துறையினர்:

பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடலாம். கவனம் தேவை. மேடைப் பேச்சாளர்களுக்கு சக மனிதர்களாலேயே பிரச்சனைகள் வரலாம். பெண் அரசியல்துறையினருக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். வீணாண பஞ்சாயத்தில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கவும். வருமானம் நல்ல முறையில் வந்து சேரும். எதிரிகளை கண்டுகொள்ளாமல் பயணிப்பது நன்மை தரும்.

துலாம்:

 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

செல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர்