
ஊரடங்கால் இந்தியா சாதித்தது என்ன? ஒரு எளிய கணக்கு.
எண்கள் சுலபமாக புரிந்து கொள்ள வேண்டி ,அருகில் உள்ள பெரிய எண்ணால் குறிக்கிறேன்.
இன்று உலக மக்கள் தொகை 760 கோடி. அதில் சைனா மக்கள் தொகை 140 கோடி. (உலக மக்கள் தொகையில் 18%) இந்தியா 135 கோடி. (18%) மீதி அனைத்து நாடுகளும் சேர்ந்து 485 கோடி. (64%).
கொரோனா பாதிப்பு குறித்து சைனா கொடுத்த நம்ப முடியாத கணக்கை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு இந்தியா vs (Rest of world. )மீதி உள்ள உலக நாடுகள் என்று பார்க்கலாம்.
மீத உலக நாடுகளின் கொரோனா பாதிப்பு 40 லட்சம். மரணம் 2.75 லடசம். அதாவது ஒரு கோடி பேரில் 8000 பேர் பாதிப்பு. 570 பேர் மரணம்.
ஆனால்
இந்தியாவில் ஒரு கோடி பேரில் 466 பேர் பாதிப்பு. ஒரு கோடி பேரில் 16 பேர் மரணம்.
இதே உலக சராசரியை இந்தியாவுக்கு apply செய்தால் இன்று பத்து லக்ஷம் பேர் பாதிக்கப்பட்டு 8000 பேர் மரணம் அடைந்திருப்பார்கள்.
ஆனால் இந்தியாவின் மக்கள் பரவல் (population density) ஐ வைத்துப் பார்த்தால் ஒரு கோடிப் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு ,சில லக்ஷம் பேர் மரணம் அடைந்திருப்பார்கள்.
இந்திய விகிதத்தை வளர்ந்த நாடுகளின் நிலையை வைத்துப் பார்ப்போம்.
6.6 கோடி மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் 2.5 லக்ஷம் பேர் பாதிப்பு. 2லக்ஷத்து15ஆயிரம் பேர் மரணம். ஒரு கோடி மக்கள் தொகைக்கு 4800 பேர் பாதிப்பு. 400 பேர் மரணம்.
வெள்ளைக்காரர்கள் வந்துதான் நமக்கு அறிவே வந்தது என்று உருட்டுபவர்களைக் கேளுங்கள் ஏன் இங்கிலாந்தில் இத்தனை பாதிப்பு? என்று.
33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 13 லக்ஷத்து 40 ஆயிரம் பேர் பாதித்து 80,000 பேர் மரணம். அதாவது கோடியில் 2425 பேர் பாதித்து 335 பேர் மரணம். அமெரிக்காவின் விஞ்ஞான, மருத்துவ வசதி எங்கே? இந்தியா எங்கே?
இருந்தும் நமக்கு பாதிப்பு மிக மிக் குறைவு
இத்தனைக்கும் பொருளாதார மேதைகளை உருவாக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும், ரகுராம் ராஜன் , அபிஜித் பானர்ஜி , அமார்த்யா சென் போன்ற பொருளாதார மேதைகளும் வாழும் பூமி அமெரிக்கா. அந்த மேதைகள் அங்கே தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளை இங்கே கொண்டு வந்து உருட்டுகிறார்கள்.
சரியான நேரத்தில் இந்திய அரசு எடுத்த சரியான முடிவு ஊரடங்கு.
நாம் அனைவரும் இணைந்து பல லக்ஷம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். இது பெரும் புண்ணியம். அந்த உயிர்கள் போயிருந்தால் எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்பக் கிடைக்குமா?
இப்போது எப்படி டெஸ்ட் செய்ய வேண்டும்? என்ன மருந்து கொடுக்க வேண்டும்? எனபது புரிந்து விட்டது. மருத்துவமனைகள் , மருத்துவர்கள் எல்லோரும் தயார் நிலையில்.
போர் தீவிரமடைந்து வருகிறது. ஆனால் இப்போது நமக்கு எதிரியைப் பற்றி நன்றாக தெரிந்து விட்டது. நம்மிடம் தேவையான ஆயுதங்கள் சேர்ந்து விட்டது. எதிரியின் போர்க்களமாக இருந்தை கொரில்லா முறையில் பதுங்கி, எதிரியை நமது போர்க்களத்துக்கு அழைத்து வந்து விட்டோம்.
பணமதிப்பிழப்பு சமயத்தில் அப்பத்தா படத்தைப் போட்டு உருட்டிய பொருளாதார மேதைகள் வாயடைத்து நிற்கிறார்கள்.
@ Sankar Narayanan | சங்கரநாராயணன்