spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஅட வெங்காயம்... வாய் பேசுது... மூளை இல்லைன்னு தெரியுதே!மௌனம் பேசி... காக்க காக்க!

அட வெங்காயம்… வாய் பேசுது… மூளை இல்லைன்னு தெரியுதே!மௌனம் பேசி… காக்க காக்க!

- Advertisement -

கடந்த 2019 ஜூலை மாதத்தில் இதே போல் புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு விவாதத்துக்கு வந்த போது, சூர்யாவின் பத்து கேள்விகள் என்று வலைதளத்தில் ஒரு செய்தி சுற்றி வந்தது. இதற்கு அப்போதே ஆய்வறிஞர்கள் சிலர் தங்கள் பதில்களை வெளியிட்டு வந்தனர். அவையும் சமூகத் தளங்களில் சுற்றிச் சுற்றி வந்தன.

இந்த நிலையில், தற்பொது, புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு வெளியாகி, அது மத்திய அமைச்சரவையிலும் ஒப்புதல் பெறப் பட்டுள்ளதால், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினர் அதனை எதிர்ப்பதில் முனைப்பாக இருந்து வருகின்றனர். எனவே மீண்டும் ஊடகங்களில் இந்த பத்து கேள்விகளை சுற்றோ சுற்று என்று சுற்ற விட்டு வருகின்றனர். சூர்யா வெளியிட்டதாகக் கூறப் படும் இந்தக் கேள்விகள் சூரியாவே சுயமாக சிந்தித்து வெளியிட்டிருப்பார் என்றால் அவருக்கான நம் பதில்கள் இப்படி இருக்கும்… இல்லாவிடில், இதனைக் கடந்து போய் விடலாம்!

முதலில் அந்த பத்துக் கேள்விகளைப் பார்க்கலாம். பிறகு என் பாணியிலான பதில்கள்….

கேள்வி 1: முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வி கொள்கையில் அவசரம் ஏன்?

கேள்வி 2: மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?

கேள்வி 3: நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்பட இருக்கிறதே அதற்கு பதில் என்ன?

கேள்வி 4: கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை தேர்வுகளே இல்லை. ஆனால் இங்கு 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நியாயமா?

கேள்வி 5: மாணவர்கள் நுழைவுத்தேர்வு தகுதித்தேர்வு என்றே எழுதிக்கொண்டிருந்தால் அவர்கள் எப்போது தான் வாழ்க்கையை கற்றுக்கொள்வது?

கேள்வி 6: 180000 அரசு மாணவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களில் ஒரு மாணவர்தான் தேர்ச்சி .

கேள்வி 7: 50000 கல்லூரிகள் 12000 ஆயிரமாக குறைக்கப்படுவதும் கோச்சிங் சென்டர் அதிகமாவதும் தான் புதிய கொள்கையா ?

கேள்வி 8: 80 லட்சம் ஆசிரியர்கள் கொண்ட இந்தியாவில் ஒரு ஆசிரியர் அமைப்பும், ஒரு மாணவர் அமைப்பும் கல்வி கொள்கையை தீர்மானிப்பது எப்படி?

கேள்வி 9: விதவிதமான கல்வி முறைகளை வைத்துக்கொண்டு, தேர்வு மட்டும் ஒன்று என்றால் எப்படி?

கேள்வி 10: எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் இன்னும் விழிப்படையாமல் இருப்பது ஏன்?

வெளங்காத வெண்ண, வாய் இருக்குதுங்கறதனால என்ன வேணா பேசுவியா?

1. ஒரு அறிஞர் குழு, உண்மையிேலயே அறிஞர்களடங்கிய அறிஞர் குழு அமைத்து, அவர்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்று, அதை வரைவு திட்டமாக்கி, இணையத்துல போட்டு, யாரு வேணாலும் கருத்து, மாறுதல், ஆட்சேபணை தெரிவிக்கலாம்ன்னு சொல்லி, ஒருவருஷமா காத்திருந்து, சுமார் 2 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டு, அவையனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, சட்டமுன்வரைவில் தக்க மாறுதல்கள் செய்யப்பட்டு, அமைச்சரவைக் குழுவில் விவாதிக்கப்பட்டு, அதன் பின் வெளியிடப்பட்டதை ஏன் இத்தனை அவசரம் என்று கேட்பதற்கு எவ்ளோ மண்ணாந்தையா இருக்கணுமின்னு யாராவது கேட்டுற போறாங்க.

2. மூணு வயசு குழந்தை 3 மொழி படிக்கணுமின்னு 83 பக்கத்துல ஒரே ஒரு எடத்தை காமி, இல்லேன்னா, இப்படி ஒரு அபாண்ட பழி சுமத்தினதுக்கு எல்லார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேள்.

3. ஒழுங்கா சொல்லித் தரலேன்னா, தரமில்லைன்னா, மூடப்படுவதில் தவறில்லை. அதே சமயத்தில் எத்தனை ஆயிரம் புதிய கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட போகின்றன என்ற தகவலை வரைவுத் திட்டத்துல படிக்கலியா, இல்லே படிக்க தெரியவில்லையா, அல்லது தெரிந்தே தவறான தகவலை பொது வெளியில் பரப்பும் சதித் திட்டமா? சொல், மடையனே.

4. இந்தியாவ பிற நாடுகளுடன் ஒப்பிடுவதே தவறு, ஒப்பிட்டால் எல்லா சமூக, பொருளாதார, கல்வி நிலை, உள்கட்டமைப்பு, கல்வித்தரம், அதற்கும் மேலாக, கல்விக் கொள்கையைப் பற்றி பேசுபவர்களின் அறிவு நிலை, கல்வித்தரத்தையும் சேர்த்து தான் ஒப்பிடணும். அதாவது, மூடிகினு போ அப்பாலே.

5. கல்வி நிலையத்தில் பயிற்சி என்பதே வாழ்க்கைக் கல்வியின் ஆதாரம், முதல் படி என்பது கூட தெரியாத தற்குறியா நீ? வாழ்க்கையின் கடைசி கணம் வரை அனைவரும் மாணவர்களே என்பது கூட தெரியாமல் கருத்து கேசத்தை கோதவேண்டாம். நல்லா ஏதாவது வாயில வந்திட போகுது.

6. முட்டாளே, முட்டாளே, இந்தப் பிரச்சனையையும் தீர்க்கறதுக்கு தான் புதிய கல்விக் கொள்கை. ஏற்கனவே இருக்கும் தரம், உள்கட்டமைப்பு, பாடம், ஆகியனவற்றின் பிழைதான் Neetல் குறைந்த அளவு ரிஸல்ட். அதை எப்படி புதிய கொள்கையின் பிழையாக பார்ப்பே? லாஜிக்கே தப்பு. உன்னிடமும் அடிப்படையிலேயே புரிந்து கொள்ளும் திறன் குறை உள்ளது. ஆளும் வளரலே, அறிவும் வளரலே, வந்துட்டான் கருத்து சொல்ல.

7. முழுசாபடி. புதுசா எத்தனை, எங்கெங்கே, எப்படியான கல்வி நிலையங்கள் திறக்கப்பட போகின்றன, ஏற்கனவே இருக்கும் கல்வி நிலையங்களின் மறுகட்டமைப்புன்னா என்னான்னு தெரிஞ்சிக்கோ, தெரியலேன்னா, தெரிந்தவங்களிடம் போய் கத்துக்கோ, அதுக்கும் துப்பில்லேன்னா, வாய மூடு. சும்மா கதை விட்டு, மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதுதான் உனது எண்ணம் என்றால், ஜாக்கிரதை, பேசிய வார்த்தைகள் உனது எஜமான். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கணும்.

8. ஒண்ணு கல்விக் கொள்கையை கல்வியாளரா பேசு, அல்லது அதை வைத்து அரசியல் பேசு. ரெண்டும்கெட்டானா பேசினா அவமானம் தான் மிஞ்சும். ஒரே ஒரு ஆசிரியர் அமைப்பும், ஒரே ஒரு மாணவர் அமைப்பும் கல்விக் கொள்கையை நிர்ணயித்ததுன்னு எங்க கண்டுபுடிச்ச? ஆதாரம் காமி, இல்லேன்னா, கல்விக் கொள்கையை வரைவு செய்த நிபுணர் குழு உறுப்பினர்கள், அதற்கு 2 லட்சம் கருத்து தெரிவித்தவர்கள், சரி பார்த்த அதிகாரிகள், விவாதித்து அனுமதித்த அமைச்சர்கள் அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேள். போன்றஒரு இடத்தை காமி.

9. விதவிதமான கல்வி முறைகளுக்கேற்ற தேர்வுன்னு தான் சொல்லியிருக்குது. இதுல உனக்கென்ன பிரச்சனை? இதற்கு மாற்று ஏதாவது உலகில் எங்காவது இருக்குதா? ஒண்ணு மாற்று சொல்லு, இல்லேனா …… இரு.

10. இது தான் உன்னுடைய ஒரிஜினல் திட்டம். மக்களை, மாணவர்களை, இளைஞர்களை ஏதாவது சொல்லி தூண்டிவிடணும்.

#அவ்ளோ_சீக்கிரம்_உருப்பட_விட்ருவோமா #போயி_வேறவேலைய_பாருங்கடே

  • மு.ராம்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe