உரத்த சிந்தனை இவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்... சென்னை மாநகர் நிலத்தடி...

இவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்!

கீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.!

-

- Advertisment -

சினிமா:

நஸ்ரியா போல் நல்ல நடிகையாக வேண்டும்: கன்னிமாடம் சாயா தேவி!

தானும் அது போல நல்ல நடிகையாக உருவாக வேண்டும் என்றும் சாயா தேவி தெரிவித்துள்ளார்.

ஓட்டல் அறையில் தங்கி விட்டு எஸ்கேப் ஆன நடிகை! வாடகை தர மறுத்த தயாரிப்பாளர்!

நடிகை மெஹ்ரின் இந்தப் படத்துக்காக, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார்.
-Advertisement-

மதுரை – கோவிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம் கட்டி வசூல்! பாஜக., திமுக., பிரமுகர்களின் மோதல்!

மதுரையில் கோயில் இடத்தில் கழிப்பறை கட்டி, வாடகைக்கு விட்ட நபர் குறித்த விவகாரத்தில், பாஜக., ஐடி பிரிவினருக்கும் திமுக.வின் பிடி ராஜனுக்கும் டிவிட்டர் போர் மூண்டிருக்கிறது.

என்ன..?! 2000 ரூவா நோட்ட செல்லாம ஆக்கப் போறாரா மோடி..?! ஏகத்துக்கும் வெச்சிருக்கமே.. என்ன செய்ய?

2000₹ நோட்ட செல்லாம ஆக்கப்போறாரு மோடின்னு கெளம்பிராதீங்கடா போராளி பாய்ஸ்!

தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா? இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…?!

இவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்!விளைவுகள்… உண்மைகள்! (பாகம்-7)

பிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.

விபத்து மயிரிழையில் : கேரள காவல்துறை வெளியிட்ட பகீர் வீடியோ!

கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் பகீர் என நெஞ்சு உறையச் செய்துள்ளது.

ராமராஜ்ய மகிமை: உ.பி.,யில் மிகப் பெரும் தங்கச் சுரங்கங்கள்!

உத்தரப்பிரதேசத்தில்மிகப்பெரும் அளவில் தங்கச் சுரங்கங்கள் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றை வெளியில் தோண்டி எடுத்தால் உலகிலேயே தங்கச் சேமிப்பில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா வரும் என்று கூறப் படுகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்: ரஜினி சொன்னதன் ஆதாரம்!

சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஊடுருவி கலவரத்தை உருவாக்கினர் என ரஜினி சொன்னது சரியாயிடுச்சு!! பைக் திருடுறவனுக்கு ஸ்டெர்லைட் போராட்டத்தில் என்ன வேலை

ஆசிரியை மீது காதல்! மறுத்ததால் கொலை செய்த மாணவன்!

பள்ளியில் யாரும் இல்லை. அதன் பிறகு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். அப்போது ரம்யா பள்ளி வகுப்பறையில் சடலமாக கிடந்துள்ளார்.

என் பையன ‘விஜய்’னு கூப்புட வேணாம்… ஜோசப்னே கூப்பிடுங்க!

இரு தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தான் கிறிஸ்துவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதாகக் கூறுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்! இது தற்போது டிவிட்டர் பதிவுகளில் அதிகம் எதிரொலிக்கிறது.

அன்று ரஜினியை கிண்டல் செய்தான்! இன்று திருட்டு வழக்கில் கைது!

ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், 'நீங்கள் யார்' என கிண்டலாகக் கேட்டு, ஊடகங்களின் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல்...

மகா சிவராத்திரி: கோதாவரி தீரத்தில் குவிந்த பக்தர்கள்!

உமா கோடிலிங்கேஸ்வர ஸ்வாமி, உமா மார்கண்டேய சுவாமி, விஸ்வேஸ்வர சுவாமி, பலிமல உமா கொப்பேஸ்வர சுவாமி, ஏலேஸ்வரம், தர்மவரம், காகிநாடா, தூரங்கி, கணபூரு… கோவில்களில் தரிசனம் செய்து கொள்வதற்காக பக்தர்கள் பெருமளவில் வந்து சேர்ந்தனர்.

தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா? இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…?!

இவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.
- Advertisement -
- Advertisement -

இவ்வளவு மழை கொட்டியும் அபாய கட்டத்தில் உள்ள சென்னை மாநகரின் நிலத்தடி நீர்.! வரண்டு கிடக்கும் மயிலாப்பூர் கோயில் குளங்கள்!

சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சராசரியை விட இந்த ஆண்டு (2019)மழைப் பொழிவு அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய நான்கிலும் ஏறத்தாழ பாதி அளவு நீர் நிரம்பி இருக்கின்றன.( இந்த நான்கு ஏரிகளிலும் சேர்த்து, மொத்த கொள் அளவு 11TMC. தற்போது உள்ள நீரின் அளவு 6 TMC).

சென்னை மாநகருக்கு ஒரு மாதத்திற்கு சுமார் ஒரு டிஎம்சி தண்ணீர் தேவை. இந்த ஏரிகள் நான்கும் முழுமையாக நிரம்பினால் தான் அடுத்த பருவ மழை வரும் வரை சமாளிக்க முடியும்.

இந்த நான்கு ஏரிகள் தவிர வீராணம் நிரம்பியிருக்கும் போது அங்கிருந்து குழாய் மூலம் வரும் ஓரளவு நீரும், கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் நீரும் , கிருஷ்ணா கால்வாயில் இருந்து வரும் தண்ணீரும் சென்னை மக்களின் தாகத்தை ஓரளவு தீர்த்துக் கொண்டிருக்கின்றன.

பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக வளர்ச்சிக்காக சென்னையைத் தேர்வு செய்தபோது இங்கு சில ஆயிரம் மக்களே பரவலாக வசித்துக் கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வளம் இங்கு அபரிமிதமாக இருந்தது. சுற்று வட்டாரத்தில் இருந்த ஏராளமான நீர்நிலைகள், அவற்றிலிருந்து வெளியேறிய தெள்ளிய நன்னீரை அடையாறும் கூவமும்
சுமந்து கொண்டிருந்தன.

இந்த இரண்டு ஆறுகளிலும் ஆங்கிலேயர்கள் நினைத்த போதெல்லாம் குளித்து மகிழ்ந்தனர். சென்னையை அவர்கள் தேர்வு செய்ததற்கு இங்கிருந்த நீர்வளமும் முக்கியக் காரணம்.

சில ஆயிரங்கள் ஆக இருந்த மக்கள் தொகை சில லட்சம் ஆனபோதும் சென்னை மாநகரம் போதுமான நீராதாரம் கொண்ட செழிப்பான பகுதியாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது மக்கள் தொகை ஒரு கோடியை கடந்து விட்டது. 2013ம் ஆண்டில் மக்கள் தொகை 73 லட்சம். கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 27 லட்சம் அதிகரித்துள்ளது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருமழையும் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை பொய்த்துப் போதுமான புவியியல் அமைப்பைக் கொண்ட சென்னை மாநகரைச் சுற்றிலும் இருந்த நீர் நிலைகள் பல காணாமல் போய்விட்டன. பெய்யும் சராசரி மழையளவிலும் மாற்றம் இல்லை. ஆனால் மக்கள் தொகை சில ஆயிரத்திலிருந்து 100 லட்சத்தை கடந்துவிட்டது. இதுதான் மையப் பிரச்சினை.

இந்தப் புரிதலுடன் சென்னை மாநகரைக் காப்பாற்ற ஆட்சியாளர்கள் செயல்பட்டிருக்க வேண்டும். சென்னை மாநகருக்குள் மக்கள் குவிவதை தடுத்து, நீராதாரங்கள் உள்ள புதிய துணை நகரங்களை சென்னையை சுற்றி உருவாக்கி யிருக்க வேண்டும். கூடுதலாக நீரை சேமிக்கும் வகையில் புதிய ஏரிகளை உருவாக்கியிருக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வாய் கண்டிகை பெரிய ஏரியையும் அருகிலுள்ள கண்ணன் கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்து சென்னை மாநகர் குடிநீர் தேவைக்கு கூடுதலாக ஒரு ஏரியை உருவாக்கும் திட்டத்தை 2013ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அது பயன்பாட்டுக்கு வந்தால் ஒன்றரை டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆண்டுகள் ஆறு கடந்தும் அந்த திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இந்த சூழ்நிலையில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத வகையில், சென்னை மாநகரின் நிலத்தடி நீர் கடந்த ஆண்டு ‘கிடுகிடு’வென கீழே இறங்கியது. 100 அடிக்கு கீழே குழாய் இறக்கியதும் பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காத நிலைமை இருந்தது.

சில தினங்களாக பருவ மழை கொட்டி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் சென்னை மாநகரின் நிலத்தடி நீர் மட்டம் திருப்திகரமான நிலையை எட்டவில்லை.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளத்தைக் கொண்டு சென்னை மாநகரில் உள்ள கோயில் குளங்களை யாவது நிறைத்திருக்கலாம்.

சென்னை மாநகரின் நிலத்தடி நீர் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு மயிலாப்பூரில் உள்ள கோயில் குளங்கள் ஒரு சிறந்த சான்று. இங்கு உள்ள கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் மட்டும் 2 அடி தண்ணீர் உள்ளது.

மயிலாப்பூர் நிலத்தடிக்கு வளம் சேர்க்கும் மற்ற மூன்று குளங்களான சித்திரைக் குளம், மாதவப்பெருமாள் கோயில் குளம், விருபாக்சீஸ்வரர் கோவில் குளம் ஆகியவை வறண்டு கிடக்கின்றன. தரையிலிருந்து இக்கோவில் குளங்களின் தரைப்பகுதி சுமார் 50 அடி ஆழமாகும்.மழைக்காலத்தில் சாலைகளில் பெருக்கெடுத்து வீணாகும் தண்ணீரைக் கொண்டு இக்குளங்களை நிரப்பும் முயற்சியில் சட்ட மன்ற உறுப்பினர் ஆர். நடராஜ் ஈடுபட்டார். அவருக்கு அதிகாரிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்கள் என்று தெரியவில்லை.

பருவமழை பெய்து கொண்டிருக்கும் இப்பவே இந்த நிலை என்றால், அடுத்த பருவமழை வரை நிலத்தடி நீரின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சொல்லத்தேவை இல்லை…

… கீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.!

  • ம. வி. ராஜதுரை
- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,976FansLike
214FollowersFollow
769FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்: வெஜ் மொள பூஷியம்!

மிளகு, சீரகத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வேக வைத்த காயுடன்

பலாப்பழ அப்பளம்:

கலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.

பலாக்கொட்டை கத்திரி கூட்டு!

டு இறக்கி வைக்கவும். கடாயில் தேங்காய் எண் ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |