தொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன?

பொருளாதாரம் வீழ்ச்சி, பலருக்கு வேலை தரும் வாகன உற்பத்தி தொழிற் சாலைகள் மூடல், பல லட்சம் பேர் வேலை இழப்பு .. பிறகு.. வழக்கம் போல் மோடி ஒழிக .. என்று பல செய்தித்தாள்களில் பல வித செய்திகள் .!

உண்மையாகவே தொழில்கள் முடங்கி உள்ளனவா மோடி ஆட்சியில் ???

மாட்டு வண்டிக்காரனும் மாடு, குதிரைக்கு காலில் லாடம் அடிப்பவருக்கும் வேலை போனதற்கு காரணம் அரசு இல்லை; மக்கள் மோட்டார் வாகனங்களை தேடி சென்றதால்தான்!

இந்தியாவில் இருக்கும் லேலேன்ட் மற்றும் டாடா கம்பனிகளும் மட்டுமே ஆட்டோ கம்பனிகள் அல்ல .. தங்களது ஐம்பது வருட ஆராய்ச்சியோ எந்த வித முநேற்றமோ இல்லாத வாகனத்தை தலையில் கட்டினாலும் வாங்க மக்கள் தயாரில்லை ..!

இதை நான் சொல்லவில்லை ராஜீவ் பஜாஜ் சொல்லுகிறார்!

“Before asking for fiscal help, Bajaj said industry needs to ask itself if it has done enough to become globally competitive. Talking to a business channel, he said some of Indian industry products are ‘mediocre'”

MG Hector என்கிற கார் , நானும் எனது நண்பரும் ஸ்ரீரங்கத்தில் ஒருவர் ஓட்டி வந்ததை அருகில் சென்று பார்த்தோம் .. விலை 20 லட்சம் .. ஒரு மொபைல் சிம் கார்ட் மூலமாக 24 மணி நேரமும் கம்பனியின் கம்ப்யூட்டர் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் தொழில் நுட்பம் .. வாய்ஸ் மூலமாக கதவு திறத்தல்.. லிஸ்ட் போட்டார் …பல விசயங்கள் புரியவில்லை ..அவ்வளவு நவீனம் …!

கம்பெனிக் காரனோ… மாசம் 3000 தான் தயார் பண்ண முடியும்! ஆனால் இப்போதே 50000 பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள்! இப்போது கார் முன் பதிவே வேண்டாம் என்று முன்பதிவை நிறுத்தி இருக்கிறார்கள் ..

பஜாஜ் இதை தொட்டுக் காட்டி இருக்கிறார்…

“we shouldn’t play with lives of employees by talking about job cut: Rajiv Bajaj”

இதில் மாபெரும் சதி இருக்கிறது .. தங்களது மடமைக்காக, தங்களது கம்பெனியில் இன்வெஸ்ட் செய்தவர்களை திசை திருப்ப .. பலரை வேலையை விட்டு விரட்டினால் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராடுவார்கள் என்கிற சூது தெரிகிறது ..

ஆனால்… நாடு சரியான பாதையில்தான் செல்கிறது ..!

– விஜயராகவன் கிருஷ்ணன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...