spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஉடன் இருப்பவர்கள் இந்தியர்கள்தானே! துளிக்கூடவா தேசபக்தி இருக்காது..!?

உடன் இருப்பவர்கள் இந்தியர்கள்தானே! துளிக்கூடவா தேசபக்தி இருக்காது..!?

- Advertisement -
congress vert

UPA அரசாங்கம் தொடர்ந்து 10 வருடங்கள் இந்த தேசத்திற்கு இழைத்த சேதாரம் ஆழம் காண முடியாதது. இந்த சேதம் வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதோ, கலாசாரம் சம்பந்தப்பட்டதோ, தேசத்தின் முன்னேற்றம் சம்பந்தப்பட்டதோ மட்டுமல்ல. இவர்கள் இழைத்த துரோகம் நம் தேசத்தின் உள்நாட்டு, வெளியுறவு பாதுகாப்பையே தகர்க்கக் கூடியதாக உள்ளது.

நம்முடைய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. தேசத்தின் எல்லையில் உட்கட்டமைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது, பாகிஸ்தானுக்கு சியாச்சென் க்ளேஷியரையே தானம் கொடுக்க முடிவெடுத்துள்ளனர். பாகிஸ்தானிய தீவிரவாதக் குழுக்களை நாட்டிற்குள் விட்டு, ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டு வைக்க ஏற்பாடு நடத்தி, அந்தப் பழியை ஹிந்துக்களின் மேல் போட்டு “ஹிந்து தீவிரவாதம்” என்னும் சொல்லை வெளிக் கொணர்ந்தார்கள் என்றால் இந்தக் கூட்டத்திற்கு ஒரு துளியாவது தேசபக்தி இருக்குமா என்பது பெரிய கேள்வியாகவே இருக்கிறது. அப்படியிருக்க இத்தாலிய ராணி ஆண்டோனியாவிடம் பாரதத்தின் மேல் எந்த பக்தியை எதிர்பார்க்க முடியும்..?

இந்த UPA அரசாங்கம் ஒரே சாதனை மத்திய அரசாங்கத்தின் புலனாய்வு ஏஜென்ஸிகளான CBI, IB, NIA etc போன்றவைகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிலும் பொறாமையிலும் ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்திக் கொண்டு,சண்டையிட்டுக் கொண்டு, பேதத்தை வளர்த்துக் கொண்டது மட்டும்தான். அதன்மூலம்.. விசாரணையைத் தாமதப்படுத்தி, விஷயத்தை திசை திருப்பி, தீவிரவாத, கிரிமினல் நிதிசார்ந்த ப்ராடுத்தனங்களை நீர்த்துப் போகச் செய்தது மட்டும்தான்.

இனிமேல் இவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறையிலும் மேல்மட்டத்தில் பரவியிருந்த ஊழல்களைப் பற்றி பேச வேண்டியதே இல்லை. ஏனெனில் டெலிகாம், ஏர்லைன், நிலக்கரி, லேண்ட், மினரல்ஸ், உட்கட்டமைப்பு, பவர், ஸ்போர்ஃட்ஸ் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அந்த ஊழல்கள் அனைத்துமே நாம் காண்பது வெறும் “டிப் ஆஃப் த ஜஸ்பர்க்” மட்டுமே. இந்த அரசு 10 வருடஆட்சியில், லஞ்சம் பெறுவதற்காக அனைத்துப் பொது நிறுவனங்களையும் முறையாக அழித்துள்ளார்கள்.

ஏர் இண்டியா இன்று ஒரு லாபகரமான ஏர்லைன்ஸ் ஆக இருந்திருக்க வேண்டியது. ஆனால், காலை வேளைகளிலும் மாலை வேளைகளிலும் உள்ள பிரதான நேரங்களை பிரைவேட் ஏர்லைன்களுக்கு விற்றுவிட்டு கூட்டமில்லாத பட்டப்பகலில் அல்லது நடு இரவு ஸ்லாட்கள் மட்டுமே ஏர் இண்டியாவிற்கு வழங்கப்பட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இப்போது தெரிய வந்திருப்பது மேலும் மேலும் நமக்கு அதிர்ச்சியை மட்டுமே ஏற்படுத்துகிறது. சீன அரசாங்கமும், கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் சைனாவும் ராஜீவ் காந்தி பௌண்டேஷனுக்குப் பணத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளனர். பதிலுக்கு இவர்கள் அவர்களின் பொருளாதார ஆய்வுகளையும் பாலிஸிகளையும் வெளியிட்டு அதன்மூலம், இங்குள்ளவர்களை சைனாவிற்கு ஆதரவாக தூண்டிவிட்டு, அவர்களின் பொருட்கள் வெள்ளமென இந்திய மார்க்கெட்டை ஆக்ரமிக்க ஆதரவளித்தனர். முறைப்படி, ஸிஸ்டமாடிக்காக காங்கிரஸின் கொள்கைகள் நம்முடைய உள்ளூர் மார்க்கெட்டை அழித்து ஒழித்தது. ப்ரீ டிரேட் என்கிற பெயரில் சீனப் பொருட்களை ஊக்குவித்து, இங்கிருந்த MSME தயாரிப்பு யூனிட்களை முழுமையாக காலி செய்தார்கள்.

டோக்லாமிலும், தற்போது கல்வானிலும் காங்கிரஸின் நிலைபாடு என்ன என்பது நம் எல்லோருக்குமே தெரியும். முழுக்க முழுக்க தேச விரோத கொள்கைகள் மட்டுமே. அதனைத் திரும்பத் திரும்பப் பேசுவது வேஸ்ட்.

துளிக்கூட மிகைப்படுத்துதல் இல்லாமல்சொல்வது என்றால், இவர்களின் ராஜ வம்சத்தின் மூலமாக, நம்முடைய தேசத்தை துளித் துளியாக அயலார்களுக்கு விற்பனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இன்னமும் இரண்டுமுறை அவர்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் தங்களின் பணப் பசிக்காகவும், பவர் ஆசைக்காகவும் இந்தியாவை முழுமையாக சீனாவிடமும், பாகிஸ்தானிடமும் விற்றிருப்பார்கள்.

இப்போதும் சொல்கிறேன்… ஆண்டோனியா மெய்னோ வெளி நாட்டவள். அவளுடைய வாரிசுகளும் அப்படிப்பட்டவர்களே. ஆகவே அவர்களிடம் நம் நாட்டின்மேல் தேசபக்தியை எதிர்பார்ப்பவன் முட்டாள். ஆனால் அவர்களுடைய ஆட்சியில் இருந்த நம்ம ஊர் ப.சிதம்பரம், மன்மோஹன்சிங், ஆனந்த சர்மா, திக்விஜய்சிங், சசிதரூர், அபிஷேக் மனுசிங்வி, கபில்சிபில் மற்றும் பலரும் இந்தியர்கள் தானே..? அட துளிகூடவா தேசபக்தி என்பது அவர்களுக்கு இருக்காது..? அவர்களுக்கும் அவர்கள் செய்த ஊழல்களுக்கும் சத்தியமாக மன்னிப்பே கிடையாது.

  • எஸ்.பிரேமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe