தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்!

தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லித்தான் நடக்கவேண்டும் - ஸ்டாலின்

0
396

தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லித்தான் நடக்கவேண்டும் – ஸ்டாலின்

சரி செய்துவிடுவோம். கூடவே,

தமிழக மசூதிகளில் ஐந்து நேரத் தொழுகை அழைப்பு தமிழில் சொல்லப்படவேண்டும்.

தமிழகப் பாதிரியார்கள் தமிழ் உடையான வேட்டி சட்டைதான் அணியவேண்டும்.

தமிழக கம்யூனிஸ கட்சிக்கூட்டங்களில் லெனின்,
ஸ்டாலின் படங்களுக்குப் பதிலாக சிங்காரவேலர், ஜீவா படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.

கொக்ககோலா, பெப்சி போன்ற நிறுவனங்கள் மகுடேஸ்வரனிடம் கேட்டு உரிய தமிழ் பெயரைச் சூட்டிக் கொண்டாகவேண்டும் (அதற்கு முன்னால் மகுடேஸ்வரன் ஒரு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டிக் கொண்டாகவேண்டும்).

பிரபாகரன் பெயரை இனிமேல் கதிரொளியன் என்றே சொல்லவேண்டும்.

சன் குழுமம் தன் பெயரை கதிரவன் குழுமம் என்று பெயர் மாற்றியாகவேண்டும்.

ஸ்டாலின் தனது பெயரை இளைய கருணைச் செல்வம் என்று பெயர்சூட்டிக் கொண்டாகவேண்டும் (இல்லைன்னா மூஞ்சிலயே தார் பூசப்படும்).

உதய சூரியன் என்ற கட்சிப் பெயரை எழு ஞாயிறு என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஷா நவாஸ், ஹமீது, அமீர் போன்ற வந்தேறிப் பெயருடைய அனைத்து இஸ்லாமியரும் தமது தந்தையரின் அழகிய இந்துத் தமிழ் பெயருடன் தமது பெயரை இணைத்துச் சொல்லவேண்டும். கருணாநிதியின் பெயரைக் கூட முத்து வேலர் மகன் என்று மாற்றிக்கொள்ளலாம்.

கமல ஹாசன் தனது பெயரை தாமரை அழகன் என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.

செபாஸ்டியன் தன் பெயரை மலையாளத்தான் என்று மாற்றிக்கொள்ளலாம்.

எஸ்.ரா. சற்குணம் தன் பெயரை நற் குணம் என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.

சகாயம் தன் பெயரை உதவி என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.

கர்த்தர் பெயரை படைத்தவன் என்றும் மணிப்பிரவாள பைபிளில் பாதியையும் மாற்றியாகவேண்டும்.

கண்ணுங்களா…
போலி தமிழ் பற்றை லெஃப்ட்ல வெச்சுக்கோ…
ரைட்ல வெச்சுக்கோ…
சம்ஸ்கிருதத்துக்குக் கிட்ட ஸ்ட்ரெய்ட்டா வெச்சுக்காத.
அப்படி வெச்சுக்கிட்டா மொதல்ல உடையப் போறது உங்க மண்டைதான்.
ஏன்னா சம்ஸ்கிருதம் மேல எறியற ஒவ்வொரு கல்லும் தமிழ் மேலயும்தான் விழும்.

ஒன்றின் மீதான வெறுப்பு இன்னொன்றின் மீதான பற்றாக ஆகவே முடியாது.

சம்ஸ்கிருதமும் தமிழும் அப்பா அம்மா மாதிரி.
கிறிஸ்தவ ஆங்கிலமும் இஸ்லாமிய அரபியும் விருந்தாளிகள் மாதிரி.

நாங்கள் மட்டுமல்ல நீங்களுமே உங்கள் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்தான்.

உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள்.
துணிந்து சொல்லுங்கள்.

  • பி.ஆர்.மகாதேவன்