spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது!

மோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது!

- Advertisement -

இரு நாள் பயணமாக சென்னை வந்து, மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. தாம் தங்கியிருந்த விடுதி பகுதியில் கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்த போது, அங்கே சேர்ந்திருந்த குப்பைகளை அகற்றினார்.

கால்களில் செருப்பு அணியாமல் சென்ற மோடி, கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, பொது இடங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டார்.

இந்தச் செய்தி, வீடியோ பதிவாக சமூகத் தளங்களில் வெளியானது. பிரதமர் மோடியே தனது டிவிட்டர் பக்கத்திலும் அதனைப் பகிர்ந்திருந்தார். ஆனால், இந்த வீடியோவை, ரிவர்ஸில் ஓட விட்டு, மோடி குப்பையைப் போடுவது போன்ற காட்சிகளை கயவர்கள் சிலர் பகிர்ந்தனர்.

மேலும், இது விளம்பரத்துக்காக செய்த வேலை என்று குறிப்பிட்டு, ஒரு புகைப்படக் குழுவினர் குறித்த படங்களையும் வெட்டி ஒட்டி சமூகத் தளங்களில் பகிர்ந்தனர்.

பிரதமர் மோடியின் இந்தச் செயலை பலர் பாராட்டினர். சமூக அக்கறை உள்ளவர்கள் இதன் உள்ளர்த்தம் உணர்ந்து தங்களது ஆதரவையும் பாராட்டையும் பகிர்ந்து வந்தனர். ஆனால், கயவர்கள் சிலர் இந்தப் புகைப்படத்துடன், ஒரு புகைப்படக் குழுவே பின்னணியில் இருந்து விளம்பரத்துக்காக இதைச் செய்வதாக போலியான போட்டோஷாப் புகைப்படங்களை வெளியிட்டன.

அதுவும், வெளிநாட்டு புகைப்பட கலைஞர்கள் கடற்கரையில் புகைப்படம் எடுக்கும் புகைப்படத்துடன் இணைத்து இதனை வெளியிட்டனர். அதையும் நம்பிக் கொண்டு, மனம் மாசடைந்த பலர், மோடியின் புகைப்படங்களுக்கு பின்னே பெரிய குழுவே வேலை பார்த்தது என பலரும் பதிவிட்டனர். குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின் போது, செம்பருத்தி சீரியல் பார்க்கலாம் என்று பெண்களை மட்டம் தட்டிப் பேசிய சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், அதே புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

ஆனால் வெளிநாட்டு குழுவினர் இருப்பது போன்ற புகைப்படம் 2005ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என பலரும் ஆதாரபூர்வமாக பகிர்ந்தனர். அந்த புகைப்படத்துக்கு பின்னால் இருக்கும் கட்டிடங்கள் ஸ்காட்லாந்தில் உள்ளவை என்றும், இது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தகவல்களை வெளியிட்டனர். ஆனாலும், இதனை உணர்ந்து கார்த்தி சிதம்பரம் அந்தப் படத்தை நீக்கவில்லை.

இதற்கு சமூகத் தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

கார்த்திசிதம்பரத்தின்வெட்கம்கெட்டவிளக்கம்:
ஸ்காட்லாந்து கடற்கரையில் நடந்த பழைய படப்பிடிப்பு ஒன்றின் படத்தை வெளியிட்டு மகாபலிபுரத்தில் மோடி குப்பை அள்ளுவதை அவர்கள் படம் பிடிப்பதாக சித்தரித்து டிவிட் வெளியிட்டார் கார்த்தி சிதம்பரம். அதிவிரைவில் கூட்டு வெளிபட்டது.
தனது பொய் தகவலுக்கு மன்னிப்புக்.கேட்காத கார்த்தி சிதம்பரம் “நான் வெளியிடப்பட்டது பொய்யான படம் தான். ஆனால் , மோடி குப்பை அள்ளும்
சம்பவத்துடன் தொடர்புடையது என நான் சொல்லவில்லையே” என்று கூறியிருக்கிறார்.
வெட்கங்கெட்ட_ஜன்மங்கள்
இவர் மட்டுமல்ல, தெரிந்தே இந்தப் படத்தை வெளியிட்டு தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொண்ட காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் வெட்கம் கெட்ட ஜன்மங்களே..
– நம்பி நாராயணன்

செட்டி நாட்டின் பெருமை சிறைச்சாலை வரை மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களிலும் மிளிர்கிறது.. #FakeEditing #karthickChidambaram

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1183410286075629568

அட ஒரு குப்பையே குப்பையைப் பத்தி பேசுதே..!
பிரதமர் நடக்கும் பாதையில் மட்டும் எப்படி குப்பை இருக்கும்? – குஷ்பூ கேள்வி!
அட ஒரு குப்பையே குப்பைபத்தி கேள்வி கேக்குது!
rajasekar @vritikutty @RkbSujatha

தமிழகத்தில் இதுபோன்ற குப்பைகள் அதிகம் அதுவும் இம்ரான்கான் good books லிஸ்டில் இருக்கும் முதல் குப்பை. @bharativamsi

ஒரு நாள் அதிகாலையில் கடற்கரை ஓரம் நடந்து பார்க்கச் சொல்லுங்கள், கடல் எதை எல்லாம் கரை ஒதுக்குகிறது என்று. அன்றாடம் இதைப் பொறுக்கி எடுத்து சுத்தம் செய்யும் ஊழியர்கள் பணிக்கு வரும் முன் பிரதமர் சென்றார்,அவரே சுத்தம் செய்தார். நாடகம் என்றால் அந்த பையை முதலிலேயே கொண்டு சென்றிப்பாறே? @VSampathkumar14

@bavanan1951 கேள்வி கேக்குறது குப்பை இல்ல, குப்பை மேடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe