தேசத்தைக் காட்டிக் கொடுக்கிறதா என்டிடிவி.,யின் தடிமாடு?

அண்மைக்காலமாக சந்திரயான் 2 நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், ஊடகத்தின் போக்கை அது மறுபுறத்தில் காட்டிக் கொடுத்தது. ஊடகங்களில் பணி செய்யும் ஒரு சிலரின் சாயமும் வெளுத்தது.

ஐஎஸ்ஆர்ஓ தலைவர் எங்கே? விளக்கம் அளிக்க அவர வர வேண்டும் என்று கூவிய பல்லவ பாக்லா என்ற என்டிடிவி ரிப்போர்ட்டர் ஐஎஸ்ஆர்ஓ அலுவலகத்தில் பல்வேறு படங்களை எடுத்து அவற்றை ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு இணையத்தில் அந்நிய நாட்டு போட்டோ கம்பெனிகளுக்கு விற்ற விவரம் தெரியவந்துள்ளது.

இது தேசிய ரகசியங்கள் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம். இந்த ஆள் இப்படி விற்றதில் விஞ்ஞானிகள் படம் அலுவலக அமைப்பு உள்ளிட பல படங்கள் உள்ளன. இவை தேசப் பாதுகாப்பு மீறல். நம் நாட்டின் விஞ்ஞானிகள் பலர் ஏற்கனவே மர்மமான முறையில் இறந்து போன விவகாரங்களில் உண்மை அரசல் புரசலாக மட்டுமே வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அலுவலக அமைப்பு, கணினித்திரையின் க்ளோஸப், விஞ்ஞானிகளின் படங்கள் இவற்றை விலைக்கு விற்பது ஆபத்தானது. இப்படிப் படம் பிடிக்க அனுமதி பெறப்பட்டதா? ஆம் எனில் என்ன வகையாக அந்தபடங்களைப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டது? விற்பனை செய்ய அனுமதி உள்ளதா?

இந்தக் கேள்விகளுக்கு என்டிடிவி நிர்வாகமும் தடிமாடு பல்லவ பாக்லாவும் விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.

சந்திரயான் 2 தொடர்பு போன நிலையில் விவரம் சொல்ல வந்த விஞ்ஞானி ஒருவரிடம் “நீ சாதாரண வேலையாள். உன் சேர்மன் இங்கே வந்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூவினான் இந்த பல்லவ பாக்லா. இதற்கு எதிர்ப்பு வலுத்தவுடன் மன்னிப்பு என்ற வகையாக எதையோ பிதற்றி வைத்தான். ஆனால் ஒரு நாளும் இல்லாத திருநாளாக என்டிடிவி முதலாளி பிரணாய் ராய் இவனுக்கு வக்காலத்து வாங்கி “ஐஎஸ்ஆர்ஓ அமைப்புக்கு பல்லவ பாக்லா அளவுக்கு வேறாரும் செய்ததில்லை” என்றார்.

செய்தது என்னென்ன என்று விளக்கம் அளிக்க என்டிடிவி கடமைப்பட்டுள்ளது. ஆனால் கடமையை காற்றில் பறக்கவிட்டு காசுக்காக பாகிஸ்தானுக்கு வேலை செய்வது தேசத்துரோகிகளின் வாடிக்கை.

ஏறத்தாழ 3300 படங்களை ஒரு படம் 500$ வீதம் 16,50,000$க்கு விற்பனை நடந்துள்ளது என்று தோராயமாக கணக்குச் சொல்கிறார்கள் விவரம் தேடி அறிந்தவர்கள். சாதாரணர் படங்கள் இவ்வளவு விலை போகாது.

இன்றைய இந்திய பண மதிப்பில் ₹11,82,15,075/-. எதற்காக இவ்வளவு விலைக்கு இந்தப்படங்கள் விற்கப்பட்டன? யார் பின்னணி? நடப்பது என்ன?

விளக்கம் கேட்டு “விசாரித்து” உண்மைகளை வெளிக்கொண்டு வர அரசுக்கு உரிமை கொண்டுள்ளது. NIA-National Investigation Agency விசாரிப்பது சிறப்பு. மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.

  • சி.எச். அருண்பிரபு ஹரிஹரன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...