spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇடஒதுக்கீடு அரசியல்! ‘அது’ இல்லியா? இல்லன்னா... இல்லாத மாதிரி நடிக்கிறாங்களா?!

இடஒதுக்கீடு அரசியல்! ‘அது’ இல்லியா? இல்லன்னா… இல்லாத மாதிரி நடிக்கிறாங்களா?!

- Advertisement -
dmk-stalin-on-obc-reservation
dmk stalin on obc reservation

Utter foolish propaganda from DMK and Ravikumar. SC ஒதுக்கீட்டில் 18% தராமல் 15% தருவது அநீதியாம். இந்திய மக்கள் தொகையில் 15% SC, அது தான் All India quotaவில் தரப்படுகிறது என்ற basic புரிதல் கூட இல்லையா? இல்லாத மக்குகளை போல நடிக்கிறார்களா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார் புதியதமிழகம்  கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் முதல்வர் டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி …

எப்போதெல்லாம் திமுக சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறதோ அல்லது திமுகவினர் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் அப்போதெல்லாம் ஏதாவது திசை திருப்பும் அரசியல் வேலையை திமுகவும் திமுகவின் கைக்கூலிகளான ஊடகக் கூட்டத்தினரும் செய்வது வழக்கம்! இப்போதும் திமுகவுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் வேலையை திமுக வழக்கம்போல் செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் இல்லாத இட ஒதுக்கீடு சிக்கல் இருப்பதுபோல் காட்டி, சிக்கலை முடிச்சவிக்கித் தனம் செய்வது!

திமுகவின் இட ஒதுக்கீட்டு திசைதிருப்பல் அரசியலுக்கு அறிவுள்ள  அறிஞர்கள் பதில் கொடுத்து வருகிறார்கள். மு க ஸ்டாலினின் முட்டாள் தன அரசியலுக்கு சிகரம் வைத்தது போல முட்டாள்தனமான பிரச்சாரம் என்று அடிக்கோடிட்டு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் டாக்டர் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் மாலன் இந்த இட ஒதுக்கீட்டு அரசியல் குறித்து குறிப்பிட்டுள்ள கருத்து இது…

புரட்டு //இந்து விரோதி பிஜேபி

இந்துகளில் தேசிய அளவில் 52 சதவீதமும் மாநில அளவில் ஏறக்குறைய 70 சதவீதமும் உள்ள பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டைப் பிஜேபி பறித்துள்ளது.

ஆனால் உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறது//

-ஜோதிமணி  நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்)

இது அண்மையில் (18 ஜூலை) ஜோதிமணி அவர்கள் தனது முகநூல் பதிவில் எழுதியது. பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை பாஜக பறித்துவிட்டது போல திமுக எம்.பி. ரவிக்குமாரும் எழுதியிருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ்  கருப்பையா இதே கருத்தை ஏளனத் தொனியில் வெளிப்படுத்தும் மீம்ஸ் ஒன்றைத் தன் பதிப்பில் வெளியிட்டிருந்தார். இவையெல்லாம் ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை இந்தக் கட்சிகள் ஒருங்கிணைந்து கையில் எடுத்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

உண்மை என்ன?

1.உச்சநீதிமன்ற ஆணையின் காரணமாக 1986 முதல் அகில இந்திய கோட்டாவில் (AIQ) இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை..

கவனிக்க 1986ல் ஆட்சியில் இருந்தது  காங்கிரஸ். 31 அக்டோபர் 1984 முதல் 2 டிசம்பர் 1989வரை நாட்டை ஆண்டது ஜோதிமணியின் அபிமான தலைவர் ராகுல் காந்தியின் அப்பா ராஜீவ் காந்தி. அப்போது ஜோதிமணியின் முன்னாள் தலைவர் ப.சிதம்பரம் இணையமைச்சராக இருந்தார்.

தோதிமணியின் கூற்றுக்களின்படியே பார்த்தால் தேசிய அளவில் 52 சதவீதம் உள்ள OBCக்களின் இட ஒதுக்கீட்டை மட்டுமல்ல, எஸ்.சி/எஸ்.டிக்களின் இட ஒதுக்கீட்டையும் பறித்த ‘இந்து விரோத’ கட்சி காங்கிரஸ்தான்.

அப்போது திமுகவோ, கம்யூனிஸ்ட்களோ இதைக் குறித்துக் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை

2.பத்தாண்டுகளுக்குப் பிறகு, எஸ்.சி,எஸ்.டி களுக்கு இட துக்கீடு செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.அப்போது ஜோதிமணியின் முன்னாள் தலைவர் ப.சிதம்பரம்  (ஆம் அப்போது காங்கிரசிலிருந்து விலகி தமாகா வின் பிரதிநிதியாக, காங்கிரசிற்கு எதிரான அணியின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்)  திமுகவின் முரசொலி மாறன், தமிழ்நாட்டைச் சேர்ந்த தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், டி.ஆர்.பாலு, என்.வி. என் சோமு ஆகியோரும் அமைச்சரவையில் இருந்தனர். ஆனால் அவர்கள் அப்போது OBCக்க் இட ஒதுக்கீடு கோரி அழுத்தம் கொடுக்கவில்லை

3. 2015ஆம் ஆண்டு OBCகளுக்கும் இடஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிலுவையில் இருக்கிறது.

4. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு விஷயத்தில் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. எடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?

1. மத்தியக் கல்வி நிறுவனங்களில் OBC இடஒதுக்கீட்டிற்கு வகை செய்துள்ளது

2. உச்சநீதிமன்றத்தின் முன் ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்த முடிவை உச்ச நீதிமன்றம்தான் எடுக்க வேண்டும்

//உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறது// என்கிறார் ஜோதிமணி.  ஆனால் அவரின் கட்சி அதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்திருக்கிறது. அந்த இட ஒதுக்கீடு தவறு என்று அந்தக் கட்சிக் கருதியிருக்குமேயானால் அதற்கு ஆதரவாக ஏன் அவரது கட்சி வாக்களித்தது? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதற்கு ஆதரவாக வாக்களித்தது என்பது கவனிக்கத் தக்கது

இன்னொன்று: அது “உயர் சாதி”யினருக்கான இட ஒதுக்கீடு அல்ல. அது பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான இட ஒதுக்கீடு. அதன் மூலம் ஏழை இஸ்லாமிய கிறிஸ்துவ சகோதரர்களும் பலன் பெறுவர்.

OBC இடஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் செய்தது என்ன?

மண்டல் கமிஷனை அமைத்தது யார்? காங்கிரஸ் அரசா? அல்ல. அது மொரார்ஜி தேசாய் தலைமையிலானா ஜனதா கட்சி அரசு.  (இந்த அரசில் இன்றைய பாரதிய ஜனதாவின் முன்னாள் வடிவமான ஜனசங்கம் இடம் பெற்றிருந்தது)

அது  எப்போது அறிக்கை கொடுத்தது? 1983ல்.

அதை அமல்படுத்தியது யார்? அறிக்கை அளிக்கப்பட்ட பின் காங்கிரஸ் ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தது. ஆனால் அது அமல்படுத்தவில்லை. அதை 1990ல்  அமல்படுத்தியது வி.பி.சிங். அரசு

மண்டல் கமிஷன் பரிந்துரைத்த இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தீக்குளிக்க முயன்ற  ராஜிவ் கோஸ்வாமி எந்தக் கட்சியின் அமைப்பைச் சேர்ந்தவர்?

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUIஐச் சேர்ந்தவர். அந்த அமைப்பினால் தில்லிப் பல்கலைக்கழக மாணவர் யூனியன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டவர்.

OBC இடஒதுக்கீட்டைப் பற்றி காங்கிரஸ் பேசலாமா? – என்று மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe