உரத்த சிந்தனை சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

-

- Advertisment -

சினிமா:

அப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி!

ஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.

மகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை ஜெயஸ்ரீ!

சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.

தவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா!

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.ஜே.சூர்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கு முற்று புள்ளி வைத்து இருக்கிறார் .

கோடீஸ்வரியில் குடும்பத்தோடு குதுகலம்! சரத்குமார், ராதிகா, வரு!

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ராதிகாவின் கணவர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார்
-Advertisement-

வெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்!

திருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை

இதுதான் இந்தோனேஷியா! பாடம் படிக்குமா இந்தியா!?

இதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.!

து(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்!

துக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.

தொழுகையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து?

தினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.

2வது ஒருநாள் போட்டி: 36 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி!

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா, 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஆட்டக்காரர் கே .எல் . ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி!

இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆளுநர் தமிழிசை ப்ரஜா தர்பார் நடத்தி வருகிறார். மக்கள் மனதில் இடம் பிடித்தும் வருகிறார்.

அப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி!

ஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.34, ஆகவும், டீசல் விலை...

திருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்!

இந்த மாத கடைசியில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப் போவதாக டிடிடி கூறியுள்ளது.

தெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்!

ஒலிம்பிக்கில் பாதபூஜை போட்டி நடத்தினால் இவர்கள் இருவருக்கும் முதல் பரிசு கிடைக்கும் என்று ஏளனம் செய்தார்.

வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி!

இன்று திருவாய்மொழித் திருநாளின் பத்தாம் நாளை முன்னிட்டு, நம்பெருமாள் திருவடிதொழல் நிகழ்ச்சிநடைபெற்றது.

எஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பாளை., சிறையில் அடைப்பு!

வில்ஸன் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில், கைதான பயங்கரவாதிகள் இருவரும் பாளை., சிறையில் அடைக்கப் பட்டனர்.

ஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்!

வரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
- Advertisement -
- Advertisement -

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

நம்முடைய கோவில் சிற்பங்களையும் தெய்வ ரூபங்களையும் திருடி செல்வதை பற்றீ படித்திருப்போம். அதிலே பல விஷயங்கள் நடந்தது பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். அதை சர்வதேச கடத்தல் கும்பல்கள் செய்கின்றன என்பதை பற்றியும் சிலர் அறிந்திருக்கலாம்.

அதை தெரிந்து கொள்ள சிலைத்திருடன் என ஒரு புத்தகமாகவே விஜயகுமார் எழுதியதை தமிழிலே பி ஆர் மகாதேவன் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஹரன் பிரசன்னா எழுதிய சிறு அறிமுகம் படிக்க http://www.haranprasanna.in/2019/01/20/idol-thief-in-tamil-by-s-vijay-kumar/

எஸ். விஜய் குமாரின்
சிலைத் திருடன்

சிலைத் திருடன் – எஸ். விஜய் குமார் – கிழக்கு பதிப்பகம், விலை ரூ 250

தி ஐடல் தீஃப் என்று ஆங்கிலத்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம், பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. நான் வாசித்த புத்தகங்களில் எப்போதும் எனக்குப் பிடித்த ஒன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கு. காரணம், அதன் பரபரப்பு, அதே சமயம் சற்றும் குறையாத தரம் மற்றும் அதிலிருக்கும் நம்மை உறைய வைக்கும் உண்மை. அதற்கு இணையான புத்தகம் சிலைத் திருடன்.

நம் நாட்டில் நிகழும் பெரும்பாலான, அதிகாரிகள் மட்டத்திலான ஊழல்களுக்குப் பெரிய காரணம், லஞ்சமும் அலட்சியமும். ஒரு பெரிய அரசியல்வாதியின் படுகொலை முதல் சிலைத் திருட்டு வரை, அது நடந்து முடிந்தபின்பு நமக்குத் தோன்றுவது, இதை எளிதாகத் தவிர்த்திருக்கலாமோ என்பதுதான். சிலைத் திருட்டிலும் அப்படியே. இதைக்கூடவா பார்த்திருக்கமாட்டார்கள், இதைக்கூடவா யோசித்திருக்க மாட்டார்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் பார்த்துப் பதறிப் போகிறோம்.

நமது பிரச்சினை, எதைப் பற்றியும் நம்மிடம் ஒரு தகவல் திரட்டு இல்லாதது. நம் பாரம்பரியத்தைக் காப்பதிலிருந்து நம்மை நாமே தெரிந்துகொள்ள இதுபோன்ற தகவல் களஞ்சியம் அவசியம். ஆனால் இது குறித்த அக்கறை மக்களுக்கும் இல்லை, அரசுக்கும் இல்லை. மெல்ல மெல்ல இப்போதுதான் இது குறித்து யோசிக்கிறோம், செயல்படுகிறோம், முக்கியமாக இணையக் காலத்துக்குப் பிறகு.

எவ்விதத் தகவல்களையும் நாம் சேமிக்காதது சிலைத் திருட்டை மிக எளிதாக்கி இருக்கிறது. சோழர் காலச் சிலைகளை விதவிதமாகக் கடத்தி இருக்கிறார்கள். மூலச் சிலைக்குப் பதிலாக அதே போன்ற போலிச் சிலையைச் செய்து வைப்பது, போலிச் சிலை இல்லாமலேயே மூலச் சிலையைக் கடத்திவிடுவது, பல சாதா சிலைகளைச் செய்து அவற்றோடு பழங்காலச் சிலைகளைச் சேர்த்துக் கடத்துவது, சிலைகள் மட்டுமில்லாமல் பழங்கால புராதன சின்னங்கள் எதுவானாலும் கடத்துவது, நேரடியாக தனக்குத் தேவையான ஊருக்குக் கடத்தாமல் பல நாடுகளுக்குச் சுற்றி எடுத்துச் சென்று கடத்துவது… இப்படிப் பல வகைகளில் கடத்துகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், எந்தச் சிலைகள் கடத்தப்பட்டன என்று நமக்குத் தெரியவே சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகின்றன. சிலை கடத்தப்பட்ட விவரமே தெரியாமல் அக்கோவிலுக்கு பாதுகாப்புக் கதவு செய்து பூட்டுகிறார்கள் அதிகாரிகள். களவு போன சிலையை மீட்டெடுக்க அச்சிலை குறித்த தகவல்களும் ஆவணங்களும் நம்மிடம் இல்லை. பின் எப்படி சிலைத் திருட்டைத் தடுப்பது, சிலைகளை மீட்பது?

1972க்கு முன்னர் இச்சிலைகள் விற்கப்பட்டது போன்ற போலி ஆவணங்களை உருவாக்கிக் கடத்துகிறார்கள். காரணம் 1972ல் உருவாக்கப்படும் பன்னாட்டுச் சட்டம் சிலைகள் உள்ளிட்ட பாரம்பரியப் பொருட்களின் விற்பனையில் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறது. சுபாஷ் கபூர் மிக புத்திசாலித்தனமாகத் தனது எல்லாத் திறமைகளையும் இறக்கி சிலைகளைக் கடத்திக்கொண்டே இருக்கிறார். சலிப்பதே இல்லை. ஏனென்றால், இங்கே அவருக்கு உதவும் சிறு திருடர்களுக்கு சில லட்சங்களில் பணம் தந்துவிட்டு, பன்னாட்டு அரங்கில் பல கோடிகளில் பணம் பெறுகிறார்.

உண்மையில் இச்சிலைகளுக்கு இத்தனை கோடியெல்லாம் தருவார்களா என்றெல்லாம் முன்பு யோசித்திருக்கிறேன். இப்புத்தகத்தைப் படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. கோடிகளில் புரள்கிறது பணம். விஜய் மல்லையா போன்றவர்களை இச்சமூகம் கண்டுகொள்கிறது, ஆனால் அதற்கு இணையான இது போன்ற சிலைத் திருடர்களை நமக்குத் தெரிவதில்லை என்பதோடு அவர்களுக்கு மிகப் பெரிய கௌரவத்தையும் மரியாதையையும் தருகிறோம் என்னும் விஜய் குமாரின் ஆதங்கம் நியாயமானது.

சில கொடுமைகளில் அதீத கொடுமைகளையும் இப்புத்தகத்தில் படிக்கலாம். தன் மகளின் நினைவாகச் சுடுமண் சிற்பத்தை ஒரு அருங்காட்சியகத்துக்குத் தானமாகத் தருகிறார் சுபாஷ் கபூர்! இன்னொரு கொடுமை, சுபாஷ் கபூரும் அவரது தோழியும் பிரிந்த பின்பு, சிலைகள் யாருக்குச் சொந்தம் என்று நீதிமன்றத்தில் மோதிக்கொள்வது. இருவருக்குமே சிலைகள் சொந்தமல்ல, இந்தியாவுக்குச் சொந்தம்! கைது செய்யப்பட்ட பின்பும் சிலைகளை எப்படி எங்கே விற்கவேண்டும், மாற்றவேண்டும் என்ற குறிப்புகளை எல்லாம் சிறைக்குள் இருந்தே அனுப்புகிறார் சுபாஷ் கபூர்! நம் சட்டத்தின் கடுமையும் அதிகாரிகளின் புத்திசாலித்தனமும் இப்படி இருக்குமானால் நாம் என்றைக்கும் எதையும் தடுத்துவிடமுடியாது.

இண்டி என்று பெயர் சூட்டப்படும் அந்த அதிகாரி இந்தியர்களால் வணங்கத்தக்கவர். அத்தனை அருங்காட்சியகத்துடனும் இண்டியும், நம் விஜய்குமாரும் அவரது குழுவும் போராடும் அத்தியாயங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்கவை. அதேபோல் நம் ஊர் காவல்துறை அதிகாரி செல்வராஜும் போற்றத் தக்கவர். சவுக்கு சங்கரின் ‘ஊழல் உளவு அரசியல்’ புத்தகத்தைப் படித்தபோது திலகவதி ஐபிஎஸ் குறித்து ஏற்பட்ட ஏமாற்றம், இப்புத்தகத்தின் மூலம் கொஞ்சம் விலகியது என்றே சொல்லவேண்டும்.

சிலைத் திருட்டு வகையில் இது முதல் புத்தகம் என்ற வகையில் இப்புத்தகம் பல இருட்டு இடங்களில் வெளிச்சம் பாய்ச்சுகிறது. தன் வாழ்வையே அர்பணித்தால்தான் இப்படி ஒரு புத்தகம் சாத்தியம். அதுவும் இந்தியா போன்ற தனி மனித உயிருக்கு எவ்வித மரியாதையும் அற்ற ஒரு நாட்டில் இது போன்ற ‘உலகளாவிய’ விஷயத்தை எதிர்ப்பது பெரிய சவால். அதை எதிர்கொண்டு மிகத் தெளிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார் விஜய் குமார். அதைவிட முக்கியம் இவரது முயற்சியில் நம் தெய்வங்கள் தனக்கான இடங்களில் மீண்டும் ஆராதனை பெறத் துவங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குச் செய்யப்படும் பூஜையின் புண்ணியம் என்றைக்கும் விஜய் குமாரின் சந்ததிக்கும் கிடைக்கு என்பதில் ஐயமில்லை.

அரசியல்வாதிகளின் ஊழல்களைவிட அஞ்சத்தக்கது அதிகாரிகளின் ஊழல் என்பது என் பொதுவான எண்ணம். அவர்களது அலட்சியப் போக்கே நம்மை மிக நேரடியாக உடனே தாக்கும் வல்லமை கொண்டது. இப்புத்தகத்தில் ஒரு வரி வருகிறது. ஒரு அதிகாரி மூன்று முறை தன் அறையைவிட்டு வெளியே வருகிறார். ஒரு தடவை டீ குடிக்க, இரண்டு தடவை தம் அடிக்க. அவர் அறைக்குள் இருக்கும்போது அவரைச் சுற்றித்தான் சிலைகள் கடத்தப்படுகின்றன. அவரே மௌன சாட்சி மற்றும் உதவியாளர்!

தமிழ் மொழிபெயர்ப்பை மிகக் குறுகிய காலத்தில் அட்டகாசமாகச் செய்திருக்கிறார் பி.ஆர். மகாதேவன். எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர்களில் இவரும் ஒருவர். (இன்னொரு முக்கியமானவர் கிருஷ்ணன் சுப்பிரமணியன்.) மிகக் கடினமான நூல்களைக்கூட அழகாக மொழிபெயர்ப்பவர் பி.ஆர். மகாதேவன். இந்நூல் ஆங்கிலத்திலேயே மிக சரளமான நடையில் எழுதப்பட்ட ஒன்று. கூடுதலாக, விஷயத்தைப் பொருத்தவரையில் தமிழின் மண்வாசனை இயல்பாகவே இருந்தது. இதனால் அதகளம் செய்துவிட்டார் மகாதேவன். மகாதேவனின் மொழிபெயர்ப்பில் ‘அழகிய மரம்’ அவரது வாழ்நாள் சாதனையாக மதிப்பிடப்படும் என்று ஏற்கெனவே நான் எழுதி இருக்கிறேன். ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் பி.ஆர். மகாதேவன் நிச்சயம் நினைவுகூரப்படுவார். இந்த நூலில் மிகச் சில திருத்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அடுத்த பதிப்பில் அவர் சரி செய்வார் என்று நம்புகிறேன்.

எஸ். விஜய் குமாருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பி.ஆர். மகாதேவனுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டியிருக்கிறது. நன்றியும் வாழ்த்தும்.

பின்குறிப்பு: நாத்திகம் வேறு, பாரம்பரியக் கலைச் சின்னங்கள் வேறு. இச்சிலைகள் என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டபோது அதன் பின்னே இருந்தது பக்தியும் கலையும்தான். இன்று பக்தியைக் கைவிட்டிருப்பதுதான் நாம் நம் கலையையும் மறப்பதற்கான வழி என்றாகிவிட்டது என்றே கருதுகிறேன். இத்தனை பல்லாயிரம் ஆண்டுகளாக இச்சிலைகள் காப்பாற்றப்பட்டது பக்தியை முன்னிட்டே ஒழிய கலையைப் பாதுகாக்க வேண்டிய உந்துதலில் அல்ல. பக்தி அழிக்கப்படும்போது இந்த உந்துதல் நிச்சயம் குறையும். பக்தியையும் கலையையும் பிரிப்பதுகூட நமக்கு என்றைக்குமே பிரச்சினைதான். சிலர் இதை வேண்டுமென்றே செய்கிறார்கள். சிலர் நிஜமாகவே கலையை ஆராதிப்பதற்காகச் செய்கிறார்கள். ஆனால் இப்போக்கு நமக்கு ஆபத்தானதுதான்.

– ஹரன் பிரசன்னா

இந்த பதிவு அதைப்பற்றியது அல்ல. சிலைத்திருட்டை சுற்றிய அரசியல் பற்றியதும் அல்ல.

ஏன் வெளிநாட்டினருக்கு நம்முடைய சிற்பங்கள் மீதான மோகம் என்பதை பற்றியது. அவர்களுக்கு அதிலே என்ன கிடைக்கிறது? யார் என்ன பலன் அடைகிறார்கள் என்பதை கலாச்சார சமூகவியல் பார்வையாக பார்ப்பது.

நம்முடைய சிற்பங்களை கடத்திக்கொண்டு போய் திருடிக்கொண்டு போய் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் மற்றைய மேற்கத்திய நாடுகளின் மீயூசியங்களிலும் கண்காட்சிக்கும் வைத்து என்ன பார்க்கிறார்கள் என்பது நமக்கு புரிய வேண்டும் அப்போது தான் இந்த திருட்டை அடிப்படையிலே கிள்ளி எறிய முடியும்.

இது பல வகையிலே வேலை செய்கிறது. நம்முடைய பழமையை அழிப்பதிலே இருந்து நம்முடைய நவீனத்தை அவர்கள் சொந்தம் கொண்டாடுவது வரை இது வேலை செய்கிறது.

நம்முடைய பழமையை அழிப்பது அப்படீன்னா எதுக்கு அழிக்கனும் அதிலே அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்றால் அந்த காரணம் மிக எளிது.

இந்த இந்துக்களுக்கு இரண்டாயிர வருட மூன்றாயிர வருட கோவில் இருப்பதால் தானே மதம் மாற மாட்டேன் என்று சொல்வதோடு மட்டுமல்லாது மேற்கத்திய நாடுகளிலும் போய் மதம் மாற சொல்கிறார்கள்?

அந்த கோவில் சிற்பங்களை திருவுருவங்களை எடுத்துகொண்டு வந்துவிட்டால் அவர்களுக்கு வரலாறு ஏது? அதோடு அந்த கோவில்கள் எல்லாம் கல்லும் மண்ணும் என்றாகிவிடும் அதான் உள்ளே தெய்வத்திருவுருக்களே இல்லையே? கோவில்களை இடிப்பது எளிதே?

அப்போ அங்கே எல்லாம் இப்படி இரண்டாயிர வருட பழமையான கட்டுமானங்கள் இல்லையா என்றால் இல்லவே இல்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையே விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளுக்குமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை என்பவற்றை நூற்றுக்குள்ளே அடக்கிவிடலாம்.

நமக்கோ மாவட்டத்துக்கு நூறு இருநூறு கோவில்கள் குகைகள் கட்டுமானங்கள் இருக்கிறது. எனவே அதை சும்மா விடலாமா?

தோற்றுப்போன அடிமை இந்துக்களுக்கு இதெல்லாம் சொந்தமாக இருக்கவிடலாமா? இது தான் முதல் அழிப்பு.

அடுத்தது கலைநயத்தை திருடுவது.

ஐரோப்பிய கலைநயம் என்பது பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் கிடையாது. சிற்பங்கள் ஓவியங்கள் என்பதே வெறுமனே சிலை வடிப்பாக இருந்து வந்தது.

கல்லிலே கலைநயம் படைத்தல் என்றால் அது இங்கே நம்முடைய புண்ணிய பூமியிலே மட்டும் தான். அப்படியானால் அதை எப்படி விட்டுவைப்பது? திருடிக்கொண்டு போய் அவர்களின் மியூசியத்திலே வைத்து பார்த்து ரசித்தால் தானே சரியாக இருக்கும்? அப்போ தானே அதை பற்றி கைபோன போக்கிலே கண்டதையும் எழுதி வைக்கலாம்.

இதை எடுத்துக்கொண்டு போய் எப்படி அவர்கள் முன்பு வென்ற இடங்களிலே இருந்து எடுத்து சென்றதை வைத்திருக்கிறார்களோ அதே போல நம்முடைய தெய்வத்திருவுருக்களை வைத்து அதற்கு கீழே

இது எட்டுக்கால் பூச்சியை பார்த்து வடிவமைத்தது அது பத்துக்கால் பூரானை பார்த்து செய்தது என எழுதி வைத்து ஒவ்வொரு கணமும் இழிவுபடுத்திக்கொண்டே இருக்கமுடியும்.

நிஜமாகவே இவர்கள் அப்படித்தான் எழுதி வைக்கிறார்கள். முடிந்தால் அந்த மியூசிய வர்ணிப்புகளை படித்து பாருங்கள்.

இதற்குமேலான ஒன்று தான் நம்முடைய வரலாற்றுக்கு அவர்கள் உரிமை கொண்டாடுவது. எப்படி இப்போது யோக ஆசனங்கள் எல்லாம் ஐரோப்பாவை பார்த்து காப்பியடிக்கப்பட்டவை என “ஆய்”ராச்சி கட்டுரைகள் எழுதிகொண்டுஇருக்கிறார்களோ அது போல

நம்முடைய கோவில்களே அங்கிருந்து தான் வந்தவை என நாளைக்கு வர்லார் எழுதி வைக்கலாம்.

நம்முடைய கோவில் சிற்பங்களை எடுத்துக்கொண்டு போய் அவர்களின் படுக்கையறையிலே வைத்து ஆகா பார்த்தாயா இந்த இந்துக்களின் தெய்வத்தை தினமும் இழிவு படுத்துகிறோம் அவர்களை வென்று விட்டோம் என பரப்புரை செய்ய முடியும்.

இந்த அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும்.

வரலாறு இல்லாத மேற்கத்திய நாடுகள் தனக்கு இல்லாத வரலாறு அடுத்தவனுக்கு எப்படி இருக்கலாம் எனவும் மற்றவர்களின் வழிபாட்டு இடங்கள் எப்படி அழகாகவும் அதிநவீன் சிற்பங்களோடும் இருக்கலாம் எனவும் செய்யும் வேலையே இது.

அப்படியானால் இதை ஒரு பெரிய சதித்திட்டம் பலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என சொல்லுகிறேனா என கேட்டால் பொதுப்புத்தியிலே ஆழப்பதிந்திருக்கும் விஷயத்திற்கு பெரிய திட்டமிடல் எல்லாம் தேவையில்லை.

எப்படி என விளக்குகிறேன்.

இங்கே இருக்கும் சிலரோ பலரோ அமெரிக்காவிலே ஐரோப்பாவிலோ இருக்கும் மற்ற மத வழிபாட்டு இடங்களிலே இருக்கும் கண்ணாடிகள் ஓவியங்கள் சிலைகளை திருடிக்கொண்டு வந்து நம்நாட்டிலே இருக்கும் மியூசியங்களுக்கு விற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என யோசித்து பாருங்கள்.

உலகெங்கும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்திருக்கும்.
நம் நாடும் இந்துக்களும் மிகவும் மோசமான தீவிரவாதிகள் என சித்தரிக்ப்பட்டிருப்போம்.
அந்த கடத்தல் பொருட்களை வாங்கிய மீயூசிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்படிருப்பார்கள்.
இந்துக்கள் எப்படி மோசமானவர்கள் அதனால் தான் இந்த திருட்டுக்களை செய்தார்கள் கட்டுரைகளை எழுதி குவித்திருப்பார்கள்

ஆனால் இதெல்லாம் இப்போது நடந்ததா?

கிடையாது. ஏன்னா அவர்களின் பொதுப்புத்தியிலே இந்துக்கள் எப்படி மதம் மாற்றப்படவேண்டியவர்கள் தானே அவர்களின் வழிபாட்டு இடங்களை என்ன செய்தால் என்ன என்பது ஊறிப்போய் கிடக்கிறது.

அதனால் தான் நம்முடைய கோவில் திருவுருக்களை கடத்தல் முறையிலே வாங்கிய எந்த ஒரு மீயூசிய அதிகாரியும் இதுவரை தண்டிக்கபடவில்லை.

இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாதவரை நம்மால் ஏன் இப்படி நம்முடைய கோவில்களை குறிவைக்கிறார்கள் என புரிந்து கொள்ளமுடியாது.

இதை போல கோவில்களிலே தொண்டு புரிபவர்களை குறிவைத்து மதம் மாற்றும் வேலையும் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது பற்றி தனியே எழுதுகிறேன்.

  • ராஜா சங்கர் (Raja Sankar)
- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,913FansLike
194FollowersFollow
743FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

விரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்!

காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா!

காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும். 

அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! அவல் போண்டா!

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |