2016 ஆண்டு பலன்: மீனம்

மீனம்:

பரந்த மனப்பான்மையும், இரக்க சிந்தனையும் கொண்ட மீன ராசி அன்பர்களே!!

 

 

கிரகநிலை:

 

குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் ராகு ஸப்தம ஸ்தானத்திலும் சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது ராசியிலும் இருக்கிறார்கள்.   

08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் –  அயன சயன போக  ஸ்தானம் –  சுக ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.   

 

08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது அயன சயன போக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் –  ரண ருண ரோக  ஸ்தானம் –  தொழில்  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.       

 

01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் ஸப்தம  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  லாப  ஸ்தானம் –  சப்தம பார்வையால்  ராசி –   நவம பார்வையால்  தைரிய வீரிய  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி   போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும்.  நெருக்க மானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான  முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள்  மத்தியில்  மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான  பொருள்களை  வாங்குவீர்கள்.  கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி கூடும்.  பிள்ளைகளின்  கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

 

நீங்கள் செய்யும் நற்செயல்களைப் பொறுத்து நல்ல பலன்கள் பெறுவீர்கள். புகழ் தரும் வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உருவாகும். தாய்வழி சார்ந்த உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். நற்காரியங்களைப் பொறுத்து பணவரவு ஏற்படும். உபதேச தொழில் புரிபவர்களும், ஆன்மீக பலம் பெற்று பாமர மனிதனுக்கு வழிகாட்டும் நிலையில் உள்ளவரிகளும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவார்கள்.

பணவரவு இவ்வாண்டு நன்றாகவே அமையும். குரு வழிபாடு செய்தால் அவர் உங்களுக்கு நன்மையையே தருவார்.  இவ்வாண்டு நீங்கள் தர்மம் செய்யும் ஆண்டாக கருத வேண்டும். ஏழை குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுங்கள். ஏழை சுமங்கலி பெண்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் ஆடை எடுத்துக் கொடுங்கள். இந்த தர்மத்தின் காரணமாக ஒரு சில பிரச்சனைகள் வருவது நிச்சயமாக தடுக்கப்படும்.

சிலருக்கு அலுவலகத்தில் பிரச்சனை வந்தாலும் தர்மம் தலை காத்து விடும். வக்கீல் தொழில் புரிபவர்கள், தாங்கள் ஆஜராகும் வழக்குகளில் வெற்றி பெறும் வாய்ப்புகல் உருவாகும். பொன், பொருள் சேர்க்கையும், உணவுத் தேவைகளும் பூர்த்தியாகும். நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவங்கள் வளர்ச்சி பெறும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி யோகம் சிலருக்கு கிடைக்கும் யோகம் உண்டாகும். இயந்திர வகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இடமாற்றமும், தொழில் வளர்ச்சியும் உண்டாகும். ஆதாயங்கள் ஏராளமாக கிடைக்கும். ஆனால் உங்களிடமிருந்து அதை பெற எண்ணலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு,

அரசு அதிகாரிகள் செயல்பாடுகல் தீவிரமாக இருக்கும். பாங்கு மற்றும் தனியார் துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் பொருளாதார வரவு செலவு கணக்கில் நற்பெயர் பெறுவார்கள். பிறரிடம் ஒப்படைக்காமல் கவனமாக இருங்கள். பொருளாதார வரவு இருந்தாலும் செலவுகளும் உண்டு. குலதெய்வ அருளும், பூர்வ புண்ணிய பலன் தகுந்த நேரத்தில் காப்பாற்றும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதியரிடம் ஒற்றுமை சீராக இருக்கும். சிலருக்கு உத்யோகம் அல்லது இடமாற்றம் லாபத்துடன் ஏற்படும். இவ்வாண்டு இரட்டிப்பு போனஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தொழிலதிபர்களுக்கு,

தங்கள் கம்பெனிக்கு புதிய கிளைகள் தொடங்கவே, இருக்கும் இடத்தை விஸ்தரிப்பு செய்யவோ தற்சமயம் ஏற்ற காலம். சாக்லெட், பிஸ்கட் வகை உற்பத்தி செய்பவர்கள் புதிய பெயர்களுடன் உற்பத்தி செய்து முன்னேற்றம் காண்பீர்கள். நவரத்தினக்களால் உருவாக்கப் பெற்ற ஆபரணங்களை உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர் பெற்று சிறப்பு பெறுவர். சமையல் எண்ணெய் தொழிலில் மிகப்பெரிய அளவில் செயல்படும் நிறுவனங்கள் அரசிடமிருந்து சிறந்த சேவைக்கான விருது பெறும் வாய்ப்பு உண்டு. தொழில் சிறப்பு பெற்றாலும் மனதில் நிம்மதி அற்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

வியாபாரிகளுக்கு,

பேக்கரி, வாசனைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். மருந்து விற்பனையாளர்கள் தொழிலில் உயர்வு பெறுவர். உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை செய்பவர்கள் வியாபார மேன்மை பெறுவர். நாட்டு மருந்து கடை நடத்துபவர்கள் தங்கல் வியாபாரம் செழிக்கப் பெறுவர். சமையல் பொடி, ஊறுகாய் மற்றும் ஜாம் விற்பனையாளர்கள் நல்ல லாபம் பெறுவர். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து விலகும். தெய்வ வழிபாடுகள் ஆன்ம பலத்தை கொடுக்கும். சுபகாரிய செலவினங்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு,

சமையல் கலை, இயந்திரங்களை கையாளும் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற்றம் பெறுவர். ஆன்மீகம், கலை, யோகாசனக் கல்வி பெறும் மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். சக நண்பர்களிடம் வாக்கு வாதங்களும், விளையாட்டு செயல்பாடுகளும் ஏற்படாமல் தவிர்த்துக் கொண்டால் நன்மை உண்டாகும். சகோதரர்களால் தகுந்த உதவி கிடைக்கும். கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.

பெண்களுக்கு,

 அரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் தங்கள் பணியில் அதிக சுமை பெற்றாலும் நல்ல வருமானம் பெறுவர். மகளின் சுய உதவிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள், சிறு தொழில்கள் மூலம் முன்னேற்றம் காண்பர். புத்திர வகையில் இவர்களுக்கு பெண் பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். மனதில் புதிய தைரியமும், செயலில் உத்வேகமும் நிறைந்திருக்கும். நடக்கப் போகும் விஷயங்களை சூழ்நிலைகள் முன்கூட்டியே உணர்த்திவிடும். நட்பு வகையிலான உதவிகள் நன்மைகளைத் தரும். உடல் ஆரோக்கியத்துடன் ஆயுள் பலம் நிறைந்த்தாகவும் இருக்கும். திருமணம் ஆன பெண்கள் கணவருடன் ஒருமித்து வாழ்வார்கள். தந்தை வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறவும், உங்களுக்குக் தரவேண்டிய சீர்முறைகளும் கிடைக்க வழி உண்டு.சிறுதொழில் நிர்வாகம் செய்பவர்கள் நற்பெயர் பெறுவர். ஆடை, ஆபரணங்கல் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும்.

கலைஞர்களுக்கு,

இசை, நடிப்பு கலைஞர்கள் பிறருக்கு கலைகளை கற்றுத்தருவதன் மூலம் புகழும், பொருளாதார மேன்மையும் பெறுவர். மரப் பொருட்களில் அலங்கார பொருட்கள் செய்பவர்களுக்கு புதிய வரவேற்பு கிடைக்கும். வாகன பிரயாணங்களில் கவனம் வேண்டும். சுக சவுகரிய வாழ்க்கை கடுமையான உழைப்பினால் மட்டுமே கிடைக்கும். பிணிகல் தரும் துன்பம் விலகும். நகைத் தொழிலாளர், சிற்பக் கலைஞர்கள் ஏற்றம் பெறுவர். வியர்கள் இவ்வாண்டு பரிசு பெறுவதற்கான  வாய்ப்புண்டு. எனவே உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கல்.

அரசியல்வாதிகளுக்கு,

அரசியல் பணிகள் தவிர மற்ற பிற விஷயங்களான உறவினர், நண்பர்கல் அல்லாத பிற நபர்களின் பிரச்சனைகளில் ஈடுபட்டாலும் உங்களை யாராலும் அசைக்க முடியாது. சொந்த வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நன்மை தரும். வர்த்தைகளில் கனிவும், பணிவும் வேண்டும். வீடு, மனை இவை வாங்குவதற்கு நல்ல நேரம். அரசியல் சார்ந்த நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

 

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், ஆலங்குடி, மதுரை, ராமேஸ்வரம்